Friday, June 24, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - கருண ஜூட3வம்மா - ராம் வராளி - Karuna Judavamma - Raga Varali

பல்லவி
கருண ஜூ(ட3வ)ம்மா 1வி(ன)ம்மா
ஆஸ்1ரித ஜன
கல்ப வல்லீ 2மா தல்லீ

அனுபல்லவி
மரக(தா)ங்கி3 பஞ்ச ந(தே3)ஸு1 ராணி
மது4ர வாணி த4ர்ம ஸம்வர்த4னி (கருண)

சரணம்
சரணம் 1
ந(ரா)த4முலனு மஹா ராஜு(ல)னி பொக3டி3
3து3(ரா)ஸசே திரிகி3 வேஸாரி இலலோ
விராஜ முகி2 நீவு த3யதோ காபாடி3
பி3ரான வர(மீ)யவே கி3ரி ராஜ ஸுதா நீவு (கருண)


சரணம் 2
உமா பு4வினி நீகு ஸமான(மெ)வரு
பா4ரமா ரக்ஷிஞ்சுடகு அபி4மானமு லே(த3)னி
4குமாருடு33தா3 நா(கி)புடு3 அப4ய(மீ)யவே
குமார ஜனனி நீவு 5மான(வா)தீத க3தா3 (கருண)


சரணம் 3
உதா3ர கு3ணவதி க3தா3 ஸாம கா3ன நுதா
ஸதா3 நுதி ஜேரி நீ ப(தா3)ம்பு3ஜமுலனு
தா3ஸுனி மொர வினவா ஸமய(மி)தே3
ஸதா3-ஸி1வுனி ரமணீ தீ3ன ஜ(னா)ஸ்1ரிதே (கருண)


சரணம் 4
உதா3ரமுக3னு அவதார(மெ)த்தி ஜக3முனு
ஸுதா4-கருனி வலெ ரஞ்ஜிம்ப ஜேயு நீ
6ப(தா3)ம்பு3ஜமுனு நம்மி நின்னே ப4ஜிஞ்சி
ஸதா3 ஸ்1யாம க்ரு2ஷ்ண ஜேஸின பா4க்3யமே (கருண)


பொருள் - சுருக்கம்
  • நம்பும் மக்களின், கற்பவல்லியே! எமது தாயே!
  • மரகதாங்கியே! திருவையாறு இறைவனின் ராணியே! இனிய குரலினளே! அறம் வளர்த்த நாயகியே!
  • ஒளிரும் முகத்தினளே! மலையரசன் மகளே!
  • உமையே! முருகனை யீன்றவளே!
  • சாம கானத்தினால் போற்றப்பெற்றவளே! சதாசிவனின் இல்லாளே! எளிய மக்களின் புகலே!

  • கருணை காட்டுவாயம்மா.
  • கேளம்மா.

    • நீ மதிக்கப்பெற்றவளன்றோ?
    • உதார குணவதியன்றோ?
    • புவியில், உனக்கு சமானமெவர்?

    • மனிதரில் இழிந்தோரை, மகாராஜர்களெனப் புகழ்ந்து, வீணாசையுடன் திரிந்து, தளர்ந்தேன், உலகினில்.

    • பளுவா காப்பதற்கு, என்னிடம் அன்பு இல்லையென?
    • மகன் அன்றோ?
    • எவ்வமயமும், உன்னைப் போற்றி, உனது திருவடித் தாமரைகளை யடைந்த, தொண்டனின் முறையீட்டினைக் கேளாயோ?

    • எனக்கிப்போது, புகலருள்வாயம்மா.
    • நீ தயையுடன் காப்பாற்றி, விரைவில், வரமருள்வாயம்மா.
    • சமயமிதுவே.

    • மேன்மையுடன் அவதாரமெடுத்து, அனைத்துலகினையும், தண்மதியினைப் போன்று, மகிழ்விக்கும் உனது திருவடித் தாமரையினை நம்பி, உன்னையே பஜித்தது, எவ்வமயமும், சியாம கிருஷ்ணன் செய்த பேறே.


