Monday, April 25, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ஜனனி நத ஜன - ராகம் ஸாவேரி - Janani Nata Jana - Raga Saveri

பல்லவி
ஜனனி நத ஜன பரிபாலினி
பாஹி மாம் 14வானி த்ரி-லோக (ஜனனி)

அனுபல்லவி
3னுஜ வைரி நுதே ஸகல ஜன
பரிதாப பாப 2ஹாரிணி ஜய-ஸா1லினி (ஜனனி)

சரணம்
சரணம் 1
3ஸதத வினுத ஸுத க3ண பதி
ஸேனானி ராஜ ரா(ஜே)ஸ்1வரி
4விஸா1(லா)க்ஷ தருணி அகி2ல ஜன
பாவனி (ஸ்ரீ ராஜ ராஜேஸ்1வரி)
5ஸதி ஸு14 சரிதே ஸதா3 6மது4
பா4ஷா
7விக3ள(த3)ம்ரு2 ரஸ த்4வனி
8ஸுர நுத பத3 யுக33ர்ஸி1த இஹ மம
9கா3த்ர(ம)தி-மாத்ர(ம)ஜனி ஸுஜனி (ஜனனி)


சரணம் 2
குவலய லோசன யுக3ளே
கல்யாணி நீல வேணி விகச
கோகனத3 ரஜச்-சரணே அதி
ரமணி (க4ன நீல வேணி)
பு4வி தி3வி 10ரக்ஷணி த்4ரு2(தா)மர க3ணே
பா4க்3யவதி ஸ1க்தி ஸம்பூர்ணே
கவன நிபுண மதிம் 11அயி தி31 இஹ 12தவ
காந்தி(மு)பயாதும்
கி3(ரீ)ஸ1 ரமணி (ஜனனி)


சரணம் 3
சரண நிபத(த3)மர ஸமுத3யே
காளி ஸாரஸ முகி2
13ஸு-ஸோ1பி4(தோ)ரு யுக3 வர
கத3லி (நவ ஸாரஸ முகி2)
ஸுருசிர 14முரளீ ம்ரு23ங்க3 ஸ்வர
ஸம்ஸோ1பி4னி
15ரஸ-க்ரு2த மஹீ தலே
ஸரஸிஜ கர யுக3ளே 16கடி கலித மணி
காஞ்சீ ப்4ரு2தே
காஞ்சீபுர வாஸினி (ஜனனி)


பொருள் - சுருக்கம்
  • ஈன்றவளே! பணிந்தோரைப் பேணுபவளே! பவானீ! மூவுலகை ஈன்றவளே!
  • அசுரர் பகைவரால் போற்றப்பெற்றவளே! அனைத்து மக்களின் பரிதாபங்களையும், பாவங்களையும் போக்கடிப்பவளே! வெற்றித்திருமகளே!
  • எவ்வமயமும், மைந்தர்கள், கணபதி மற்றும் முருகன் போற்றும், ராஜ ராஜேசுவரீ! அகன்ற கண்களுடைய, மங்கையே! உலக மக்களைப் புனிதமாக்குபவளே! ஸ்ரீ ராஜ ராஜேசுவரீ! சதீ! நற்சரிதத்தினளே! எவ்வமயமும், அமுதச் சாறு ஊறும் குரலுடைய, இன்-சொல்லினளே! பிறவாதவளே! நற்றாயே!
  • கமலக் கண் இணையினளே! கலியாணீ! கருங்குழலியே! அலர்ந்த, செந்தாமரையின் மகரந்தம் நிகர், (செந்) திருவடியினளே! மிக்கு எழிலியே! கார்முகில் நிகர், கருங்குழலியே! புவியையும் வானுலகையும் காப்பவளே! அமரர்களை ஆதரிப்பவளே! பாக்கியவதீ! வல்லமை முழுமையாக உடையவளே! அம்மா! மலையீசனை மகிழ்விப்பவளே!
  • அமரர் குழுமத்தினர் தெண்டனிடும் திருவடியினளே! காளீ! தாமரை வதனத்தினளே! வாழைத் தண்டு நிகர், துலங்கும், புனித, துடை இணையினளே! அன்றலர்ந்த, தாமரை வதனத்தினளே! இனிய, குழல் மற்றும் மிருதங்க சுரங்களில் திகழ்பவளே! புவிமீதினில், சாரம் உண்டாக்கியவளே! கமலக் கை இணையினளே! சலங்கைகள் பொருந்திய, இரத்தின மேகலைத் திகழும், இடுப்பினளே! காஞ்சீபுரத்தினிலுறைபவளே!

  • காப்பாயென்னை.

    • வானோர் போற்றும், திருவடி இணையினை தரிசித்து, இங்கு, எனது உடல், மிக்கு பூரிப்படைந்தது.
    • உனது பேரொளியினை அணுகுதற்கு, கவித்திறமை மிக்க அறிவினை, இங்கு தருவாய்.


