Thursday, June 2, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - அகி2லாண்டே3ஸ்1வரீ - ராகம் கர்னாடக காபி - Akhilandesvari - Raga Karnataka Kapi

பல்லவி
1அகி2(லா)ண்(டே3)ஸ்1வரீ து3ருஸுக3 ப்3ரோவுமு

அனுபல்லவி
நிகி2ல தாப ஹாரிணீ பு4விலோன
நினு மிஞ்சின வா(ரெ)வ(ரு)ன்னா(ர)ம்மா (அகி2ல)

சரணம்
சரணம் 1
2மாணிக்ய மயமை(யு)ன்ன
மந்தி3
மத்4ய வாஸினீ அலி
வேணீ ஸ்ரீ ஸ1ம்பு4 நாது2னி ராணீ
வர(மீ)யவே 3கீ3ர்வாணீ மா(ய)ம்மா (அகி2ல)


சரணம் 2
அம்போ4-ருஹ ஸம்ப4வ ஹரி ஸ1ங்கர
அகி24மு(னீ)ந்த்3 பூஜிதா அதி
3ம்பீ4ரா தீ3ன ரக்ஷணீ
3தா3 நா மொரலனு வின லேதா3 (அகி2ல)


சரணம் 3
ஓ அம்பா3 நினு நம்மின நாபை
இந்த பராமுக2(மே)ல வினு
ஸ்1யாம க்ரு2ஷ்ண நுதா சிந்த தீ3ர்சி
5ஸாம்ராஜ்ய(மீ)யவே வேக3மே (அகி2ல)


பொருள் - சுருக்கம்
 • அகிலாண்டேசுவரீ!
 • அனைத்துலகின் துயரங்களைப் போக்குபவளே!
 • மாணிக்க மயமாயுள்ள, கோயில் நடுவில் உறைபவளே! அளி வேணீ! ஸ்ரீ சம்பு நாதரின் ராணியே! நாவரசியே! எமதம்மா!
 • கமலத்திலுதித்தோன், அரி, சங்கரன் மற்றும் அனைத்து, முனிவரிற் தலைசிறந்தோராலும் தொழப்பெற்றவளே! மிக்கு கம்பீரமானவளே!
 • ஓ அம்பா! சியாம கிருஷ்ணனால் போற்றப்பெற்றவளே!

 • கேளாய்.

  • புவியில், உன்னை மிஞ்சியவர், எவருளரம்மா?
  • எளியோரைக் காப்பவள் அன்றோ?
  • எனது முறையீடுகளைக் கேட்டிலையோ?
  • உன்னை நம்பிய என்மீது, இத்தனை பராமுகமேன்?

  • விரைவாகக் காப்பாயம்மா.
  • வரமருள்வாயம்மா.
  • கவலையைத் தீர்த்து, (உனது பக்திப்) பேரரசினைத் தருவாயம்மா, வேகமாக.பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
அகி2ல-அண்ட3-ஈஸ்1வரீ/ து3ருஸுக3/ ப்3ரோவுமு/
அகிலாண்டேசுவரீ/ விரைவாக/ காப்பாயம்மா/


அனுபல்லவி
நிகி2ல/ தாப/ ஹாரிணீ/ பு4விலோன/
அனைத்து உலகின்/ துயரங்களை/ போக்குபவளே/ புவியில்/

நினு/ மிஞ்சின வாரு/-எவரு/-உன்னாரு/-அம்மா/ (அகி2ல)
உன்னை/ மிஞ்சியவர்/ எவர்/ உளர்/ அம்மா/


சரணம்
சரணம் 1
மாணிக்ய/ மயமை/-உன்ன/
மாணிக்க/ மயமாய்/ உள்ள/

மந்தி3ர/ மத்4ய/ வாஸினீ/ அலி/
கோயில்/ நடுவில்/ உறைபவளே/ அளி/

வேணீ/ ஸ்ரீ/ ஸ1ம்பு4/ நாது2னி/ ராணீ/
வேணீ/ ஸ்ரீ/ சம்பு/ நாதரின்/ ராணியே/

வரமு/-ஈயவே/ கீ3ர்வாணீ/ மா/-அம்மா/ (அகி2ல)
வரம்/ அருள்வாயம்மா/ நாவரசியே/ எமது/ அம்மா/


