Saturday, March 26, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - கருணா நிதி4 இலலோ - ராகம் தோடி - Karuna Nidhi Ilalo - Raga Todi

பல்லவி
கருணா நிதி4 இலலோ நீவனுசுனு
கன்ன தல்லி வேடு3கொண்டினி நீ ஸ1ரணண்டினி

அனுபல்லவி
1அருணாம்பு33 நிப4 2சரணா ஸுர முனி
1ரணானந்தேஷ்ட தா3யகி ஸ்ரீ ப்3ரு2ஹந்-நாயகி (கருணா)

சரணம்
சரணம் 1
கா3ன வினோதி3னி நீ மஹிமாதிஸ1யம்பு3
எந்தடிவாட3னு தரமா ப்3ரோவ
தாமஸமிடு ஜேஸிதே அர நிமிஷமைன
தாள ஜாலனம்மா 3மாயம்மா (கருணா)


சரணம் 2
4பாமர பாலினி பாவனி நீவு க3தா3 நீ
பாத3மே
3தியனி 5நம்மினானு
கோமள ம்ரு2து3 பா4ஷிணீ க4ன ஸத்3ரு21 வேணீ
ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரீ கோ3கர்ணேஸ்1வருனி 6ராணி (கருணா)


பொருள் - சுருக்கம்
  • ஈன்ற தாயே!
  • இளங்காலை முகில் நிகர் திருவடிகளுடையவளே! வானோர், முனிவரின் புகலே! அளவற்ற விருப்பங்களை அருள்பவளே! பெரிய நாயகியே!
  • இசையில் மகிழ்பவளே! எமது தாயே!
  • பாமரர்களைக் காப்பவளே! கோமள, மிருதுவான சொல்லினளே! கார்முகில் நிகர் கூந்தலினளே! சியாம கிருஷ்ணனின் சோதரியே! கோகர்ணேஸ்வரரின் ராணியே!

  • கருணைக் கடல், இப்புவியில் நீயென, வேண்டிக்கொண்டேன்;
    • உனது சரணடைந்தேன்.

    • உனது மகிமையின் அதிசயங்களை எவ்வளவு என உரைக்க இயலுமா?
    • காப்பதற்கு தாமதம் இப்படிச் செய்தால், அரை நிமிடமும் பொறுக்க மாட்டேனம்மா.

    • புனிதப்படுத்துபவள் நீயன்றோ!
    • உனது பாதமே கதியென நம்பினேன்.


  • கருணைக் கடல், இப்புவியில் நீயென, வேண்டிக்கொண்டேன்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கருணா/ நிதி4/ இலலோ/ நீவு/-அனுசுனு/
கருணை/ கடல்/ இப்புவியில்/ நீயென/

கன்ன/ தல்லி/ வேடு3கொண்டினி/ நீ/ ஸ1ரணு/-அண்டினி/
ஈன்ற/ தாயே/ வேண்டிக்கொண்டேன்/ உனது/ சரண்/ அடைந்தேன்/


அனுபல்லவி
அருண/-அம்பு33/ நிப4/ சரணா/ ஸுர/ முனி/
இளங்காலை/ முகில்/ நிகர்/ திருவடிகளுடையவளே/ வானோர்/ முனிவரின்/

1ரண/-அனந்த/-இஷ்ட/ தா3யகி/ ஸ்ரீ ப்3ரு2ஹந்-நாயகி/ (கருணா)
புகலே/ அளவற்ற/ விருப்பங்களை/ அருள்பவளே/ ஸ்ரீ பெரிய நாயகியே/


சரணம்
சரணம் 1
கா3ன/ வினோதி3னி/ நீ/ மஹிம/-அதிஸ1யம்பு3ல/
இசையில்/ மகிழ்பவளே/ உனது/ மகிமையின்/ அதிசயங்களை/

எந்தடிவி/-ஆட3னு/ தரமா/ ப்3ரோவ/
எவ்வளவு (என)/ உரைக்க/ இயலுமா/ காப்பதற்கு/

தாமஸமு/-இடு/ ஜேஸிதே/ அர/ நிமிஷமைன/
தாமதம்/ இப்படி/ செய்தால்/ அரை/ நிமிடமும்/

தாள/ ஜாலனு/-அம்மா/ மா/ அம்மா/ (கருணா)
பொறுக்க/ மாட்டேன்/ அம்மா/ எமது/ தாயே/


சரணம் 2
பாமர/ பாலினி/ பாவனி/ நீவு/ க3தா3/ நீ/
பாமரர்களை/ காப்பவளே/ புனிதப்படுத்துபவள்/ நீ/ யன்றோ/ உனது/

