Sunday, June 26, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - எந்நேரமும் உன் நாம - ராகம் பூர்வி கல்யாணி - Enneramum Un Nama - Raga Purvi Kalyani - Tamil Kriti

பல்லவி
எந்நேரமும் உன் நாம(மு)ரைப்பதே
என் நேமம் அன்னையே

அனுபல்லவி
புன்னகையுடன் கண்-பார்த்(தெ)ன்னை எப்போதும்
மன்னிப்பதும் நீயே என் தாயே (எந்நேரமும்)

சரணம்
சரணம் 1
ஏ(ன)ம்மா தாமத(மே)(ன)ம்மா
என்னை ரக்ஷிக்க உனக்கு பாரமா
உன் நினைவே என் நேம(ம)ல்லவோ
உ(ன்னு)ள்ளம் கரையவும் நான் சொல்லவோ (எந்நேரமும்)


சரணம் 2
அன்புடன் உன்னை நான் அடைக்கல(ம)டைந்தேன்
அகி2(லா)ண்(டே3)ஸ்1வரீ அபி4ராம சுந்தரீ
அனைத்து(ம)றிந்த ஆதி சக்தி நீயே
அரவணைத்(தெ)ன்னை ஆதரி ஸ்1யாம க்ரு2ஷ்ண சோதரீ (எந்நேரமும்)


பொருள் - சுருக்கம்
  • அன்னையே!
  • என் தாயே!
  • அகிலாண்டேசுவரீ! அபிராம சுந்தரீ! சியாம கிருஷ்ணனின் சோதரீ!

  • எந்நேரமும் உன் நாமம் உரைப்பதே என் நேமம்.

    • புன்னகையுடன் கண்-பார்த்து என்னை எப்போதும் மன்னிப்பதும் நீயே.

    • ஏனம்மா? தாமதம் ஏனம்மா?
    • என்னை ரக்ஷிக்க உனக்கு பாரமா?
    • உன் நினைவே என் நேமம் அல்லவோ?
    • உன்னுள்ளம் கரையவும் நான் சொல்லவோ?

    • அன்புடன் உன்னை நான் அடைக்கலம் அடைந்தேன்.
    • அனைத்தும் அறிந்த ஆதி சக்தி நீயே.
    • அரவணைத்து என்னை ஆதரி.


  • எந்நேரமும் உன் நாமம் உரைப்பதே என் நேமம்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எந்நேரமும் உன் நாமம்-உரைப்பதே

என் நேமம் அன்னையே


அனுபல்லவி
புன்னகையுடன் கண்-பார்த்து-என்னை எப்போதும்

மன்னிப்பதும் நீயே என் தாயே (எந்நேரமும்)


சரணம்
சரணம் 1
ஏன்-அம்மா தாமதம்-ஏன்-அம்மா

என்னை ரக்ஷிக்க உனக்கு பாரமா

உன்-நினைவே என்-நேமம்-அல்லவோ

உன்-உள்ளம் கரையவும் நான் சொல்லவோ (எந்நேரமும்)


சரணம் 2
அன்புடன் உன்னை நான் அடைக்கலம்-அடைந்தேன்

அகி2ல-அண்ட-ஈஸ்1வரீ/ அபி4ராம/ சுந்தரீ/
அகிலாண்டேசுவரீ/ அபிராம/ சுந்தரீ/

அனைத்தும்/-அறிந்த/ ஆதி/ ஸ1க்தி/ நீயே/
அனைத்தும்/-அறிந்த/ ஆதி/ சக்தி/ நீயே/

அரவணைத்து/-என்னை/ ஆதரி/ ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ சோதரீ/ (எந்நேரமும்)
அரவணைத்து/-என்னை/ ஆதரி/ சியாம/ கிருஷ்ணனின்/ சோதரீ/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
அகிலாண்டேசுவரி - திருவானைக்காவில் அம்மையின் பெயர்
Top


Updated on 26 Jun 2011

No comments:

Post a Comment