Wednesday, June 1, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - பாலிஞ்சு காமாக்ஷீ - ராகம் மத்யமாவதி - Palinchu Kamakshi - Raga Madhyamavati

பல்லவி
பாலிஞ்சு காமாக்ஷீ பாவனீ
1பாப ஸ1மனீ அம்ப3

அனுபல்லவி
2சாலா ப3ஹு வித4முகா3 நின்னு
3ஸதா3 4வேடு3கொனேடி3 நாயந்(தே3)ல
ஈ லாகு3 ஜேஸேவு வெத
5ஹரிஞ்சவே வேக3மே நன்னு (பாலிஞ்சு)

சரணம்
சரணம் 1
ஸ்வாந்தம்பு3லோன நின்னே
63லசின 7ஸுஜனுல(கெ)ல்ல(னே) வேள
ஸந்தோஷமு(லொ)ஸகே3(வ)னி நீவு
மனோரத2 82ல தா3யினி(வ)னி
காந்தமகு3 9பேரு பொந்தி3திவி
10காருண்ய மூர்திவை ஜக3மு
காபாடி3ன தல்லி க3தா3 நேனு
நீது3 பி3ட்33னு லாலிஞ்சி (பாலிஞ்சு)


சரணம் 2
ஈ மூர்தி(யி)ந்த தேஜோ-மயமை-
(யி)டு வலெ கீர்தி விஸ்பூ2ர்தி-
(னி)ட்லனு கு3ண மூர்தி த்ரி-லோகமுலோ
ஜூசின(யெ)ந்(தை3)ன க3லதா3
ஏமோ தொலி நோமு நோசிதினோ
நீ பாத3 பத்3ம த3ர்ஸ1னமு
வேமாரு லபி4ஞ்சி க்ரு2(தா)ர்து23(னை)தி
நா மனவி(னா)லகிஞ்சி (பாலிஞ்சு)


சரணம் 3
11ரா(ஜா)தி4 ராஜன்-மகுடீ
தட மணி ராஜ பாதா3

12நே சால நிஜ 13ஸன்னிதி4னி கோரி
ஸமஸ்த ஜனுல(கெ)ல்ல வரதா3
ராஜ முகீ2 ஸ்1யாம க்ரு2ஷ்ண நுதா
காஞ்சீ பு(ரே)ஸ்1வரீ விகஸ
ராஜீவ த3(ளா)க்ஷீ ஜக3த்-ஸாக்ஷீ
ஓ ப்ரஸன்ன பரா ஸ1க்தீ (பாலிஞ்சு)


ஸ்வர ஸாஹித்ய
14கனக கி3ரி ஸத3ன லலித நினு 154ஜன
ஸந்ததமு ஸேயனி ஜடு33னு

வினுமு நிகி2ல பு4வன 16ஜனனிவி(யி)புடு3
மா து3ரிதமு தீ3ர்சி வரா(லி)ச்சி (பாலிஞ்சு)


பொருள் - சுருக்கம்
 • காமாட்சீ! தூயவளே! பாவம் களைபவளே! அம்பையே!
 • மன்னாதி மன்னர்களின், மகுடப் பரப்பின், நவமணிகளினால் ஒளிரும், திருவடியினளே! அனைத்து மக்களுக்கெல்லாம், வரமளிப்பவளே! மதி முகத்தினளே! சியாம கிருஷ்ணனால் போற்றப்பெற்றவளே! காஞ்சீபுரத் தலைவியே! அலர்ந்த, தாமரை யிதழ்க் கண்ணியே! பல்லுலக சாட்சியே! ஓ கருணைமிகு, பரா சக்தீ!
 • பொன் மலை உறையும், லலிதையே!

 • கேளாயம்மா.
 • அனைத்துலகினை ஈன்றவள் நீ.

  • மிக்கு, வெகு விதமாக, உன்னை எவ்வமயமும், வேண்டிக்கொள்ளும், என்னிடமேன் இங்ஙனம் செய்தாயம்மா?
  • துயர் தீர்ப்பாயம்மா.

