Saturday, May 28, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ப்3ரு2ஹந்நாயகீ - ராகம் மத்யமாவதி - Brhanayaki - Raga Madhyamavati

பல்லவி
ப்3ரு2ஹந்-நாயகீ 1நன்னு ப்3ரோவு வேக3மே

அனுபல்லவி
ப்3ரு2ஹ(த3)ம்பா3 நீ மஹிமலு
ப்3ரஹ்(மா)தி3 ஸுருலசே பொக33 தரமா (ப்3ரு2ஹந்நாயகீ)

சரணம்
சரணம் 1
தே3வீ நீவே க3தி(ய)னி அம்பா3 த்3ரு244க்திதோ
பூஜிஞ்சே க3தா3 நா வெத
தீ3ர்சவே கருண ஜூட3 ஸமய(மி)தே3
நீ பாத3மே க3தி(ய)னுசு நெர நம்மிதி (ப்3ரு2ஹந்நாயகீ)


சரணம் 2
தீ3ன ரக்ஷகி நீ(வ)னி ஸதா33லசின
தா3ஸுடு3 நேனு க3தா3 மா(க)ப4
தா3ன(மீ)யவே காமித தா3யிகே
2நீ நாமமே அனுதி3னமு மரவகனு (ப்3ரு2ஹந்நாயகீ)


சரணம் 3
ஸ்1யாம க்ரு2ஷ்ண பாலினி கௌ3ரி ஸுலலிதே
ஸ்1யாமளே நாதோ வாதா3 மா(ய)ம்மா
ஈ மஹிலோ நீ ஸமான தை3வ(மெ)வரு
ஈ வேளனு து3ரமுக3னு வர(மொ)ஸகு3 (ப்3ரு2ஹந்நாயகீ)


பொருள் - சுருக்கம்
  • பெரிய நாயகியே!
  • பேரண்டத் தாயே!
  • தேவீ! அம்பையே!
  • விரும்பியதருள்பவளே!
  • சியாம கிருஷ்ணனைப் பேணுபவளே! கௌரீ! புனித லலிதையே! சியாமளையே! எமதம்மா!

  • என்னைக் காப்பாய், விரைவாக.

    • உனது மகிமைகளை, பிரமன் முதலாக, தேவர்களாலும் புகழத் தரமா?
    • நீயே கதியென, திடமான பக்தியுடன் தொழுகின்றேன், அன்றோ?
    • எனது துயரினைத் தீர்ப்பாயம்மா.
    • கருணை காட்ட சமயமிஃதே.
    • உனது திருவடியே கதியென, மிக்கு நம்பினேன்.

    • உனது நாமமே, அனுதினமும், மறவாது, எளியோரைக் காப்பவள் நீயென, எவ்வமயமும், நினைத்த தொண்டன் நானல்லவா?
    • எமக்கு அபய தானம் தருவாயம்மா.

    • என்னுடன் வாதா?
    • இப்புவியில், உனது சமான தெய்வம் எவர்?
    • இவ்வேளையில், விரைவாக, வரமருள்வாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ப்3ரு2ஹத்/-நாயகீ/ நன்னு/ ப்3ரோவு/ வேக3மே/
பெரிய/ நாயகியே/ என்னை/ காப்பாய்/ விரைவாக/


அனுபல்லவி
ப்3ரு2ஹத்/-அம்பா3/ நீ/ மஹிமலு/
பேரண்ட/ தாயே/ உனது/ மகிமைகளை/

ப்3ரஹ்மா/-ஆதி3/ ஸுருலசே/ பொக33/ தரமா/ (ப்3ரு2ஹந்நாயகீ)
பிரமன்/ முதலாக/ தேவர்களாலும்/ புகழ/ தரமா/


சரணம்
சரணம் 1
தே3வீ/ நீவே/ க3தி/-அனி/ அம்பா3/ த்3ரு24/ ப4க்திதோ/
தேவீ/ நீயே/ கதி/ யென/ அம்பையே/ திடமான/ பக்தியுடன்/

