Saturday, July 9, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ஸ்ரீ காமாக்ஷீ - ராகம் கல்யாணி - Sri Kamakshi - Raga Kalyani

பல்லவி
ஸ்ரீ காமாக்ஷீ காவவே நனு கருணா கடாக்ஷி
1ஸ்ரீ காந்திமதீ ஸ்ரீ காஞ்சீ புர வாஸினி

அனுபல்லவி
ஏ(கா)ம்(ரே)ஸ்1வரீ நீகு ஏலாகு33ய வச்சுனோ
லோகுலு கோரின தை3வமு நீவே கா3தா3
ஏக பா4வுடை3ன நன்(னொ)கனி ப்3ரோவ ப3ருவா (ஸ்ரீ)

சரணம்
சரணம் 1
கோரி வச்சின ப4க்த ஜனுலகு
கோம(ளா)ங்கீ3 நீவே ஸாம்ராஜ்யமு
காமா(க்ஷ)ம்மா நின்னே வேடி3ன பி3ட்33னு
காபா(ட3வ)ம்மா கருண ஜூ(ட3வ)ம்மா
ஸாரஸ த3ள நேத்ரீ 2காம பாலினீ
ஸோம ஸே12ருனி ராணீ புராணீ
ஸ்1யாம(ளா)ம்பி3கே காளிகே 3கலே
ஸாம கா3ன மோதி3னீ ஜனனீ (ஸ்ரீ)


சரணம் 2
நீரஜ லோசனா 4ஸ்தி2ர(ம)னி4க்திதோ
நின்னே 51ர(ண)ண்டின தா3ஸுடு3 நேனு
நீ ஸன்னிதி4னி ஜேரின நாபை
6நிரீக்ஷணமு சேய தகு3னா
7நீ நாம த்4யானமே நியதி வேரே
ஜப தபமு(லெ)ருக3னே மா(ய)ம்மா
நீ ஸா(டெ)வரு ஸ்1யாமளே ஸி1வே
ஸ்1யாம க்ரு2ஷ்ண பாலித ஜனனீ (ஸ்ரீ)


ஸ்வர ஸாஹித்ய
நா மனவி வினு(மி)க கி3ரி
தனயா முத3முதோ வச்சி கோரிதி
நா வெதலனு தீ3ர்சவே மா(க)ப4
தா3ன(மீ)யவே தாமஸமு ஸேயகனே (ஸ்ரீ)


பொருள் - சுருக்கம்
 • ஸ்ரீ காமாட்சீ! கருணைக் கடைக்கண்ணீ! ஸ்ரீ காந்திமதீ! ஸ்ரீ காஞ்சீபுரத்தினில் உறைபவளே!
 • ஏகாம்பரேசுவரீ!
 • கோமள அங்கத்தினளே! காமாட்சியம்மா! தாமரையிதழ்க் கண்ணீ! மன்மதனைக் காத்தவளே! பிறை யணிவோனின் ராணியே! பழம் பொருளே! சியாமளா அம்பிகையே! காளிகையே! கலையே! சாம கானத்தினில் மகிழ்பவளே! ஈன்றவளே!
 • கமலக் கண்ணீ! எமது தாயே! சியாமளையே! சிவையே! சியாம கிருஷ்ணனைப் பேணும், ஈன்றவளே!
 • மலை மகளே!

 • காப்பாயம்மா, என்னை.

  • உனக்கு எங்ஙனம் தயை வருமோ?
  • மக்கள் வேண்டும் தெய்வம், நீயே யன்றோ?
  • ஓர் எண்ணத்தினனாகிய என்னொருவனைக் காத்தல் பளுவா?

  • கோரி வந்த அடியார்களுக்கு, நீயே பேரரசாகும்.
  • உன்னையே வேண்டிய குழந்தையாம் (நான்).
  • காப்பாயம்மா.
  • கருணை புரிவாயம்மா.