  • காப்பாயென்னை.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஜனனி/ நத ஜன/ பரிபாலினி/
ஈன்றவளே/ பணிந்தோரை/ பேணுபவளே/

பாஹி/ மாம்/ ப4வானி/ த்ரி-லோக/ (ஜனனி)
காப்பாய்/ என்னை/ பவானீ/ மூவுலகை/ (ஈன்றவளே)


அனுபல்லவி
3னுஜ/ வைரி/ நுதே/ ஸகல/ ஜன/
அசுரர்/ பகைவரால்/ போற்றப்பெற்றவளே/ அனைத்து/ மக்களின்/

பரிதாப/ பாப/ ஹாரிணி/ ஜய-ஸா1லினி/ (ஜனனி)
பரிதாபங்களையும்/ பாவங்களையும்/ போக்கடிப்பவளே/ வெற்றித்திருமகளே/


சரணம்
சரணம் 1
ஸதத/ வினுத/ ஸுத/ க3ண பதி/
எவ்வமயமும்/ போற்றும்/ மைந்தர்கள்/ கணபதி/ மற்றும்/

ஸேனானி/ ராஜ/ ராஜ-ஈஸ்1வரி/
முருகன்/ ராஜ/ ராஜேசுவரீ/

விஸா1ல/-அக்ஷ/ தருணி/ அகி2ல/ ஜன/
அகன்ற/ கண்களுடைய/ மங்கையே/ உலக/ மக்களை/

பாவனி/ (ஸ்ரீ/ ராஜ/ ராஜேஸ்1வரி/)
புனிதமாக்குபவளே/ ஸ்ரீ/ ராஜ/ ராஜேசுவரீ/

ஸதி/ ஸு14/ சரிதே/ ஸதா3/
சதீ/ நற்/ சரிதத்தினளே/ எவ்வமயமும்/

மது4ர/ பா4ஷா/ விக3ளத்3/-அம்ரு2த/ ரஸ/ த்4வனி/
இன்/-சொல்லினளே/ ஊறும்/ அமுத/ சாறு/ குரலுடைய/

ஸுர/ நுத/ பத3/ யுக3/ த3ர்ஸி1த/ இஹ/ மம/
வானோர்/ போற்றும்/ திருவடி/ இணையினை/ தரிசித்து/ இங்கு/ எனது/

கா3த்ரம்/-அதி/-மாத்ரம்/-அஜனி/ ஸுஜனி/ (ஜனனி)
உடல்/ மிக்கு/ பூரிப்படைந்தது/ பிறவாதவளே/ நற்றாயே/


சரணம் 2
குவலய/ லோசன/ யுக3ளே/
கமல/ கண்/ இணையினளே/

கல்யாணி/ நீல/ வேணி/ விகச/
கலியாணீ/ கருங்/ குழலியே/ அலர்ந்த/

கோகனத3/ ரஜஸ்/-சரணே/ அதி/
செந்தாமரையின்/ மகரந்தம் (நிகர்)/ (செந்) திருவடியினளே/ மிக்கு/

ரமணி/ (க4ன/ நீல/ வேணி/)
எழிலியே/ கார்முகில் (நிகர்)/ கருங்/ குழலியே/

பு4வி/ தி3வி/ ரக்ஷணி/ த்4ரு2த/-அமர க3ணே/
புவியையும்/ வானுலகையும்/ காப்பவளே/ ஆதரிப்பவளே/ அமரர்களை/

பா4க்3யவதி/ ஸ1க்தி/ ஸம்பூர்ணே/
பாக்கியவதீ/ வல்லமை/ முழுமையாக உடையவளே/

கவன/ நிபுண/ மதிம்/ அயி/ தி31/ இஹ/ தவ/
கவி/ திறமை மிக்க/ அறிவினை/ அம்மா/ தருவாய்/ இங்கு/ உனது/

காந்திம்/-உபயாதும்/ கி3ரி/-ஈஸ1/ ரமணி/ (ஜனனி)
பேரொளியினை/ அணுகுதற்கு/ மலை/ யீசனை/ மகிழ்விப்பவளே/


சரணம் 3
சரண/ நிபதத்3/-அமர/ ஸமுத3யே/
திருவடியினளே/ தெண்டனிடும்/ அமரர்/ குழுமத்தினர்/

காளி/ ஸாரஸ/ முகி2/
காளீ/ தாமரை/ வதனத்தினளே/

ஸு-ஸோ1பி4த/-ஊரு/ யுக3ள/ வர/
துலங்கும்/ துடை/ இணையினளே/ புனித/

கத3லி/ (நவ/ ஸாரஸ/ முகி2/)
வாழைத் தண்டு/ நிகர்/ அன்றலர்ந்த/ தாமரை/ வதனத்தினளே/

ஸுருசிர/ முரளீ/ ம்ரு23ங்க3/ ஸ்வர/
இனிய/ குழல்/ (மற்றும்) மிருதங்க/ சுரங்களில்/

ஸம்ஸோ1பி4னி/ ரஸ/-க்ரு2த/ மஹீ/ தலே/
திகழ்பவளே/ சாரம்/ உண்டாக்கியவளே/ புவி/ மீதினில்/

ஸரஸிஜ/ கர/ யுக3ளே/ கடி/ கலித/ மணி/
கமல/ கை/ இணையினளே/ இடுப்பினளே/ திகழும்/ இரத்தின/

காஞ்சீ/ ப்4ரு2தே/ காஞ்சீபுர/ வாஸினி/ (ஜனனி)
சலங்கைகள் மேகலை/ பொருந்திய/ காஞ்சீபுரத்தினில்/ உறைபவளே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - 4வானி த்ரி-லோக - ப4வானி ப4வானி ப4வானி த்ரி-லோக - ப4வானி ப4வானி ப4வானி லோக.

