பாஹி ஸ்ரீ கி3ரி ராஜ ஸுதே கருணா கலிதே
பத3 ஸரோஜ(ம)னுஸராமி தே அம்ப3
அனுபல்லவி
தே3ஹி 1மதே(ர)னுபம க3திம் 2மே ஏ(கா)ம்ர பதி ஸதி ஸுத3தி
தேஜஸாऽதுலித தி3வ்ய மூர்தே லலிதே அதி லலிதே (பாஹி)
சரணம்
சரணம் 1
தே3வி புராணி நிக3ம வினுதே ப்ரீதி(ரி)ஹ வஸது
தே மானதே3 அனுதி3ன(ம)ஜிதே 3யுதி4 ஜி(தே)ந்த்3ர விமதே
4தே3வாऽவிரத க்ரு2த நுதே 5காம கோடி பீட2 க3தே
6தீ3ன ஜன நிகரே பு4வி பர தே3வதே ஸுசரிதே (பாஹி)
சரணம் 2
7நீப வனீ பரம நிவஸனே நம்ர ஜக3(த3)வன
நேத்ரி ஜனனி கனக வஸனே 8ஜ2ஷ விஸா1ல நயனே
9கோ3பாயித ஸுகவி ஜனே பாப 10தாப 11க2ண்ட3ன நிபுணே
குந்தள விஜித க4னே க4ன ஜக4னே 12கலாவதி கலே (பாஹி)
சரணம் 3
காமித தா4த்ரி கமல முகி2 காமாக்ஷி அகி2ல ஸாக்ஷி
13காம ரதி 14காம ஸு1ப4 ப2லதே3 த்4ரு2த ஸுக3ந்த4 க4ன லதே
ஸ்1யாமே அத்3ய ப4வ மம முதே3 ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸத்3-வரதே3
15ஸ்1யாமளே ஆஸ்1ரித ரதே 16விதி3த க3தே 17ஸதா3 இஹ வரதே3 (பாஹி)
பொருள் - சுருக்கம்
- ஸ்ரீ மலையரசன் மகளே! கருணையுடைவளே! அம்பையே!
- ஏகாம்ர பதியின் இல்லாளே! அழகிய பற்களினளே! ஒளியில், உவமையற்ற, திவ்விய மூர்த்தியே! மிக்கு அழகிய, லலிதையே!
- தேவீ! பழம்பொருளே! மறைகளால் போற்றப்பெற்றவளே! அனுதினமும், பெருமை அருள்பவளே! வெல்லப்படாதவளே! போரில், மூளையற்ற, அசுர மன்னர்களை வென்றவளே! தேவர்களால், இடையறாது போற்றப்பெற்றவளே! காம கோடி பீடத்தில் உறைபவளே! புவியில், எளியோரின் களஞ்சியமே! பரதேவதையே! புனித சரிதத்தினளே!
- உயரிய, கதம்ப வனத்தில் உறைபவளே! புவியில், பணியும் மக்களைக் காப்பதில் தலைவியே! ஈன்றவளே! பீதாம்பரம் அணிந்தவளே! அகன்ற, மீன் கண்களினளே! நற்கவிகளைப் பேணுபவளே! பாவங்கள், வெம்மைகளை நீக்குவதில் வல்லவளே! முகிலை வெல்லும் கார்குழலியே! பெருத்த இடுப்பினளே! கலாவதியே! கலையே!
- விரும்பியதருள்பவளே! கமல வதனத்தினளே! காமாட்சீ! பல்லுலக சாட்சியே! காமத்தில் களிப்பவளே! மன்மதனுக்கு நற்பயன் அருள்பவளே! புனுகு, வாசனை சந்தனம் அணிந்தவளே! கார்வண்ணத்தினளே! சியாம கிருஷ்ணனுக்கு, நல்ல வரமருள்பவளே! சியாமளையே! அண்டியோரின் களிப்பே! பேரறிவினளே! எவ்வமயமும், இங்கு வரமருள்பவளே!
- காப்பாய்.
- உனது கமலத் திருவடியினை அனுசரிக்கின்றேன்.
- தருவாய், எனது அறிவிற்கு, ஒப்பற்ற புகலினை.
- இங்கு, உனது பரிவு இருக்கட்டும்.
- இப்போது, எனது களிப்பாவாய்.
