Tuesday, June 14, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ஸரோஜ த3ள நேத்ரி - ராகம் சங்கராபரணம் - Saroja Dala Netri - Raga Sankarabharanam

பல்லவி
ஸரோஜ த3ள நேத்ரி ஹிம கி3ரி புத்ரீ
நீ 1ப(தா3)ம்பு3ஜமுலே
ஸதா3 நம்மினா(ன)ம்மா ஸு14(மி)ம்மா
ஸ்ரீ மீனா(க்ஷ)ம்மா

அனுபல்லவி
பாராகு ஸேயக வர தா3யகீ நீ
வலே தை3வமு லோகமுலோ க3லதா3
புராணீ ஸு1க பாணீ மது4கர வேணீ
ஸதா3-ஸி1வுனிகி ராணீ (ஸரோஜ)

சரணம்
சரணம் 1
கோரி வச்சின வாரி(கெ)ல்லனு
கோர்கெ(லொ)ஸகே3 பி3ருது33தா3 அதி
பா4ரமா நன்னு ப்3ரோவ தல்லி
க்ரு2(பா)லவால தாள ஜாலனே (ஸரோஜ)


சரணம் 2
இந்து3 முகீ2 2கருணிஞ்சு(ம)னி 3நினு
எந்தோ
வேடு3கொண்டினி
நா(ய)ந்து3 ஜா(கே3)ல(ன)ம்மா மரியாத3
கா3து3 43யாவதி நீவு (ஸரோஜ)


சரணம் 3
ஸாம கா3ன வினோதி3னீ கு3
தா4ம ஸ்1யாம க்ரு2ஷ்ண நுதா ஸு1
ஸ்1யாமளா தே3வீ நீவே க3தி 5ரதி
காம காம்யத3
காவவே நன்னு (ஸரோஜ


பொருள் - சுருக்கம்
  • தாமரையிதழ்க் கண்ணீ! பனிமலை மகளே! ஸ்ரீ மீனாட்சி அம்மா!
  • வரமருள்பவளே! பழம்பொருளே! கிளியேந்துபவளே! தேன்வண்டு குழலியே! சதாசிவனுக்கு ராணியே!
  • தாயே! கருணைக் கடலே!
  • மதி முகத்தினளே!
  • சாம கானத்தில் மகிழ்பவளே! பண்புகளின் உறைவிடமே! சியாம கிருஷ்ணனால் போற்றப்பெற்றவளே! கிளியேந்தும், சியாமளா தேவீ! நீயே கதி. ரதி, மன்மதனுக்கு விரும்பியதருள்பவளே!

  • உனது திருவடிக் கமலங்களே, எவ்வமயமும், நம்பினேனம்மா.
  • நலனருள்வாயம்மா.

    • பராக்கு செய்யாதே.
    • உன்னைப் போன்ற தெய்வம், உலகினில் உண்டா?

    • கோரி வந்தவர்களுக்கெல்லாம், கோரிக்கைகள் அருளும் விருது அன்றோ, உனக்கு?
    • மிக்கு பளுவா, என்னைக் காத்தல்?
    • தாள இயலேனம்மா.

    • கருணை புரிவாயென, உன்னை எவ்வளவோ வேண்டிக் கொண்டேன்.
    • என்னிடம் தந்திரங்களேனம்மா?
    • மரியாதை அன்று.
    • தயை வடிவினள் நீ.

    • காப்பாயம்மா, என்னை.


  • உனது திருவடிக் கமலங்களே, எவ்வமயமும், நம்பினேனம்மா.
  • நலனருள்வாயம்மா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸரோஜ/ த3ள/ நேத்ரி/ ஹிம/ கி3ரி/ புத்ரீ/
தாமரை/ யிதழ்/ கண்ணீ/ பனி/ மலை/ மகளே/

நீ/ பத3/-அம்பு3ஜமுலே/
உனது/ திருவடி/ கமலங்களே/

ஸதா3/ நம்மினானு/-அம்மா/ ஸு14மு/-இம்மா/
எவ்வமயமும்/ நம்பினேன்/ அம்மா/ நலன்/ அருள்வாயம்மா/

ஸ்ரீ/ மீனாக்ஷி/-அம்மா/
ஸ்ரீ/ மீனாட்சி/ அம்மா/


அனுபல்லவி
பாராகு/ ஸேயக/ வர/ தா3யகீ/ நீ/
பராக்கு/ செய்யாதே/ வரம்/ அருள்பவளே/ உன்னை/

வலே/ தை3வமு/ லோகமுலோ/ க3லதா3/
போன்ற/ தெய்வம்/ உலகினில்/ உண்டா/

புராணீ/ ஸு1க/ பாணீ/ மது4கர/ வேணீ/
பழம்பொருளே/ கிளி/ யேந்துபவளே/ தேன்வண்டு/ குழலியே/

