Thursday, April 28, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ஸ்ரீபதி முக2 - ராகம் ஸாவேரி - Sripati Mukha - Raga Saveri

பல்லவி
ஸ்ரீ-பதி முக2 விரசித பூஜ்யே
ஸ்ரீ பார்வதி மாம் பாஹி தே3வி

அனுபல்லவி
1நீப வன நிலயே நிராமயே
நிடில நயன ஜாயே மம ஹ்ரு23
தாப ஹாரிணி 2நவ ரத்(னா)லயே
தாபஸ வர நாரத3 முதி3தே தே3வி (ஸ்ரீ-பதி)

சரணம்
சரணம் 1
தருணி லதா பல்லவ ம்ரு2து3 சரணே
தபன விது4 விலோசனே
அருண கோடி ஸம காந்தி யுத
1ரீரே கல த்4ரு2த கலாபே
ஸுருசிர 3மணி கண்ட2 லஸன்-மணி ஹாரே
ஸுகு3ண-ஸீ1லே ஸததம் ஸமுத3ம்
கருணயா அவ தீ3னம் பர தே3வதே
4காம கோடி பீட23தே லலிதே (ஸ்ரீ-பதி)


சரணம் 2
கரி முக2 கார்திகேய ஜனனி
ஸ்வர பாலினி பாவனி
ஹரி ஸஹோத3ரி வித3ளித
தை3த்(யா)ரி க3ணே 5ஸதா3 பூர்ணே
6பரமேஸ1 வினுதே ஸ்1ரித ஜன பாலிதே
ப்ரீதி(ரி)ஹ வஸது விமலே
புர ஹர ப்ரியே ஸ1ஸி1 நி(பா4)னனே
பூர்ண காமே ஸாம கா3ன லோலே (ஸ்ரீ-பதி)


சரணம் 3
ஸ்1யாம(ளா)ங்கி3 மஞ்ஜுள வாணி
ஸகல ப4ய நிவாரிணி
ஹே ம(ஹே)ஸ்1வரி மது4ப ஸத்3ரு21
வேணி 7கா(மே)ஸ்1வரி கௌ3ரி
ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரி பு4வ(னே)ஸ்1வரி
ஸா1ம்ப4வி மஹா த்ரிபுர ஸுந்த3ரி
ஹிம கி3ரி குமாரி கவி குல
காமதே3 காங்க்ஷித ப2ல தா3யிகே (ஸ்ரீ-பதி)


பொருள் - சுருக்கம்
  • மாமணாளன் முதலானோரால் தொழப்பெற்றவளே! ஸ்ரீ பார்வதீ! தேவீ!
  • கதம்ப வனத்தில் நிலைபெற்றவளே! குறைவற்றவளே! நெற்றிக் கண்ணனின் இல்லாளே! எனது இதய வெம்மையினைத் தணிப்பவளே! நவரத்தின இல்லத்தில் உறைபவளே! தவசி, உயர் நாரதரால் அகமகிழ்பவளே, தேவீ!
  • என்றும் இளமங்கையே! கொடிக் குருத்து நிகர், மிருதுவான திருவடியினளே! பரிதி, மதிக் கண்களினளே! அருணன் கோடி நிகர், (சிவந்த) காந்தியுடைய மேனியளே! பிறையணியும், மதியே! (மதி நிகர் அழகியே!) மணிமாலை மிளிரும், அழகிய மிடற்றினளே! நற்பண்பினளே! பரதேவதையே! காம கோடி பீடத்தினில் உறைபவளே, லலிதையே!
  • ஆனை முகத்தோன் மற்றும் கார்த்திகேயனை ஈன்றவளே! இசையின் சுரங்களைப் பேணுபவளே! புனிதமானவளே! அரியின் சோதரியே! தேவர்களின் பகைவர் கும்பலை அழித்தவளே! என்றும் பூரணியே! பரமேசனால் போற்றப்பெற்றவளே! சார்ந்தோரைக் காப்பவளே! களங்கமற்றவளே! புரமெரித்தோனுக்கு இனியவளே! மதி நிகர் முகத்தினளே! விருப்பங்கள் யாவும் நிறைவேறப்பெற்றவளே! சாம கானத்தினில் மகிழ்பவளே!
  • கருநீல அங்கத்தினளே! (மேனியளே) இனிய குரலினளே! அனைத்து அச்சங்களையும் போக்கடிப்பவளே! ஏ மகேசுவரீ! தேன் வண்டு நிகர், கருங்குழலியே! காமேசுவரியே! கௌரீ! சியாம கிருஷ்ணனின் சோதரியே! புவனேசுவரியே! சாம்பவியே! மகா திரிபுர சுந்தரீ! இமய மலை மகளே! கவிக் குலத்திற்கு, வேண்டியதருள்பவளே! விழைந்த பயனருள்பவளே!