   • தன்னுள், உன்னையே நினைக்கும், நன்மக்களுக்கெல்லாம், எவ்வேளையும், மகிழ்ச்சி யளிக்கின்றாயெனவும்,
   • நீ விரும்பிய பயன் அருள்பவளெனவும்,

  • காந்தம் போன்ற, பெயர் பெற்றனை.
  • கருணா மூர்த்தியாகி, உலகினைக் காப்பாற்றிய, அன்னை யன்றோ?
  • நான் உனது மகவாம்.

   • இந்த உருவம், இத்தனை ஒளிமயமாகி,
   • இத்தகைய புகழ் காட்டி,
   • இப்படிப்பட்ட பண்பு வடிவு -

  • மூவுலகிலும் காண, எங்காவது உண்டா?
  • ஏதோ, முன்னம், நோன்பு நோற்றேனோ! உனது திருவடிக் கமல தரிசனம், பன்முறை அடையப்பெற்று, பிறவிப்பயனுற்றவனானேன்.

  • நான், மிக்கு, தனியான சன்னிதியினை விழைந்தேன்.
  • உன்னை, பஜனை, எவ்வமயமும் செய்யாத, முட்டாள் நான்.

  • காப்பாய்.
  • விரைவாக, என்னைக் காப்பாய்.
  • என்னைத் தேற்றிக் காப்பாய்.
  • எனது விண்ணப்பத்தினை ஏற்றுக் காப்பாய்.
  • இப்போழ்து, எமது துயரங்களைத் தீர்த்து, வரங்கள் அளித்துக் காப்பாய்.பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பாலிஞ்சு/ காமாக்ஷீ/ பாவனீ/
காப்பாய்/ காமாட்சீ/ தூயவளே/

பாப/ ஸ1மனீ/ அம்ப3/
பாவம்/ களைபவளே/ அம்பையே/


அனுபல்லவி
சாலா/ ப3ஹு/ வித4முகா3/ நின்னு/
மிக்கு/ வெகு/ விதமாக/ உன்னை/

ஸதா3/ வேடு3கொனேடி3/ நாயந்து3/-ஏல/
எவ்வமயமும்/ வேண்டிக்கொள்ளும்/ என்னிடம்/ ஏன்/

ஈ லாகு3/ ஜேஸேவு/ வெத/
இங்ஙனம்/ செய்தாயம்மா/ துயர்/

ஹரிஞ்சவே/ வேக3மே/ நன்னு/ (பாலிஞ்சு)
தீர்ப்பாயம்மா/ விரைவாக/ என்னை/ (காப்பாய்)


சரணம்
சரணம் 1
ஸ்வாந்தம்பு3லோன/ நின்னே/
தன்னுள்/ உன்னையே/

3லசின/ ஸுஜனுலகு/-எல்லனு/-ஏ வேள/
நினைக்கும்/ நன்மக்களுக்கு/ எல்லாம்/ எவ்வேளையும்/

ஸந்தோஷமுலு/-ஒஸகே3வு/-அனி/ நீவு/
மகிழ்ச்சி/ யளிக்கின்றாய்/ எனவும்/ நீ/

மனோரத2/ ப2ல/ தா3யினிவி/-அனி/
விரும்பிய/ பயன்/ அருள்பவள்/ எனவும்/

காந்தமகு3/ பேரு/ பொந்தி3திவி/
காந்தம் போன்ற/ பெயர்/ பெற்றனை/

காருண்ய/ மூர்திவை/ ஜக3மு/
கருணா/ மூர்த்தியாகி/ உலகினை/

காபாடி3ன/ தல்லி/ க3தா3/ நேனு/
காப்பாற்றிய/ அன்னை/ யன்றோ/ நான்/

நீது3/ பி3ட்33னு/ லாலிஞ்சி/ (பாலிஞ்சு)
உனது/ மகவாம்/ (என்னை) தேற்றி/ (காப்பாய்)