ஸதா3-ஸி1வுனிகி/ ராணீ/ (ஸரோஜ)
சதாசிவனுக்கு/ ராணியே/


சரணம்
சரணம் 1
கோரி/ வச்சின வாரிகி/-எல்லனு/
கோரி/ வந்தவர்களுக்கு/ எல்லாம்/

கோர்கெலு/-ஒஸகே3/ பி3ருது3/ க3தா3/ அதி/
கோரிக்கைகள்/ அருளும்/ விருது/ அன்றோ (உனக்கு)/ மிக்கு/

பா4ரமா/ நன்னு/ ப்3ரோவ/ தல்லி/
பளுவா/ என்னை/ காத்தல்/ தாயே/

க்ரு2பா/-ஆலவால/ தாள/ ஜாலனே/ (ஸரோஜ)
கருணை/ கடலே/ தாள/ இயலேனம்மா/


சரணம் 2
இந்து3/ முகீ2/ கருணிஞ்சுமு/-அனி/ நினு/
மதி/ முகத்தினளே/ கருணை புரிவாய்/ என/ உன்னை/

எந்தோ/ வேடு3கொண்டினி/
எவ்வளவோ/ வேண்டிக் கொண்டேன்/

நா-அந்து3/ ஜாகு3/-ஏலனு/-அம்மா/ மரியாத3/
என்னிடம்/ தந்திரங்கள்/ ஏன்/ அம்மா/ மரியாதை/

கா3து3/ த3யாவதி/ நீவு/ (ஸரோஜ)
அன்று/ தயை வடிவினள்/ நீ/


சரணம் 3
ஸாம/ கா3ன/ வினோதி3னீ/ கு3ண/
சாம/ கானத்தில்/ மகிழ்பவளே/ பண்புகளின்/

தா4ம/ ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ நுதா/ ஸு1க/
உறைவிடமே/ சியாம/ கிருஷ்ணனால்/ போற்றப்பெற்றவளே/ கிளியேந்தும்/

ஸ்1யாமளா/ தே3வீ/ நீவே/ க3தி/ ரதி/
சியாமளா/ தேவீ! நீயே/ கதி/ ரதி/

காம/ காம்யத3/ காவவே/ நன்னு/ (ஸரோஜ)
மன்மதனுக்கு/ விரும்பியதருள்பவளே/ காப்பாயம்மா/ என்னை/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பதா3ம்பு3ஜமுலே - பாதா3ம்பு3ஜமுலே.
2 - கருணிஞ்சுமனி - கருணிஞ்சமனி.

3 - நினு எந்தோ - நின்னெந்தோ - நினுனெந்தோ : 'நினு', 'எந்தோ' என்ற இரண்டு சொற்களையும் இணைத்தால், இடையில், யகரம் வரும் (நினுயெந்தோ) - னகரம் (நினுனெந்தோ) அல்ல. எனவே 'நினுனெந்தோ' என்பது தவறாகும். 'நின்னெந்தோ' என்பது சரியாகும்.

4 - 3யாவதி நீவு - த3யாவதீ நீவு : இந்த சொற்றொடர், 'நீவு' என்பதுடன் முடிவடைவதனால், 'த3யாவதி' என்றுதான் இருக்கவேண்டும். எனவே, 'த3யாவதீ' என்பது இங்கு தவறாகும்.
5 - ரதி காம காம்யத3 - ரதி காம காம்ய : இவ்விடத்தில், 'ரதி காம காம்யத3' என்பதே மிக்குப் பொருந்தும்.
Top

மேற்கோள்கள்
5 - ரதி காம காம்யத3 - ரதி, மன்மதனுக்கு விரும்பிதருள்பவள் - சிவன், மன்மதனை, நெற்றிக் கண்ணினால் எரித்தபின், அம்பாள், அவனை (மன்மதனை) உடலின்றி, உயிர்ப்பித்தாள். எனவே, மன்மதனுக்கு, 'அனங்கன்' (உடலில்லாதவன்) என்று பெயர். 'ஸௌந்தர்ய லஹரி'யில் (6-வது செய்யுள்) கூறப்பட்டது -

"மலர் வில், தேன்வண்டு வரிசை நாண், ஐந்து அம்புகள், இளவேனில் மந்திரி, மலையமாருதம் போரிடும் தேர், என உடைத்திருந்தும், மன்மதன் ஒண்டியே. மலைமகளே! உனது கடைக் கண் பார்வையின் கருணையினால், அனைத்துலகினையும் அவன் வெல்கின்றான். "

ஸௌந்தர்ய லஹரி - 6-வது செய்யுள் விளக்கம்.
Top

விளக்கம்



Updated on 14 Jun 2011

No comments:

Post a Comment