Tuesday, July 5, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - பராமுகம் - ராகம் கல்யாணி - Paraamukham - Raga Kalyani

பல்லவி
பராமுக(மே)(ன)ம்மா பார்வதி(ய)ம்மா

அனுபல்லவி
1பராத்பரீ பரம பாவனீ பவானீ அம்பா
பாரில் நான் உன்னையே நம்பினேன் (பரா)

சரணம்
சரணம் 1
2அகில(மெ)ங்கும் நிறைந்த ஜோதியே அம்பிகையே
அன்னையே இனி நான் தாளே(னெ)னச்-சொன்னேன் (பரா)


சரணம் 2
உனது பாத(மி)ன்றி வேறு துணை-யுண்டோ
உந்தன் மன(மி)ரங்கவும் நான் சொல்லவோ (பரா)


சரணம் 3
3ஸ்1யாம க்ரு2ஷ்ண சோதரீ க்ரு2பா-கரீ
சரணம் சரண(மெ)ன்று சொன்னேன் தாயே (பரா)


பொருள் - சுருக்கம்
  • பார்வதியம்மா!
  • பராபரீ! முற்றிலும் தூயவளே! பவானீ! அம்பையே!
  • அகிலமெங்கும் நிறைந்த ஜோதியே! அம்பிகையே! அன்னையே!
  • சியாம கிருஷ்ண சோதரீ! கிருபாகரீ! தாயே!

  • பராமுகமேனம்மா?

    • பாரில் நான் உன்னையே நம்பினேன்.
    • இனி, நான் தாளேன் எனச்சொன்னேன்.

    • உனது பாதம் இன்றி, வேறு துணையுண்டோ?
    • உந்தன் மனமிரங்கவும் நான் சொல்லவோ?

    • சரணம் சரணமென்று சொன்னேன்.


  • பராமுகமேனம்மா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பராமுகம்-ஏன்-அம்மா பார்வதி-அம்மா


அனுபல்லவி
பராத்பரீ/ பரம/ பாவனீ/ பவானீ/ அம்பா/
பராபரீ/ முற்றிலும்/ தூயவளே/ பவானீ/ அம்பையே/

பாரில் நான் உன்னையே நம்பினேன் (பரா)


சரணம்
அகிலம்-எங்கும் நிறைந்த ஜோதியே அம்பிகையே

அன்னையே இனி நான் தாளேன்-என-சொன்னேன் (பரா)


சரணம் 2
உனது பாதம்-இன்றி வேறு துணை-உண்டோ

உந்தன் மனம்-இரங்கவும் நான் சொல்லவோ (பரா)


சரணம் 3
ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ சோதரீ/ க்ரு2பா-கரீ/
சியாம/ கிருஷ்ண/ சோதரீ/ கிருபாகரீ/

சரணம் சரணம்-என்று சொன்னேன் தாயே (பரா)


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - ஸ்1யாம க்ரு2ஷ்ண சோதரீ - ஸ்1யாம க்ரு2ஷ்ணன் சோதரீ.
Top

மேற்கோள்கள்
1 - பராத்பரீ - பராபரீ - பரத்திற்கும் அப்பாற்பட்டவள். கீழ்க்காணும், 'ஜோதி' பற்றிய குறிப்பினை நோக்கவும்.

2 - அகிலமெங்கும் நிறைந்த ஜோதியே - கீதையில், கண்ணன், பரம்பொருளினைப் பற்றி கூறுவது -

"ஒளிகளுக்கெல்லாம் அஃது ஒளியாம் - இருட்டினுக்கும் அப்பாற்பட்டதெனப்படும்". (13.17)

இருட்டினுக்கப்பாற்பட்டது - ஏனெனில் அது நிழலுமற்றது. 'பரம்பொருள்'.
Top

விளக்கம்



Updated on 05 Jul 2011

No comments:

Post a Comment