சரணம் 2
அம்போ4-ருஹ/ ஸம்ப4வ/ ஹரி/ ஸ1ங்கர/
கமலத்தில்/ உதித்தோன்/ அரி/ சங்கரன் (மற்றும்)/

அகி2ல/ முனி/-இந்த்3ர/ பூஜிதா/ அதி/
அனைத்து/ முனிவரிற்/ தலைசிறந்தோராலும்/ தொழப்பெற்றவளே/ மிக்கு/

3ம்பீ4ரா/ தீ3ன/ ரக்ஷணீ/
கம்பீரமானவளே/ எளியோரை/ காப்பவள்/

3தா3/ நா/ மொரலனு/ வின லேதா3/ (அகி2ல)
அன்றோ/ எனது/ முறையீடுகளை/ கேட்டிலையோ/


சரணம் 3
ஓ/ அம்பா3/ நினு/ நம்மின/ நாபை/
ஓ/ அம்பா/ உன்னை/ நம்பிய/ என்மீது/

இந்த/ பராமுக2மு/-ஏல/ வினு/
இத்தனை/ பராமுகம்/ ஏன்/ கேளாய்/

ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ நுதா/ சிந்த/ தீ3ர்சி/
சியாம/ கிருஷ்ணனால்/ போற்றப்பெற்றவளே/ கவலையை/ தீர்த்து/

ஸாம்ராஜ்யமு/-ஈயவே/ வேக3மே/ (அகி2ல)
(உனது பக்திப்) பேரரசினை/ தருவாயம்மா/ வேகமாக/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - அகி2லாண்டே3ஸ்1வரீ - அகி2லாண்டே3ஸ்1வரி.

Top

மேற்கோள்கள்
2 - மாணிக்ய மயமையுன்ன மந்தி3 - மாணிக்க மயமாயுள்ள கோயில் - விரும்பியதருளும் சிந்தாமணி இல்லம் : அம்மை, சிந்தாமணி இல்லத்தில் வசிப்பதாகக் கூறப்படும். லலிதா ஸஹஸ்ர நாமம் (57) - 'சிந்தாமணி க்3ரு2ஹாந்தஸ்தா2' மற்றும் ஸௌந்தர்ய லஹரி (8) - 'சிந்தாமணி க்3ரு2ஹே' நோக்கவும்.

Top

விளக்கம்
3 - கீ3ர்வாணீ - பொதுவாக, இச்சொல், 'சரஸ்வதி'யைக் குறிக்கும். எனவே, 'நாவரசி' என்று பொருள் கொள்ளப்பட்டது.

4 - முனீந்த்3 - இதனை, ஒரு அடைமொழியாகவோ - முனிவரிற் தலை சிறந்தோர் - அல்லது, இரண்டு அடைமொழிகளாகவோ - முனிவர், இந்திரன் - என்றோ கொள்ளலாம்.

5 - ஸாம்ராஜ்யமீயவே - பேரரசினை அருள்வாய் : புத்தகங்களில், 'ஸாம்ராஜ்யம்' என்பதற்கு, 'பேரின்பம்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. என் சிற்றறிவுக்கு எட்டியவரை, கடவுளின் உண்மையான தொண்டன், இறைவனிடம், பக்தியே என்றும் வேண்டும் என்றுதான் கோருவான். அங்ஙனமே, இங்கு, 'பக்திப் பேரரசு' என்று பொருள் கொள்ளப்பட்டது.

அகிலாண்டேசுவரி - திருவானைக்காவில் அம்மையின் பெயர்
அளி வேணி - வண்டு நிகர் கார் குழலி
ஸ்ரீ சம்பு நாதர் - சிவன்
கமலத்திலுதித்தோன் - பிரமன்

Top


Updated on 03 Jun 2011

No comments:

Post a Comment