    • என்னைக் காப்பாய்.
    • எவ்வமயமும், மகிழ்வுடனும், கருணையுடனும் காப்பாய், இந்த எளியோனை.
    • அன்பு, இங்கு குடியிருக்கட்டும்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ/-பதி/ முக2/ விரசித பூஜ்யே/
மா/ மணாளன்/ முதலானோரால்/ தொழப்பெற்றவளே/

ஸ்ரீ பார்வதி/ மாம்/ பாஹி/ தே3வி/
ஸ்ரீ பார்வதீ/ என்னை/ காப்பாய்/ தேவீ/


அனுபல்லவி
நீப/ வன/ நிலயே/ நிராமயே/
கதம்ப/ வனத்தில்/ நிலைபெற்றவளே/ குறைவற்றவளே/

நிடில/ நயன/ ஜாயே/ மம/ ஹ்ரு23ய/
நெற்றி/ கண்ணனின்/ இல்லாளே/ எனது/ இதய/

தாப/ ஹாரிணி/ நவ/ ரத்ன/-ஆலயே/
வெம்மையினை/ தணிப்பவளே/ நவ/ ரத்தின/ இல்லத்தில் உறைபவளே/

தாபஸ/ வர/ நாரத3/ முதி3தே/ தே3வி/ (ஸ்ரீ-பதி)
தவசி/ உயர்/ நாரதரால்/ அகமகிழ்பவளே/ தேவீ/


சரணம்
சரணம் 1
தருணி/ லதா/ பல்லவ/ ம்ரு2து3/ சரணே/
(என்றும்) இளமங்கையே/ கொடி/ குருத்து/ (நிகர்) மிருதுவான/ திருவடியினளே/

தபன/ விது4/ விலோசனே/
பரிதி/ மதி/ கண்களினளே/

அருண/ கோடி/ ஸம/ காந்தி/ யுத/
அருணன்/ கோடி/ நிகர்/ (சிவந்த) காந்தி/ யுடைய/

1ரீரே/ கல/ த்4ரு2த/ கலாபே/
மேனியளே/ பிறை/ யணியும்/ மதியே (மதி நிகர் அழகியே)/

ஸுருசிர/ மணி கண்ட2/ லஸத்/-மணி/ ஹாரே/
அழகிய/ மிடற்றினளே/ மிளிரும்/ மணி/ மாலை/

ஸுகு3ண-ஸீ1லே/ ஸததம்/ ஸமுத3ம்/
நற்பண்பினளே/ எவ்வமயமும்/ மகிழ்வுடனும்/

கருணயா/ அவ/ தீ3னம்/ பர/ தே3வதே/
கருணையுடனும்/ காப்பாய்/ (இந்த) எளியோனை/ பர/ தேவதையே/

காம/ கோடி/ பீட2/ க3தே/ லலிதே/ (ஸ்ரீ-பதி)
காம/ கோடி/ பீடத்தினில்/ உறைபவளே/ லலிதையே/


சரணம் 2
கரி/ முக2/ கார்திகேய/ ஜனனி/
ஆனை/ முகத்தோன்/ (மற்றும்) கார்த்திகேயனை/ ஈன்றவளே/