- காப்பாய்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பாஹி/ ஸ்ரீ/ கி3ரி/ ராஜ/ ஸுதே/ கருணா/ கலிதே/
காப்பாய்/ ஸ்ரீ/ மலை/ யரசன்/ மகளே/ கருணை/ யுடைவளே/
பத3 ஸரோஜம்-அனுஸராமி தே அம்ப3
திருவடி/ கமல/ அனுசரிக்கின்றேன்/ உனது/ அம்பையே/
அனுபல்லவி
தே3ஹி/ மதே:/ அனுபம/ க3திம்/ மே/ ஏக-அம்ர/ பதி/ ஸதி/ ஸுத3தி/
தருவாய்/ அறிவிற்கு/ ஒப்பற்ற/ புகலினை/ எனது/ ஏகாம்ர/ பதியின்/ இல்லாளே/ அழகிய பற்களினளே/
தேஜஸா/-அதுலித/ தி3வ்ய/ மூர்தே/ லலிதே/ அதி/ லலிதே/ (பாஹி)
ஒளியில்/ உவமையற்ற/ திவ்விய/ மூர்த்தியே/ லலிதையே/ மிக்கு/ அழகிய/
சரணம்
சரணம் 1
தே3வி/ புராணி/ நிக3ம/ வினுதே/ ப்ரீதி:/-இஹ/ வஸது/
தேவீ/ பழம்பொருளே/ மறைகளால்/ போற்றப்பெற்றவளே/ பரிவு/ இங்கு/ இருக்கட்டும்/
தே/ மானதே3/ அனுதி3னம்/-அஜிதே/ யுதி4/ ஜித/-இந்த்3ர/ விமதே/
உனது/ பெருமை அருள்பவளே/ அனுதினமும்/ வெல்லப்படாதவளே/ போரில்/ வென்றவளே/ (அசுர) மன்னர்களை/ மூளையற்ற/
தே3வ/-அவிரத/ க்ரு2த நுதே/ காம/ கோடி/ பீட2/ க3தே/
தேவர்களால்/ இடையறாது/ போற்றப்பெற்றவளே/ காம/ கோடி/ பீடத்தில்/ உறைபவளே/
தீ3ன ஜன/ நிகரே/ பு4வி/ பர/ தே3வதே/ ஸுசரிதே/ (பாஹி)
எளியோரின்/ களஞ்சியமே/ புவியில்/ பர/ தேவதையே/ புனித சரிதத்தினளே/
சரணம் 2
நீப/ வனீ/ பரம/ நிவஸனே/ நம்ர/ ஜக3த்/-அவன/
கதம்ப/ வனத்தில்/ உயரிய/ உறைபவளே/ பணியும் மக்களை/ புவியில்/ காப்பதில்/
நேத்ரி/ ஜனனி/ கனக/ வஸனே/ ஜ2ஷ/ விஸா1ல/ நயனே/
தலைவியே/ ஈன்றவளே/ பொன்/ ஆடை (பீதாம்பரம்)/ அணிந்தவளே/ மீன்/ அகன்ற/ கண்களினளே/
கோ3பாயித/ ஸுகவி ஜனே/ பாப/ தாப/ க2ண்ட3ன/ நிபுணே/
பேணுபவளே/ நற்கவிகளை/ பாவங்கள்/ வெம்மைகளை/ நீக்குவதில்/ வல்லவளே/
குந்தள/ விஜித/ க4னே/ க4ன/ ஜக4னே/ கலாவதி/ கலே/ (பாஹி)
கார்குழலி/ வெல்லும்/ முகிலை/ பெருத்த/ இடுப்பினளே/ கலாவதியே/ கலையே/
சரணம் 3
காமித/ தா4த்ரி/ கமல/ முகி2/ காமாக்ஷி/ அகி2ல/ ஸாக்ஷி/
விரும்பியது/ அருள்பவளே/ கமல/ வதனத்தினளே/ காமாட்சீ/ பல்லுலக/ சாட்சியே/
காம/ ரதி/ காம/ ஸு1ப4/ ப2லதே3/ த்4ரு2த/ ஸுக3ந்த4/ க4ன/ லதே/
காமத்தில்/ களிப்பவளே/ மன்மதனுக்கு/ நற்/ பயன் அருள்பவளே/ அணிந்தவளே/ சந்தனம்/ வாசனை/ புனுகு/
ஸ்1யாமே/ அத்3ய/ ப4வ/ மம/ முதே3/ ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸத்3/-வரதே3/
கார்வண்ணத்தினளே/ இப்போது/ ஆவாய்/ எனது/ களிப்பு/ சியாம/ கிருஷ்ணனுக்கு/ நல்ல/ வரமருள்பவளே/
ஸ்1யாமளே/ ஆஸ்1ரித/ ரதே/ விதி3த க3தே/ ஸதா3/ இஹ/ வரதே3/ (பாஹி)
சியாமளையே/ அண்டியோரின்/ களிப்பே/ பேரறிவினளே/ எவ்வமயமும்/ இங்கு/ வரமருள்பவளே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - மே ஏகாம்ர - மே (அம்ப3) ஏகாம்ர.
