Wednesday, June 29, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - பி3ரான வராலிச்சி - ராகம் கல்யாணி - Birana Varalicchi - Raga Kalyani

பல்லவி
பி3ரான வரா(லி)ச்சி ப்3ரோவுமு நினு நெர நம்மிதி

அனுபல்லவி
பு(ரா)ரி மனோ-ஹாரிணீ ஸ்ரீ காமாக்ஷி (பி3ரான)

சரணம்
சரணம் 1
1தாமஸமு ஸேயகே நீவு கருணா நிதி4
2கா3தா3 பராமுக2(மி)க(னே)ல வினு ஸரோஜ முகி2 (பி3ரான)


சரணம் 2
3காமி(தா)ர்த22ல தா3யகீ தே3வீ நத கல்ப
லதிகா புராணி மது4ர வாணி 4ஸி1வுனிகி ராணி (பி3ரான)


சரணம் 3
ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரி கௌ3ரீ பர(மே)ஸ்1வரீ
கி3ரிஜா அனாத2 ரக்ஷணம்பு3 5ஸலுபக3 ராவே (பி3ரான)


பொருள் - சுருக்கம்
  • புரமெரித்தோனின் உள்ளம் கவர்பவளே, ஸ்ரீ காமாட்சீ!
  • கமல வதனத்தினளே!
  • விரும்பிய பொருட்பயன் அருள்பவளே! தேவீ! பணிந்தோரின் கற்பகக் கொடியே! பழம்பொருளே! இனிய குரலினளே! சிவனின் ராணியே!
  • சியாம கிருஷ்ணனின் சோதரியே! கௌரீ! பரமேசுவரீ! மலைமகளே!

  • விரைவாக வரங்கள் தந்து, காப்பாயம்மா.
  • உன்னை மிக்கு நம்பினேன்.

    • தாமதம் செய்யாதே.
    • நீ கருணைக் கடல் அன்றோ?
    • பராமுகம் இனியுமேன்?
    • கேளாய்.

    • அனாதைகளைக் காத்தருள வாராயம்மா.


  • விரைவாக வரங்கள் தந்து, காப்பாயம்மா.
  • உன்னை மிக்கு நம்பினேன்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பி3ரான/ வராலு/-இச்சி/ ப்3ரோவுமு/ நினு/ நெர/ நம்மிதி/
விரைவாக/ வரங்கள்/ தந்து/ காப்பாயம்மா/ உன்னை/ மிக்கு/ நம்பினேன்/


அனுபல்லவி
புர/-அரி/ மனோ/-ஹாரிணீ/ ஸ்ரீ/ காமாக்ஷி/ (பி3ரான)
புரம்/ எரித்தோனின்/ உள்ளம்/ கவர்பவளே/ ஸ்ரீ/ காமாட்சீ/


சரணம்
சரணம் 1
தாமஸமு/ ஸேயகே/ நீவு/ கருணா/ நிதி4/
தாமதம்/ செய்யாதே/ நீ/ கருணை/ கடல்/

கா3தா3/ பராமுக2மு/-இகனு/-ஏல/ வினு/ ஸரோஜ/ முகி2/ (பி3ரான)
அன்றோ/ பராமுகம்/ இனியும்/ ஏன்/ கேளாய்/ கமல/ வதனத்தினளே/


சரணம் 2
காமித/-அர்த2/ ப2ல/ தா3யகீ/ தே3வீ/ நத/ கல்ப/
விரும்பிய/ பொருட்/ பயன்/ அருள்பவளே/ தேவீ/ பணிந்தோரின்/ கற்பக/

லதிகா/ புராணி/ மது4ர/ வாணி/ ஸி1வுனிகி/ ராணி/ (பி3ரான)
கொடியே/ பழம்பொருளே/ இனிய/ குரலினளே/ சிவனின்/ ராணியே/


சரணம் 3
ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸோத3ரி/ கௌ3ரீ/ பரம-ஈஸ்1வரீ/
சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/ கௌரீ/ பரமேசுவரீ/

கி3ரிஜா/ அனாத2/ ரக்ஷணம்பு3/ ஸலுபக3/ ராவே/ (பி3ரான)
மலைமகளே/ அனாதைகளை/ காத்து/ அருள/ வாராயம்மா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - தாமஸமு ஸேயகே - தாமஸமு ஸேயக - தாமஸமு ஸேயகனே : இவ்விடத்தில், 'தாமஸமு ஸேயகே' அல்லது 'தாமஸமு ஸேயக' என்பதுதான் மிக்குப் பொருந்தும்.
2 - கா3தா3 - கா3வா.
3 - காமிதார்த22ல தா3யகீ - காமிதார்த2 தா3யகீ.
4 - ஸி1வுனிகி ராணி - ஸி1வுனிகி ராணி க3தா3.
5 - ஸலுபக3 ராவே - ஸலுபிதே வினனு : பிற்கூறியது, இவ்விடத்தில், என்ன பொருள் இருக்கவேண்டுமோ, அதற்கு எதிர்மாறாக இருப்பதனால், அது தவறாகும்.
Top

மேற்கோள்கள்

விளக்கம்
புரமெரித்தோன் - சிவன்
கற்பகக் கொடி - விரும்பியதருளும் கற்பக மரத்தின் கொடி.
Top


Updated on 30 Jun 2011

No comments:

Post a Comment