பூஜிஞ்சே/ க3தா3/ நா/ வெத/
தொழுகின்றேன்/ அன்றோ/ எனது/ துயரினை/

தீ3ர்சவே/ கருண/ ஜூட3/ ஸமயமு/-இதே3/
தீர்ப்பாயம்மா/ கருணை/ காட்ட/ சமயம்/ இஃதே/

நீ/ பாத3மே/ க3தி/-அனுசு/ நெர/ நம்மிதி/ (ப்3ரு2ஹந்நாயகீ)
உனது/ திருவடியே/ கதி/ யென/ மிக்கு/ நம்பினேன்/


சரணம் 2
தீ3ன/ ரக்ஷகி/ நீவு/-அனி/ ஸதா3/ த3லசின/
எளியோரை/ காப்பவள்/ நீ/ யென/ எவ்வமயமும்/ நினைத்த/

தா3ஸுடு3/ நேனு/ க3தா3/ மாகு/-அப4ய/
தொண்டன்/ நான்/ அல்லவா/ எமக்கு/ அபய/

தா3னமு/-ஈயவே/ காமித/ தா3யிகே/
தானம்/ தருவாயம்மா/ விரும்பியது/ அருள்பவளே/

நீ/ நாமமே/ அனுதி3னமு/ மரவகனு/ (ப்3ரு2ஹந்நாயகீ)
உனது/ நாமமே/ அனுதினமும்/ மறவாது/


சரணம் 3
ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ பாலினி/ கௌ3ரி/ ஸுலலிதே/
சியாம/ கிருஷ்ணனை/ பேணுபவளே/ கௌரீ/ புனித/ லலிதையே/

ஸ்1யாமளே/ நாதோ/ வாதா3/ மா/-அம்மா/
சியாமளையே/ என்னுடன்/ வாதா/ எமது/ அம்மா/

ஈ/ மஹிலோ/ நீ/ ஸமான/ தை3வமு/-எவரு/
இந்த/ புவியில்/ உனது/ சமான/ தெய்வம்/ எவர்/

ஈ/ வேளனு/ து3ரமுக3னு/ வரமு/-ஒஸகு3/ (ப்3ரு2ஹந்நாயகீ)
இந்த/ வேளையில்/ விரைவாக/ வரம்/ அருள்வாய்/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நன்னு ப்3ரோவு - நன்னு ப்3ரோவ : இவ்விடத்தில், 'ப்3ரோவ' என்பது பொருந்தாது.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
2 - நீ நாமமே அனுதி3னமு மரவகனு (உனது நாமமே அனுதினமும் மறவாது) - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு, 'உனது நாமத்தினை மறவேன்' என்று, அவற்றினில், பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அத்தகைய பொருள் கொள்வதற்கு, 'மரவனு' (மறவேன்) என்றிருக்க வேண்டும். இந்த வரியை, பல்லவியுடனும் இணைக்கமுடியாது. அப்படி இணைப்பதற்கு, 'மரவனி' (மறக்காத) என்றிருக்கவேண்டும். எனவே, இந்த வரி, சரணத்தின் முதல் வரியுடன் இணைத்து பொருள் கொள்ளப்பட்டது. ஆனால் 'ஸதா3', 'அனுதி3னமு' என்ற ஒரே பொருளுடைய இரண்டு சொற்கள், இதனில் உள்ளன. அவற்றினில் ஒன்று மிகுதியாகும்.

Top


Updated on 29 May 2011

2 comments:

  1. திரு கோவிந்தன் அவர்களே

    சரணம் 1- பூஜிஞ்சே க3தா3 - இதற்கு தொழுகின்றேன் அன்றோ என்று பொருள் கொடுத்துள்ளீர். பூஜிஞ்சே என்றால் தொழும் என்று தானே பொருள்.
    பூஜிஞ்செத/ பூஜிஞ்சிதி என்றால் தொழுகின்றேன் / தொழுதேன் என்று பொருள் தரும்.
    வணக்கம்
    கோவிந்தசாமி

    ReplyDelete
  2. திரு கோவிந்தசாமி அவர்களே,

    இவ்விடத்தில் 'பூஜிஞ்சே' என்பது 'பூஜிஞ்சேனு' அல்லது 'பூஜிஞ்செத3' என்பதன் குறுக்கமாகக் கொள்ளலாம். இலக்கிய நடையில், 'னு' போன்ற கடைசி எழுத்துக்களைக் குறுக்குதல், தியாகராஜரின் கீர்த்தனைகளிலும் காணப்படுகின்றது.

    வணக்கம்
    கோவிந்தன்

    ReplyDelete