  • நீ கருணை காட்டுவாயம்மா.
  • கேளம்மா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கருண/ ஜூடு3/-அம்மா/ வினு/-அம்மா/
கருணை/ காட்டுவாய்/ அம்மா/ கேள்/ அம்மா/

ஆஸ்1ரித/ ஜன/ கல்ப/ வல்லீ/ மா/ தல்லீ/
நம்பும்/ மக்களின்/ கற்ப/ வல்லியே/ எமது/ தாயே/


அனுபல்லவி
மரகத/-அங்கி3/ பஞ்ச நத3/-ஈஸு1/ ராணி/
மரகத/ அங்கியே/ திருவையாறு/ இறைவனின்/ ராணியே/

மது4ர/ வாணி/ த4ர்ம/ ஸம்வர்த4னி/ (கருண)
இனிய/ குரலினளே/ அறம்/ வளர்த்த நாயகியே/


சரணம்
சரணம் 1
நர/-அத4முலனு/ மஹா/ ராஜுலு/-அனி/ பொக3டி3/
மனிதரில்/ இழிந்தோரை/ மகா/ ராஜர்கள்/ என/ புகழ்ந்து/

து3ராஸசே/ திரிகி3/ வேஸாரி/ இலலோ/
வீணாசையுடன்/ திரிந்து/ தளர்ந்தேன்/ உலகினில்/

விராஜ/ முகி2/ நீவு/ த3யதோ/ காபாடி3/
ஒளிரும்/ முகத்தினளே/ நீ/ தயையுடன்/ காப்பாற்றி/

பி3ரான/ வரமு/-ஈயவே/ கி3ரி/ ராஜ/ ஸுதா/ நீவு/ (கருண)
விரைவில்/ வரம்/ அருள்வாயம்மா/ மலை/ யரசன்/ மகளே/ நீ/ (கருணை)


சரணம் 2
உமா/ பு4வினி/ நீகு/ ஸமானமு/-எவரு/
உமையே/ புவியில்/ உனக்கு/ சமானம்/ எவர்/

பா4ரமா/ ரக்ஷிஞ்சுடகு/ அபி4மானமு/ லேது3/-அனி/
பளுவா/ காப்பதற்கு/ என்னிடம்/ அன்பு/ இல்லை/ யென/

குமாருடு3/ க3தா3/ நாகு/-இபுடு3/ அப4யமு/-ஈயவே/
மகன்/ அன்றோ/ எனக்கு/ இப்போது/ புகல்/ அருள்வாயம்மா/

குமார/ ஜனனி/ நீவு/ மானவ-அதீத/ க3தா3/ (கருண)
முருகனை/ யீன்றவளே/ நீ/ மதிக்கப்பெற்றவள்/ அன்றோ/


சரணம் 3
உதா3ர/ கு3ணவதி/ க3தா3/ ஸாம/ கா3ன/ நுதா/
உதார/ குணவதி/ யன்றோ/ சாம/ கானத்தினால்/ போற்றப்பெற்றவளே/

ஸதா3/ நுதி/ ஜேரி/ நீ/ பத3/-அம்பு3ஜமுலனு/
எவ்வமயமும்/ (உன்னை) போற்றி/ அடைந்த/ உனது/ திருவடி/ தாமரைகளை/

தா3ஸுனி/ மொர/ வினவா/ ஸமயமு/-இதே3/
தொண்டனின்/ முறையீட்டினை/ கேளாயோ/ சமயம்/ இதுவே/

ஸதா3/-ஸி1வுனி/ ரமணீ/ தீ3ன/ ஜன/-ஆஸ்1ரிதே/ (கருண)
சதா/ சிவனின்/ இல்லாளே/ எளிய/ மக்களின்/ புகலே/


சரணம் 4
உதா3ரமுக3னு/ அவதாரமு/-எத்தி/ ஜக3முனு/
மேன்மையுடன்/ அவதாரம்/ எடுத்து/ அனைத்துலகினையும்/

ஸுதா4-கருனி/ வலெ/ ரஞ்ஜிம்ப ஜேயு/ நீ/
தண்மதியினை/ போன்று/ மகிழ்விக்கும்/ உனது/

பத3/-அம்பு3ஜமுனு/ நம்மி/ நின்னே/ ப4ஜிஞ்சி/
திருவடி/ தாமரையினை/ நம்பி/ உன்னையே/ பஜித்தது/

ஸதா3/ ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஜேஸின/ பா4க்3யமே/ (கருண)
எவ்வமயமும்/ சியாம/ கிருஷ்ணன்/ செய்த/ பேறே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - வினம்மா ஆஸ்1ரித ஜன - வினம்மா ஸ்1ரித ஜன - வினவம்மா ஆஸ்1ரித ஜன. இம்மூன்றிலும் பொருள் வேறுபாடு பெரிதேதும் இல்லை.

2 - மா தல்லீ - மா தல்லீ மா தல்லீ.

3 - து3ராஸசே - து3ராஸ1சே : 'து3ராஸசே' என்பதே சரியெனக் கருதுகின்றேன்.