சரணம் 2
ஈ/ மூர்தி/-இந்த/ தேஜோ/-மயமை/-
இந்த/ உருவம்/ இத்தனை/ ஒளி/ மயமாகி/

இடு வலெ/ கீர்தி/ விஸ்பூ2ர்தி/-
இத்தகைய/ புகழ்/ காட்டி/

இட்லனு/ கு3ண/ மூர்தி/ த்ரி-லோகமுலோ/
இப்படிப்பட்ட/ பண்பு/ வடிவு/ - மூவுலகிலும்/

ஜூசின/-எந்து3-ஐன/ க3லதா3/
காண/ எங்காவது/ உண்டா/

ஏமோ/ தொலி/ நோமு/ நோசிதினோ/
ஏதோ/ முன்னம்/ நோன்பு/ நோற்றேனோ/

நீ/ பாத3/ பத்3ம/ த3ர்ஸ1னமு/
உனது/ திருவடி/ கமல/ தரிசனம்/

வேமாரு/ லபி4ஞ்சி/ க்ரு2த-அர்து23னு/-ஐதி/
பன்முறை/ அடையப்பெற்று/ பிறவிப்பயனுற்றவன்/ ஆனேன்/

நா/ மனவினி/-ஆலகிஞ்சி/ (பாலிஞ்சு)
எனது/ விண்ணப்பத்தினை/ ஏற்று/ (காப்பாய்)


சரணம் 3
ராஜ-அதி4/ ராஜன்/-மகுடீ/
மன்னாதி/ மன்னர்களின்/ மகுட/

தட/ மணி/ ராஜ/ பாதா3/
பரப்பின்/ (நவ)மணிகளினால்/ ஒளிரும்/ திருவடியினளே/

நே/ சால/ நிஜ/ ஸன்னிதி4னி/ கோரி/
நான்/ மிக்கு/ தனியான/ சன்னிதியினை/ விழைந்தேன்/

ஸமஸ்த/ ஜனுலகு/-எல்ல/ வரதா3/
அனைத்து/ மக்களுக்கு/ எல்லாம்/ வரமளிப்பவளே/

ராஜ/ முகீ2/ ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ நுதா/
மதி/ முகத்தினளே/ சியாம/ கிருஷ்ணனால்/ போற்றப்பெற்றவளே/

காஞ்சீ/ புர/-ஈஸ்1வரீ/ விகஸ/
காஞ்சீ/ புர/ தலைவியே/ அலர்ந்த/

ராஜீவ/ த3ள/-அக்ஷீ/ ஜக3த்/-ஸாக்ஷீ/
தாமரை/ யிதழ்/ கண்ணியே/ பல்லுலக/ சாட்சியே/

ஓ/ ப்ரஸன்ன/ பரா/ ஸ1க்தீ/ (பாலிஞ்சு)
ஓ/ கருணைமிகு/ பரா/ சக்தீ/ (காப்பாய்)


ஸ்வர ஸாஹித்ய
கனக/ கி3ரி/ ஸத3ன/ லலித/ நினு/ ப4ஜன/
பொன்/ மலை/ உறையும்/ லலிதையே/ உன்னை/ பஜனை/

ஸந்ததமு/ ஸேயனி/ ஜடு33னு/
எவ்வமயமும்/ செய்யாத/ முட்டாள் நான்/

வினுமு/ நிகி2ல/ பு4வன/ ஜனனிவி/-இபுடு3/
கேளாயம்மா/ அனைத்து/ உலகினை/ ஈன்றவள் நீ/ இப்போழ்து/

மா/ து3ரிதமு/ தீ3ர்சி/ வராலு/-இச்சி/ (பாலிஞ்சு)
எமது/ துயரங்களை/ தீர்த்து/ வரங்கள்/ அளித்து/ (காப்பாய்)


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பாப ஸ1மனீ அம்ப3 - பாப ஸ1மனீ.