பாத3மே/ க3தி/-அனி/ நம்மினானு/
பாதமே/ கதி/ யென/ நம்பினேன்/

கோமள/ ம்ரு2து3/ பா4ஷிணீ/ க4ன/ ஸத்3ரு21/ வேணீ/
கோமள/ மிருதுவான/ சொல்லினளே/ கார்முகில்/ நிகர்/ கூந்தலினளே/

ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸோத3ரீ/ கோ3கர்ணேஸ்1வருனி/ ராணி/ (கருணா)
சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/ கோகர்ணேஸ்வரரின்/ ராணியே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - சரணா ஸுர முனி - சரணா (அம்பா3) ஸுர முனி.

3 - மாயம்மா - நேடு3 நீ பாலுட3னு கா3னா : பிற்கூறியதில், 'நேடு3' என்பதற்கு பதிலாக, 'நேனு' என்றிருந்தால், 'நான் உனது மகனன்றோ?' என்று பொருள் கொள்ளலாம். எனவே, பிற்கூறியது இவ்விடத்தில் பொருந்தாது.

4 - பாமர பாலினி பாவனி நீவு க3தா3 நீ பாத3மே - பாமர பாவனி அம்பா பாவனி மூர்திவி நீவு க3தா3 நீது பாத3மே : பிற்கூறியதில், 'பாவனி' என்பதற்கு பதிலாக, 'பாவன' என்றிருந்தால், 'புனித உருவு நீயன்றோ?' என்று பொருள் கொள்ளலாம். எனவே பிற்கூறியது இவ்விடத்தில் பொருந்தாது.

5 - நம்மினானு - நம்மிதி.

6 - ராணி - ராணீ.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - அம்பு33 - புத்தகங்களில், இச்சொல்லுக்கு, 'தாமரை' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இச்சொல்லுக்கு, அத்தகைய பொருளேதும் இல்லை. இச்சொல்லுக்கு, 'முகில்' என்று பொருளாகும். 'அம்பு3ஜ' என்றிருந்தால்தான், 'தாமரை' என்று பொருள் கொள்ள இயலும். எனவே, 'முகில்' என்ற பொருள் கொள்ளப்பட்டது.

இளங்காலை முகில் நிகர் - சிவந்த
பெரிய நாயகி - புதுக்கோட்டையருகிலுள்ள திருக்கோகர்ணத்தில் அம்மையின் பெயர்.
சியாம கிருஷ்ண - விஷ்ணு - பாடலாசிரியர் முத்திரை

Top


Updated on 26 Mar 2011

3 comments:

  1. migavum arumayana vilakangal. mikka nandri

    ReplyDelete
  2. அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே

    சரணம் 1-- எந்தடிவாட3னு- இந்த சொல்லை எந்தடிவி + ஆட3னு என்று பிரித்துள்ளீர். வி+ஆ, வா ஆகுமா என்பது சந்தேகத்திற்குரியது. எந்தடிவி என்பது என்னிடிவி என்று இருக்கவேண்டுமா.

    இந்த சொல் ‘நான் தகுதியுடையவனா’ என்ற பொருளில் தான் வழங்கப் படும் என்று நான் எண்ணுகிறேன். அவ்வாறாயின் (உனது/ மகிமையின்/ அதிசயங்களைக்) கூற என்றவினைச்சொல் தேவைப் படுகிறது.

    வணக்கம்,
    கோவிந்தஸ்வாமி

    ReplyDelete
    Replies
    1. திரு கோவிந்தஸ்வாமி அவர்களுக்கு,

      'எந்தடிவி' என்பது பேச்சு வழக்கில் 'எந்தடி' என்று வரும். 'எந்தடி+ஆட3னு' சேர்ந்தால் 'எந்தடிவாட3னு' என்று வரும். பொருள் மாறுபாடு இல்லையாதலால் திருத்தம் தேவையில்லை என கருதுகின்றேன்.

      'எந்தடிவி' என்பதற்கு 'how much' என்றும் 'என்னிடிவி' என்பதற்கு 'how many' என்று பொருள்.

      'நான் தகுதியுடையவனா' என்று பொருள் கொள்வதற்கு, சரணத்தின் சொற்களில்லை.

      'உரைக்க' என்ற சொல்லை 'கூற' என்பதற்கு பதிலாக பயன்படுத்தியுள்ளேன்.

      வணக்கம்
      கோவிந்தன்.

      Delete