ஸ்வர/ பாலினி/ பாவனி/
(இசையின்) சுரங்களை/ பேணுபவளே/ புனிதமானவளே/

ஹரி/ ஸஹோத3ரி/ வித3ளித/
அரியின்/ சோதரியே/ அழித்தவளே/

தை3த்ய/-அரி/ க3ணே/ ஸதா3/ பூர்ணே/
தேவர்களின்/ பகைவர்/ கும்பலை/ என்றும்/ பூரணியே/

பரமேஸ1/ வினுதே/ ஸ்1ரித ஜன/ பாலிதே/
பரமேசனால்/ போற்றப்பெற்றவளே/ சார்ந்தோரை/ காப்பவளே/

ப்ரீதி:/-இஹ/ வஸது/ விமலே/
அன்பு/ இங்கு/ குடியிருக்கட்டும்/ களங்கமற்றவளே/

புர/ ஹர/ ப்ரியே/ ஸ1ஸி1/ நிப4/-ஆனனே/
புரம்/ எரித்தோனுக்கு/ இனியவளே/ மதி/ நிகர்/ முகத்தினளே/

பூர்ண/ காமே/ ஸாம/ கா3ன/ லோலே/ (ஸ்ரீ-பதி)
நிறைவேறப்பெற்றவளே/ விருப்பங்கள் யாவும்/ சாம/ கானத்தினில்/ மகிழ்பவளே/


சரணம் 3
ஸ்1யாமள/-அங்கி3/ மஞ்ஜுள/ வாணி/
கருநீல/ அங்கத்தினளே! (மேனியளே)/ இனிய/ குரலினளே/

ஸகல/ ப4ய/ நிவாரிணி/
அனைத்து/ அச்சங்களையும்/ போக்கடிப்பவளே/

ஹே/ மஹா-ஈஸ்1வரி/ மது4ப/ ஸத்3ரு21/
ஏ/ மகேசுவரீ/ தேன் வண்டு/ நிகர்/

வேணி/ காம-ஈஸ்1வரி/ கௌ3ரி/
(கருங்)குழலியே/ காமேசுவரியே/ கௌரீ/

ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸோத3ரி/ பு4வன-ஈஸ்1வரி/
சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/ புவனேசுவரியே/

ஸா1ம்ப4வி/ மஹா/ த்ரிபுர/ ஸுந்த3ரி/
சாம்பவியே/ மகா/ திரிபுர/ சுந்தரீ/

ஹிம/ கி3ரி/ குமாரி/ கவி/ குல/
இமய/ மலை/ மகளே/ கவி/ குலத்திற்கு/

காமதே3/ காங்க்ஷித/ ப2ல/ தா3யிகே/ (ஸ்ரீ-பதி)
வேண்டியதருள்பவளே/ விழைந்த/ பயன்/ அருள்பவளே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - மணி கண்ட2 - மணி க2ண்ட2 : இவ்விடத்தில், 'மணி க2ண்ட2' என்பது பொருந்தாது.

Top

மேற்கோள்கள்
1 - நீப வன நிலயே - கதம்ப வனத்தில் நிலைபெற்றவள் - லலிதா ஸஹஸ்ர நாமம் (60) - 'கத3ம்ப3 வன வாஸினி' மற்றும் ஸௌந்தர்ய லஹரி (8) - 'நீப-உபவனவதி' நோக்கவும்.

2 - நவ ரத்னாலயே - நவரத்தின இல்லத்தினில் உறைபவள் : அம்மை, சிந்தாமணி இல்லத்தில் வசிப்பதாகக் கூறப்படும். லலிதா ஸஹஸ்ர நாமம் (57) - 'சிந்தாமணி க்3ரு2ஹாந்தஸ்தா2' மற்றும் ஸௌந்தர்ய லஹரி (8) - 'சிந்தாமணி க்3ரு2ஹே' நோக்கவும்.

3 - மணி கண்ட2 லஸன்-மணி ஹாரே - மணிமாலை மிளிரும், அழகிய மிடற்றினள் - 'மணிமாலை' என்பது அட்டிகையைக் குறிக்கலாம்.