  • திரமென, பக்தியுடன், உன்னை சரணம் அண்டிய, தொண்டன் நான்.
  • உனது சன்னிதியினை அடைந்த என்னிடம், புறக்கணிப்பு செய்தல் தகுமா?
  • உனது நாம தியானமே, நியதியாம், எனக்கு.
  • வேறே ஜப, தவங்கள் அறியேனம்மா.
  • உனது நிகர் எவர்?

  • எனது வேண்டுகொளினைக் கேளாய், இனி.
  • மகிழ்வுடன் வந்து, வேண்டினேன்.
  • எனது வேதனைகளைத் தீர்ப்பாயம்மா.
  • எமக்கு அபய தானம் தருவாயம்மா, தாமதம் செய்யாமலே.


 • காப்பாயம்மா, என்னை.பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ/ காமாக்ஷீ/ காவவே/ நனு/ கருணா/ கடாக்ஷி/
ஸ்ரீ/ காமாட்சீ/ காப்பாயம்மா/ என்னை/ கருணை/ கடைக்கண்ணீ/

ஸ்ரீ/ காந்திமதீ/ ஸ்ரீ/ காஞ்சீ/ புர/ வாஸினி/
ஸ்ரீ/ காந்திமதீ/ ஸ்ரீ/ காஞ்சீ/ புரத்தினில்/ உறைபவளே/


அனுபல்லவி
ஏக-ஆம்ர-ஈஸ்1வரீ/ நீகு/ ஏலாகு3/ த3ய/ வச்சுனோ/
ஏகாம்பரேசுவரீ/ உனக்கு/ எங்ஙனம்/ தயை/ வருமோ/

லோகுலு/ கோரின/ தை3வமு/ நீவே/ கா3தா3/
மக்கள்/ வேண்டும்/ தெய்வம்/ நீயே/ யன்றோ/

ஏக/ பா4வுடை3ன/ நன்னு/-ஒகனி/ ப்3ரோவ/ ப3ருவா/ (ஸ்ரீ)
ஓர்/ எண்ணத்தினனாகிய/ என்/ ஒருவனை/ காத்தல்/ பளுவா/


சரணம்
சரணம் 1
கோரி/ வச்சின/ ப4க்த ஜனுலகு/
கோரி/ வந்த/ அடியார்களுக்கு,

கோமள/-அங்கீ3/ நீவே/ ஸாம்ராஜ்யமு/
கோமள/ அங்கத்தினளே/ நீயே/ பேரரசாகும்/

காமாக்ஷி/-அம்மா/ நின்னே/ வேடி3ன/ பி3ட்33னு/
காமாட்சி/ யம்மா/ உன்னையே/ வேண்டிய/ குழந்தையாம் (நான்)/

