Sunday, July 3, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - நீவே க3தியனி - ராகம் கல்யாணி - Nive Gatiyani - Raga Kalyani

பல்லவி
நீவே க3தி(ய)னி நெர நம்மினானு ஜக3(த3)ம்பா3
நீ(வ)னாத2 ரக்ஷகி மா(ய)ம்மா

அனுபல்லவி
ராவே வேக3மே மனவி வி(ன)ம்மா ஸ்ரீ
ராஜ ரா(ஜே)ஸ்1வரீ தே3வீ (நீவே)

சரணம்
1காம கோடி பீட2 நிவாஸினி கல்யாணீ
ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரீ தே3வீ
நீது3 சரிதமு வினி வினி பாத3 கமலமுனு
கோரிதினி ஸதா33தி(ய)னி
பொக3டி3 பொக3டி3 2சரணமு கொ3லிசே(ன)ம்மா
3ங்கா3ரு காமாக்ஷி (நீவே)


பொருள் - சுருக்கம்
  • பல்லுலகத் தாயே! எமதம்மா!
  • ஸ்ரீ ராஜ ராஜேசுவரீ! தேவீ!
  • காம கோடி பீடத்தினில் உறைபவளே! கல்யாணீ! சியாம கிருஷ்ணனின் சோதரியே! தேவீ! பங்காரு காமாட்சீ!

    • நீயே கதியென மிக்கு நம்பினேன்.
    • நீ அனாதைகளைக் காப்பவள்.

    • வாராயம்மா, விரைவாக; வேண்டுகோளினைக் கேளாயம்மா.
    • உனது சரிதத்தினைக் கேட்டுக் கேட்டு, உனது திருவடிக் கமலத்தினைக் கோரினேன்.
    • எவ்வமயமும், கதியென, புகழ்ந்து புகழ்ந்து, உனது திருவடியினை வணங்கினேனம்மா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நீவே க3தி-அனி நெர நம்மினானு ஜக3த்-அம்பா3
நீயே கதியென மிக்கு நம்பினேன். பல்லுலகத் தாயே!

நீவு/-அனாத2/ ரக்ஷகி/ மா/-அம்மா/
நீ/ அனாதைகளை/ காப்பவள்/ எமது/ அம்மா/


அனுபல்லவி
ராவே/ வேக3மே/ மனவி/ வினு/-அம்மா/ ஸ்ரீ/
வாராயம்மா/ விரைவாக/ வேண்டுகோளினை/ கேளாய்/ அம்மா/ ஸ்ரீ/

ராஜ/ ராஜ-ஈஸ்1வரீ/ தே3வீ/ (நீவே)
ராஜ/ ராஜேசுவரீ/ தேவீ/


சரணம்
காம/ கோடி/ பீட2/ நிவாஸினி/ கல்யாணீ/
காம/ கோடி/ பீடத்தினில்/ உறைபவளே/ கல்யாணீ/

ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸோத3ரீ/ தே3வீ/
சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/ தேவீ/

நீது3/ சரிதமு/ வினி/ வினி/ பாத3/ கமலமுனு/
உனது/ சரிதத்தினை/ கேட்டு/ கேட்டு/ (உனது) திருவடி/ கமலத்தினை/

கோரிதினி/ ஸதா3/ க3தி/-அனி/
கோரினேன்/ எவ்வமயமும்/ கதியென/

பொக3டி3/ பொக3டி3/ சரணமு/ கொ3லிசேனு/-அம்மா/
புகழ்ந்து/ புகழ்ந்து/ (உனது) திருவடியினை/ வணங்கினேன்/ அம்மா/

3ங்கா3ரு/ காமாக்ஷி/ (நீவே)
பங்காரு/ காமாட்சீ/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - சரணமு கொ3லிசேனம்மா - எல்லா புத்தகங்களிலும், 'ஸ1ரணமு கொ3லிசேனம்மா' என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு, 'சரணமடைந்தேன்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. 'கொ3லுசு' (கொலுசு) என்ற சொல்லுக்கு, 'சேவித்தல்', 'வணங்குதல்' என்றுதான் பொருள்கள் உண்டு. இதற்கு முன் வரியினில், 'பாத3 கமலமுனு கோரிதினி' (திருவடிக் கமலத்தினைக் கோரினேன்) என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படியே, இங்கும் 'திருவடியினை வணங்கினேன் (சேவித்தேன்)' என்று பொருள் கொள்ளவேண்டும் என்று நான் கருதுகின்றேன். எனவே, இங்கு, 'சரணமு' (திருவடி) என்றிருக்க வேண்டும் - 'ஸ1ரணமு' (புகல்) என்றல்ல. அங்ஙனமே இங்கு ஏற்கப்பட்டது.
Top

மேற்கோள்கள்
1 - காம கோடி பீட2 நிவாஸினி - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (589) அம்மையின் பெயர் 'காம கோடிகா' - காம கோடி பீடம்.
Top

விளக்கம்



Updated on 04 Jul 2011

No comments:

Post a Comment