4 - காம கோடி பீட23தே - காம கோடி பீடத்தில் உறைபவள் - லலிதா ஸஹஸ்ர நாமம் (589) 'காம கோடிகா' நோக்கவும் - காம கோடி பீடம்.

Top

5 - ஸதா3 பூர்ணே - என்றும் பூரணி - இதுகுறித்து 'ஈஸா1வஸ்ய உபநிடத'ச் செய்யுள் கூறுவது -

"ஓம் அஃது பூரணமாம்; இஃது பூரணமாம்; (அந்த) பூரணத்தினின்று, (இந்த) பூரணம் தோன்றும்;
(அந்த) பூரணத்தினின்று, (இந்த) பூரணத்தினை எடுக்க, பூரணமே மிஞ்சும்."

இந்த உபநிடதச் செய்யுளைப் பற்றிய கட்டுரை நோக்கவும்.

6 - பரமேஸ1 வினுதே - பரமேசனால் போற்றப்பெற்றவள் - 'காமேசுவரன்-காமேசுவரி' அமர்ந்திருக்கும் கட்டிலின், நான்கு கால்களில், 'பரமேசனும்' ஒரு கால் எனக் கூறப்படும். லலிதா ஸஹஸ்ர நாமம் (947) 'பஞ்ச ப்ரேத மஞ்சாதி4-ஸாயினி' நோக்கவும்.

7 - காமேஸ்1வரி - காமேசுவரி - ஸ்ரீ சக்கிரத்தின், 9-வது ஆவரணமாகிய, 'ஸர்வானந்த-மய சக்கிரம்' பற்றிய விவரங்கள் நோக்கவும். 'காமேசுவரி - காமேசுவரன்' பற்றிய காஞ்சி மாமுனிவரின் விளக்கத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு நோக்கவும்.

Top

விளக்கம்
நெற்றிக் கண்ணன் - சிவன்
மணிமாலை - அட்டிகை
ஆனைமுகத்தோன் - கணபதி
கார்த்திகேயன் - முருகன்
பூரணி - பரம்பொருளின் இலக்கணம்
பரமேசன் - சிவன்
புரமெரித்தோன் - சிவன்
சியாம கிருஷ்ணன் - விஷ்ணு - பாடலாசிரியர் முத்திரை
கவிக் குலம் - கவிஞர்கள்

Top


Updated on 28 Apr 2011

3 comments:

  1. திரு கோவிந்தன் அவர்களே

    அருணன் கோடி நிகர், (சிவந்த) காந்தியுடைய மேனியளே என்றும்
    கருநீல அங்கத்தினளே! (மேனியளே) என்றும் கூறுவது முரண்பாடாக இல்லையா? சியாம கிருஷ்ணனின் சோதரி சியாமளி தானே. ‘சிவந்த’ என்பதை விட்டுவிடலாமே.

    வணக்கம்
    கோவிந்தஸ்வாமி

    ReplyDelete
  2. திரு கோவிந்தன் அவர்களே
    நான் மூனறாண்டுகளுக்கு முன் 'அருணன் கோடி நிகர், (சிவந்த) காந்தியுடைய மேனியளே என்றும்
    கருநீல அங்கத்தினளே! (மேனியளே) என்றும் கூறுவது முரண்பாடாக இல்லையா? ' என்று கேட்டிருந்தேன்.
    வணக்கம்
    கோவிந்தஸ்வாமி

    ReplyDelete
    Replies
    1. திரு கோவிந்தஸ்வாமி அவர்களே,

      மேனி நிறம் வேறு, மேனியினின்று வெளிப்படும் காந்தி (ஒளி) வேறு. ஆகாயம் நீல நிறம். ஆனால் அதில் ஒளிரும் சூரியன் வேறு நிறம். இதில் முரண்பாடெதுவும் நான் காணவில்லை.

      வணக்கம்,
      கோவிந்தன்.

      Delete