காபாடு3/-அம்மா/ கருண/ ஜூடு3/-அம்மா/
காப்பாய்/ அம்மா/ கருணை/ புரிவாய்/ அம்மா/

ஸாரஸ/ த3ள/ நேத்ரீ/ காம/ பாலினீ/
தாமரை/ யிதழ்/ கண்ணீ/ மன்மதனை/ காத்தவளே/

ஸோம/ ஸே12ருனி/ ராணீ/ புராணீ/
பிறை/ யணிவோனின்/ ராணியே/ பழம் பொருளே/

ஸ்1யாமளா/-அம்பி3கே/ காளிகே/ கலே/
சியாமளா/ அம்பிகையே/ காளிகையே/ கலையே/

ஸாம/ கா3ன/ மோதி3னீ/ ஜனனீ/ (ஸ்ரீ)
சாம/ கானத்தினில்/ மகிழ்பவளே/ ஈன்றவளே/


சரணம் 2
நீரஜ/ லோசனா/ ஸ்தி2ரமு/-அனி/ ப4க்திதோ/
கமல/ கண்ணீ/ திரம்/ என/ பக்தியுடன்/

நின்னே/ ஸ1ரணு/-அண்டின/ தா3ஸுடு3/ நேனு/
உன்னை/ சரணம்/ அண்டிய/ தொண்டன்/ நான்/

நீ/ ஸன்னிதி4னி/ ஜேரின/ நாபை/
உனது/ சன்னிதியினை/ அடைந்த/ என்னிடம்/

நிரீக்ஷணமு/ சேய/ தகு3னா/
புறக்கணிப்பு/ செய்தல்/ தகுமா/

நீ/ நாம/ த்4யானமே/ நியதி/ வேரே/
உனது/ நாம/ தியானமே/ நியதியாம் (எனக்கு)/ வேறே/

ஜப/ தபமுலு/-எருக3னே/ மா/-அம்மா/
ஜப/ தவங்கள்/ அறியேனம்மா/ எமது/ தாயே/

நீ/ ஸாடி/-எவரு/ ஸ்1யாமளே/ ஸி1வே/
உனது/ நிகர்/ எவர்/ சியாமளையே/ சிவையே/

ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ பாலித/ ஜனனீ/ (ஸ்ரீ)
சியாம/ கிருஷ்ணனை/ பேணும்/ ஈன்றவளே/


ஸ்வர ஸாஹித்ய
நா/ மனவி/ வினுமு/-இக/ கி3ரி/
எனது/ வேண்டுகொளினை/ கேளாய்/ இனி/ மலை/

தனயா/ முத3முதோ/ வச்சி/ கோரிதி/
மகளே/ மகிழ்வுடன்/ வந்து/ வேண்டினேன்/

நா/ வெதலனு/ தீ3ர்சவே/ மாகு/-அப4ய/
எனது/ வேதனைகளை/ தீர்ப்பாயம்மா/ எமக்கு/ அபய/

தா3னமு/-ஈயவே/ தாமஸமு/ ஸேயகனே/ (ஸ்ரீ)
தானம்/ தருவாயம்மா/ தாமதம்/ செய்யாமலே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
4 - ஸ்தி2ரமனி - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு, 'திரமான' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இது, 'ஸ்தி2ரமைன' என்றிருக்கவேண்டுமென நான் கருதுகின்றேன்.

5 - 1ரணண்டின - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு, 'சரணடைந்த' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இது, 'ஸ1ரணனின' என்றிருக்கவேண்டுமென நான் கருதுகின்றேன்.

6 - நிரீக்ஷணமு சேய - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு, 'புறக்கணிப்பு செய்ய' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. 'ஈக்ஷண' என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு, 'நோக்குதல்' என்று பொருளாகும். இச்சொல்லுடன், 'நிர்' என்ற prefix-இனை சேர்த்து, 'நோக்காதிருத்தல்' என்று பொருள்கொள்ளப்பட்டிருக்கலாம். பொதுவாக, சம்ஸ்கிருதத்தில், 'நிர்' என்ற prefix, அந்த சொல்லினை, எதிர்மறையாக்கும். ஆனால், 'ஈக்ஷண' என்ற சொல்லுடன், 'நிர்' கூட்டி, 'நிரீக்ஷண' என்றாலும், 'நோக்குதல்' என்றே பொருளாகும். இவ்விடத்தில், 'புறக்கணித்தல்' என்பதற்கு, சில சொற்களாவன - 'நிரீஹத', 'நிர்-லக்ஷ்ய' (அலக்ஷ்ய), 'உபேக்ஷ' ஆகும்.

7 - நீ நாம த்4யானமே - நீ நாமமே த்4யானமே.
Top

மேற்கோள்கள்
1 - ஸ்ரீ காந்திமதீ - திருநெல்வேலியில், அம்மையின் பெயர். இப்பாடல், காஞ்சீபுரத்திலுள்ள 'காமாட்சி'யை நோக்கி பாடப்பட்டுள்ளதால், 'காந்திமதீ' என்ற சொல்லுக்கு 'பேரொளியினள்' என்று பொருளாகும்.