4 - குமாருடு33தா3 நாகிபுடு3 அப4யமீயவே - குமாருடு33தா3 நேனு இபுடு3 அப4யமீயவே : பிற்கூறியது சரியென்றால், 'குமாருடு33தா3 நேனு' என்று சேர்த்து, 'மகன் அல்லவோ நான்' என்று பொருள் கொள்ளப்படும்.
Top

5 - மானவாதீத க3தா3 - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு 'மதிக்கப்பெற்றவள் அன்றோ' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், அத்தகைய பொருளுக்கு, 'மானவதி க3தா3' என்றிருக்க வேண்டும். கொடுத்துள்ள சொற்களை, 'மானவ அதீத க3தா3' என்று பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். இதற்கு, 'மனிதர்களுக்கு அப்பாற்பட்டவள் அன்றோ' என்று பொருளாகும். அத்தகைய பொருள், பொருத்தமாகத் தோன்றவில்லை. எனவே, புத்தகங்களில் கொடுக்கப்பட்ட 'மதிக்கப்பெற்றவள் அன்றோ' என்ற பொருளே பொருத்தமாக உள்ளதாக நான் கருதுகின்றேன். எனவே, இங்கு, 'மானவதி க3தா3' என்றிருக்க வேண்டும் என்று நான் கருதுகின்றேன்.

6 - பதா3ம்பு3ஜமுனு நம்மி - பதா3ம்பு3ஜ நம்மி : பிற்கூறியது சரியல்ல.
Top

மேற்கோள்கள்

விளக்கம்
அனைத்து சரணங்களிலும், சொற்களின் அமைப்பினை நோக்குகையில், முழுமையாகப் பொருள் கொள்வது கடினமாக உள்ளது. (ச1 - 'து3ராஸசே திரிகி3 வேஸாரி' - வீணாசையினால் திரிந்து தளர்ந்து; ச2 - 'அபி4மானமு லேத3னி' - அன்பு இல்லையென; ச3 - 'ஸதா3 நுதி ஜேரி நீ பதா3ம்பு3ஜமுலனு' - எவ்வமயமும் போற்றி அடைந்து உனது திருவடித் தாமரைகளினை; ச4 - 'பதா3ம்பு3ஜமுனு நம்மி நின்னே ப4ஜிஞ்சி' - திருவடித் தாமரையினை நம்பி உன்னையே பஜித்து). ஆயினும், பொருள் நிறைவுறுவதற்காக, சில சொற்களை இடம் மாற்றியமைத்தும், சொற்கள் சிலவற்றைக் கூட்டியும் இடத்திற்குத் தகுந்த பொருள் கொள்ளப்பட்டது.

மரகதாங்கி - மரகத நிற உடலினள்
அறம் வளர்த்த நாயகி - தர்ம ஸம்வர்த்தனி எனப்படும் திருவையாறு அம்மை
Top


Updated on 24 Jun 2011

2 comments:

  1. அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே

    சரணம் 1- வேஸாரி என்பதை வேஸார என்று எடுத்துக்கொண்டால் ‘திரிந்து தளர’ என்று பொருள் தருமே.
    வேஸாரி வினைமுற்று அல்லவே.

    சரணம் 2- அபி4மானமு லே(த3)னி - அபி4மானமு லேதாயெ என்று இருக்குமா?

    சரணம் 3- ஸதா3 நுதி ஜேரி நீ ப(தா3)ம்பு3ஜமுலனு
    தா3ஸுனி- ஸதா3 நுதி ஜேஸின நீ ப(தா3)ம்பு3ஜமுல
    தா3ஸுனி என்பது சரியா?

    வணக்கம்
    கோவிந்தசாமி

    ReplyDelete
  2. திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

    சரணம் 1 - 'வேஸார' என்பது சரியாகாது. 'வேஸாரக3' என்றிருந்தால் முழுமையாகப் பொருள் கொள்ளலாம்.
    சரணம் 2 - 'லேதா3யெ' என்று எந்த புத்தகத்திலும் கொடுக்கப்படவில்லை.
    சரணம் 3 - 'தா3ஸுனி' என்ற சொல் 'மொர வினவா' என்பதுடன் இணைப்பதுதான் பொருந்தும் என்று நான் நினைக்கின்றேன்.
    இந்த சரணங்களில், சொற்கள், இலக்கணப்படி, நிறைவுறாவிடினும், முரண்பாடுகள் ஏதும் இல்லை. எனவே, பொருள் நிறைவுறுவதற்காக, சில சொற்களை சேர்த்துள்ளேன் என்பதை விளக்கியுள்ளேன்.

    நீங்கள் கூறியபடியே சொற்களை மாற்றியமைத்தாலும், பொருளில் ஏதும் வேறுபாடு உண்டாகாது.

    வணக்கம்,
    வே கோவிந்தன்.

    ReplyDelete