2 - சாலா ப3ஹு வித4முகா3 - சால ப3ஹு வித4முகா3 : எதுகை, மோனைகளை நோக்குகையில் 'சாலா' என்பது மிக்கு பொருந்துவதாகத் தோன்றுகின்றது.

3 - ஸதா3 - சாலா.

4 - வேடு3கொனேடி3 - வேடு3கொண்டி3 - வேடு3கொன்னடி : 'வேடு3கொண்டி3' என்பது தவறாகும். அதுவே, 'வேடு3கொண்டி' என்றிருந்தால் பொருந்தும்.

Top

5 - ஹரிஞ்சவே - ஹரிஞ்சி : பிற்கூறியது சரியானால், 'வெத ஹரிஞ்சி வேக3மே நன்னு' என்பது பல்லவியுடன் இணைக்கப்படும்.

6 - 3லசின - த3லசே.

7 - ஸுஜனுலகெல்லனே வேள (ஸுஜனுலகெல்லனு+ஏ வேள) - ஸுஜனுலகெல்லனீ வேள (ஸுஜனுலகெல்லனு+ஈ வேள) : இவ்விடத்தில் 'ஏ வேள' என்பது மிக்கு பொருந்தும்.

8 - 2ல தா3யினிவனி - ப2ல தா3யகியனி.

9 - பேரு பொந்தி3திவி - பேரு பொந்தி3திவி (ஈ ஜக3மு).

Top

11 - ராஜாதி4 ராஜன்-மகுடீ - ராஜாதி4 ராஜ ராஜன்-மகுடீ.

12 - நே சால - எல்லா புத்தகங்களிலும், 'நே ஜால' என்றுதான் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் 'ஜால' என்பது தவறாகும்

13 - ஸன்னிதி4னி கோரி - எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. 'கோரி' என்பதுடன் பொருள் நிறைவுறவில்லை. ஆனால், 'சன்னிதி கோரினேன்' என்று புத்தகங்களில் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அத்தகைய பொருளுக்கு, 'கோரிதி' என்றிருக்க வேண்டும்.

15 - 4ஜன ஸந்ததமு ஸேயனி ஜடு33னு - ப4ஜன ஸந்ததமு ஸேய நிஜமுக3னு - ப4ஜன ஸந்ததமு ஸேயக ஜனுட3ன் - ப4ஜன ஸந்ததமு ஸேயக ஜடு33னு : புத்தகங்களில், இதற்கு, 'உனது பஜனை செய்யாத முட்டாள்' என்ற பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அத்தகைய பொருளுக்கு, 'ப4ஜன ஸந்ததமு ஸேயனி ஜடு33னு' என்பதே சரியாகும்.

16 - ஜனனிவியிபுடு3 - ஜனனியிபுடு3.

Top

மேற்கோள்கள்
10 - காருண்ய மூர்திவை - கருணா மூர்த்தியாகி - முன்னம், காமாட்சி, உக்கிர உருக்கொண்டிருந்ததாகவும், பின்னர், ஆதி சங்கரர், ஸ்ரீ சக்கிரம் ஸ்தாபித்து, அம்மையினை சாந்த உருவாக்கினதாக காஞ்சி தல புராணம் கூறும்.

14 - கனக கி3ரி ஸத3ன லலித - மேரு உறையும் லலிதை. லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (55) அம்மையின் பெயர் 'ஸுமேரு மத்4ய ஸ்1ரு2ங்க3ஸ்தா2' என்பதாகும்.

Top

விளக்கம்
11 - மகுடீ தட மணி ராஜ பாதா3 - மகுடப் பரப்பின் நவமணிகளினால் ஒளிரும் திருவடி. மன்னாதி மன்னர்கள், அம்மையின் திருவடியில் வணங்குகையில், அவர்களுடைய மகுடங்களின் நவமணிகளின் காந்தியினால், அம்மையின் திருவடி ஒளிர்வதாக.