2 - ஏகாம்ர பதி ஸதி ஸுத3தி - ஏகாம்ர பதி ஸுத3தி ஸதி : பிற்கூறியது சரியெனத் தோன்றவில்லை.
3 - ஜிதேந்த்3ர விமதே - ஜிதேந்த்3ர வினுதே.
4 - தே3வாऽவிரத க்ரு2த நுதே - தே3வாऽவிர க்ரு2த நுதே : பிற்கூறியது சரியெனத் தோன்றவில்லை.
6 - தீ3ன ஜன நிகரே - தீ3ன ஜன நிஜ கரே : பிற்கூறியது சரியெனத் தோன்றவில்லை.
Top
9 - கோ3பாயித - கோ3பயித.
11 - க2ண்ட3ன நிபுணே - க2ண்ட3 நிபுணே - க2ண்ட3ன சண.
12 - கலாவதி கலே - கலாவதி ரதே - கலாவதி க4னே.
15 - ஸ்1யாமளே ஆஸ்1ரித ரதே - ஸ்1யாமளே உசித ரதே : பிற்கூறியது சரியெனத் தோன்றவில்லை.
17 - ஸதா3 இஹ வரதே3 - ஸதே3ஹ வரதே3.
Top
மேற்கோள்கள்
5 - காம கோடி பீட2 க3தே - காம கோடி பீடத்தில் உறைபவள் - லலிதா ஸஹஸ்ர நாமம் (589) - 'காம கோடிகா'. காம கோடி பீடம்
7 - நீப வனீ பரம நிவஸனே - உயரிய கதம்ப வனத்தினில் உறைபவள். லலிதா ஸஹஸ்ர நாமம் (60) - 'கதம்ப வன வாஸினி'. ஸௌந்தரிய லஹரி (8) - 'நீப உபவனவதி'.
10 - தாப - வெம்மைகள் - முவ்வெம்மைகள் - தன்னால் - தெய்வத்தினால் - இயற்கையினால் உண்டாவன
12 - கலாவதி கலே - கலாவதியே, கலையே - 64 கலைகளின் வடிவமானவள் - லலிதா ஸஹஸ்ர நாமம் (327) - 'சதுஷ்-ஷஷ்டி-கலாமயீ' (236) - அம்மையே கலைகளென.
13 - காம ரதி - காமத்தினில் களிப்பவள் - லலிதா ஸஹஸ்ர நாமம் (863) - 'காம கேளி தரங்கிதா'.
Top
விளக்கம்
1 - அனுபம க3திம் - புத்தகங்களில், இதற்கு, 'ஞானம்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது.
3 - யுதி4 ஜிதேந்த்3ர விமதே - இதற்கு, புத்தகங்களில், 'இந்திரனை வென்றும், பணிவுடையவள்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. என் சிற்றறிவுக்கு எட்டியவரையில், இது, அம்மை, பல அசுர மன்னர்களைப் போரில் வென்றதனைக் குறிக்கும் என்று நினைக்கின்றேன்.
8 - ஜ2ஷ விஸா1ல நயனே - அகன்ற மீன் கண்களினள் - இது 'மீனாட்சி'யினைக் குறிக்கலாம்.
14 - காம ஸு1ப4 ப2லதே3 - மன்மதனுக்கு நற்பயன் அருள்பவள் - சிவன், மன்மதனை எரித்தபின்னர், காமாட்சி அவனை (உடலின்றி) உயிர்ப்பித்தாள்.
16 - விதி3த க3தே - இதன் சரியான பொருள் விளங்கவில்லை. புத்தகங்களில், இதற்கு, 'அறிவு படைத்தவள்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அங்ஙனமே இங்கும் ஏற்கப்பட்டது.
மலையரசன் - இமயமலை
ஏகாம்ர பதி - ஏகாம்ரேசர் (ஏகாம்பரேசர்) - காஞ்சியில் சிவனின் பெயர்
Top
Updated on 18 May 2011