2 - காம பாலினீ - மன்மதனைக் காத்தவள். சிவன், மன்மதளை எரித்து சாம்பலாக்கிய பின்னர், காமாட்சி, அவனை, உடலின்றி உயிர்ப்பித்ததாகக் கூறப்படும். இது குறித்து, 'ஸௌந்தர்ய லஹரி' (6-வது செய்யுள்) நோக்கவும்.

3 - கலே - கலையே - 'கலை வடிவினளே' என. லலிதா ஸஹஸ்ர நாமத்தினில், அம்மையின் பெயர் 'சதுஷ்-ஷஷ்டி-கலாமயீ' (226) (64 கலை வடிவினள்) ஆகும். '64 கலைகள்' பற்றிய விவரம்.
Top

விளக்கம்
ஏகாம்பரேசுவரீ - காஞ்சி ஏகாம்பரேசுவரரின் இல்லாள்
ஓர் எண்ணத்தினன் - அம்மையைத் தவிர வேறு எண்ணமற்றவன்
பிறை யணிவோன் - சிவன்
Top


Updated on 10 Jul 2011

3 comments:

 1. Comment posted by Sri Govindaswamy

  "திரு கோவிந்தன் அவர்களே

  - ஸ்தி2ரமனி, ஸ1ரணண்டின - இவற்றை ஸ்திரமைன,ஸரணனின என்று மாற்றினால் செய்யுள்/பாட்டு இலக்கணங்களுக்கு ஒத்துவருமா என்று பார்க்க வேண்டும். வேறு சில பாடல்களிலும் நீங்கள் கூறியுள்ள மாற்றுச் சொற்களை இந்த கண்ணோட்டத்தில் மறுமுறை ஆராய வேண்டுகிறேன்.

  ஸ்தி2ரமனி –“(நீ) நிலையானவள் என்று (எண்ணி)” என்று பொருள் கொள்ளலாமா?

  ஸ1ரணண்டின- சரணண்டின என்பது சரியா

  வணக்கம்
  கோவிந்தஸ்வாமி"

  ReplyDelete
 2. திரு கோவிந்தஸ்வாமி அவர்களே,

  நான் நோக்கிய புத்தகங்கள் யாவற்றிலும் 'ஸ்தி2ரமனி ஸ1ரணண்டின' என்றே கொடுக்கப்பட்டுள்ளது. எனக்குத்தெரிந்தவரையில், 'ஸ்தி2ரமனி' என்பது தவறாக இருக்காது. இது, ஸ்யாமா சாஸ்திரிகளின் 'ஸ்தி2ரமான' நம்பிக்கையைக் குறிக்குமென நான் கருதுகின்றேன். அடுத்த, 'ஸ1ரணண்டின' என்பதிலும் பொருட் குற்றம் ஏதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. 'அண்டின' என்ற தெலுங்கு சொல், 'அண்டிய' என்பதற்குச் சமமாகும். எனவே, அதுவும் சரியாகவே இருக்கலாம். ஆனால், நீங்கள் கூறிய, 'சரணண்டின' என்பது எனக்குச் சரியாகப் படவில்லை. 'ஸ1ரணு' என்பது, 'ஸ1ரண' என்பதன் திரிபாகும். ஆனால், 'சரணம்' என்ற சொல்லின் திரிபு, 'சரணமு' ஆகும்; 'சரணு' ஆகாது.

  வணக்கம்,
  கோவிந்தன்

  ReplyDelete
 3. அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
  ஸ1ரணண்டின- என்பதை சரணண்டின என்று எடுத்துக்கொண்டால் உன் சரணங்களைப் பற்றிக்கொண்ட என்று பொருள் கொள்ளலாமா?
  அண்டின என்பதற்கு ஒட்டிக்கொண்ட/நெருங்கிய என்று பொருள் உண்டல்லவா. ‘ சரணமு அண்டின’ என்பது ‘சரணண்டின’ என்று திரியுமா?
  வணக்கம்
  கோவிந்தஸ்வாமி

  ReplyDelete