காந்தம் போன்ற - ஈர்க்கும் தன்மையுடைய
தனியான சன்னிதி - ஏகாந்த சேவை
பொன் மலை - மேரு

Top


Updated on 02 Jun 2011

4 comments:

 1. திரு கோவிந்தன் அவர்களே

  சரணம் 2- ஜூசின என்பதற்கு காண என்று பொருள் கொடுத்துள்ளீர். இது பார்த்த/கண்ட என்று தானே பொருள் தரும். ஜுட3 என்றால் தானே காண என்று பொருள். ஜூசினா என்று எடுத்துக்கொண்டால் பார்த்தாலும் /தேடினாலும் என்று பொருள் தருமா.
  ௧. ஒளி/ மயமாகி,
  ௨ புகழ்/ காட்டி,
  ௩ இப்படிப்பட்ட/ பண்பு/ வடிவு
  ௪ மூவுலகிலும் காண/

  ஒளிமயமாகி,காட்டி,என்னும் வினையெச்சங்கள் வடிவு என்னும் பெயர்ச்சொல்லோடு சேருமா?
  வணக்கம்
  கோவிந்தசாமி

  ReplyDelete
 2. திரு கோவிந்தசாமி அவர்களே,

  இரண்டு மற்றும் மூன்றாவது சரணங்களின் முதல் பகுதிகள், இலக்கணப்படி, கோர்வையாக அமைக்கப்படவில்லை. ஒரு மகன், தன் தாயிடம் நேரிடையாகப் பேசுகையில் எப்படி உரைப்பானோ, அப்படியே இவை அமைக்கப்பட்டுள்ளன. எனவே, இவற்றிற்கு, பொதுப்படையாகத்தான் பொருள் கொள்ள முடியுமே தவிர, ஒவ்வொரு சொல்லுக்கும் அதற்குகந்த பொருள் கொள்வது கடினம்.

  இலக்கணப்படி, நீங்கள் கூறுவதை நான் ஒப்புக்கொண்டாலும், மொழிபெயர்க்கையில், மூலத்தின் சாரம் கெடாமலிருக்கவேண்டி, சில மாற்றங்களை ஏற்றேயாக வேண்டும்.

  வணக்கம்
  கோவிந்தன்

  ReplyDelete
 3. அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
  காந்தமகு3 9பேரு பொந்தி3திவி- இதற்கு காந்தம் போன்ற, பெயர் பெற்றனை.
  காந்தமு என்பதற்கு அகராதியில் கொடுக்கப்பட்டுள்ள பொருள் :-
  కాంతము (p. 0265) [ kāntamu ] kāntamu. [Skt.] n. A stone. రాయి, as in సూర్యకాంతము and చంద్రకాంతము. అయిస్కాంతము a lode-stone.
  కాంతము adj. Pleasing, charming, lovely, friendly మనోహరమైన.
  காந்தமு என்பதற்கு இனிய/விரும்பத்தக்க என்று பொருள் கொள்ளலாமா?
  வணக்கம்,
  கோவிந்தஸ்வாமி

  ReplyDelete
  Replies
  1. திரு கோவிந்தஸ்வாமி அவர்களே,

   'காந்தம்' என்பதற்கு 'ஈர்க்கும் தன்மை'யுடைய என்று விளக்கம் கொடுத்துள்ளேன். 'இனிய' என்று பொருள் கொண்டால், 'இனியது போன்ற' என்று எழுதவேண்டிவரும். 'இனிய' என்றால் பொருளுண்டு. 'இனியது போன்ற' என்றால்? அதுபோன்றே, ''விரும்பத்தக்கது போன்ற' என்றால்? 'காந்தம்' என்ற சொல்லுக்கு அடுத்துவரும் 'அகு3' என்ற சொல்லினால், வேறு ஏதும் பொருள் கொள்வது சரியல்ல என்பது என் அபிப்பிராயம்.

   வணக்கம்
   வே கோவிந்தன்.

   Delete