2 - ஹாரிணி - ஹரிணி.

3 - ஸதத வினுத - ஸதத வினத.

4 - விஸா1லாக்ஷ தருணி - விஸா1ல தருணி : பிற்கூறியது இவ்விடத்தில் பொருந்தாது.

5 - ஸதி ஸு14 சரிதே - ஸதி நுத சரிதே : பிற்கூறியது இவ்விடத்தில் பொருந்தாது.

Top

6 - மது4ர பா4ஷா - மது4ர (பா4ஷிணி அம்பா3) பா4ஷா.

7 - விக3ளத3ம்ரு2 - விக3ளதம்ரு2த.

8 - ஸுர நுத பத3 யுக33ர்ஸி1த இஹ மம - ஸுத நுத வஸுபத3 விகஸித இஹ மம : பிற்கூறியதற்கு பொருளேதும் இ்ல்லை. எனவே அது தவறாகும்.

8 - பத3 யுக33ர்ஸி1 - பத3 யுக33ரிஸி1த : 'த3ரிஸி1த' என்பது தவறு என்று கருதுகின்றேன்.

9 - கா3த்ரமதி-மாத்ரமஜனி ஸுஜனி - கா3த்ரமதி-மாத்ரமாஜனி ஸுஜனி : 'மாத்ரமாஜனி' என்பது தவறாகும்.

10 - ரக்ஷணி - ரக்ஷிணி.

Top

மேற்கோள்கள்
5 - ஸதி - சதி - தட்சன் மகள்.

12 - தவ காந்திமுபயாதும் - உன்னுடைய பேரொளியினை அணுகுதற்கு - சியாமா ஸாஸ்திரி, மற்ற கீர்த்தனைகளில், அம்மையை, 'பரஞ்சோதி' என்று குறிப்பிடுகின்றார். லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (806), அம்மை இப்பெயரால் அழைக்கப்படுகின்றாள். இது குறித்து, கடோபநிடதத்தில் கூறப்பட்டது -

"அங்கு சூரியன் ஒளிர்வதில்லை; சந்திரன், தாரைகளும் கூட;
இந்த மின்னல்களும் ஒளிர்வதில்லை; இந்த நெருப்பும் எங்கே?
அஃதொன்றே ஒளிர, மற்று யாவையும் ஒளி பெருகின்றன;
அதன் ஒளியினால், இவை யாவும் ஒளிர்கின்றன." (2.2.15)
(ஸ்வாமி கம்பீராநந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.)

Top

13 - ஸு-ஸோ1பி4தோரு யுக3 - துலங்கும், புனித, துடை இணையினளே! - லலிதா ஸஹஸ்ர நாத்தில் (39) கூறப்பட்டது - 'காமேஸ1 ஞாத ஸௌபா4க்3ய மார்த3வோரு த்3வயான்விதா'.

16 - கடி கலித மணி காஞ்சீ ப்4ரு2தே - சலங்கைகள் பொருந்திய, இரத்தின மேகலை திகழும், இடுப்பினளே! - இது குறித்து காஞ்சி மாமுனிவரின் 'ஸௌந்தர்ய லஹரி' உரை (21) நோக்கவும். "சிலம்புகள் பொருந்திய மேகலை, 'காஞ்சி' எனப்படும்".

Top

விளக்கம்
மூன்று சரணங்களிலும், முறையே, '(ஸ்ரீ ராஜ ராஜேஸ்1வரி)', '(க4ன நீல வேணி)', '(நவ ஸாரஸ முகி2)' ஆகியவை bracket-களில் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

4 - விஸா1லாக்ஷ தருணி - அகன்ற கண்களுடைய மங்கை. புத்தகங்களில் இதற்கு, 'சிவனின் மனைவி' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இங்கு, 'சிவன்' என்று பொருள் கொள்ளும்படி எந்த சொல்லும் இல்லை.

11 - அயி - அம்மா - நமக்கு மிகவும் பிரியமான பெண்டிரை - தாய், சகோதரி, பெண் குழந்தை - ஆகியோரை விளிக்கும் முறை. லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (427), அம்மை 'அயீ' என்ற பெயரால் அழைக்கப்படுகின்றாள்.

Top

14 - முரளீ ம்ரு23ங்க3 ஸ்வர ஸம்ஸோ1பி4னி - இனிய, குழல் மற்றும் மிருதங்க சுரங்களில் திகழ்பவளே! : அம்மை நாத வடிவத்தினள். அந்த நாதத்தின் வழிபாடு (நாதோபாசனை) அம்மையின் வழிபாடாகும். 'சுரம்' என்பது 'குழலோசை' மற்றும் 'மிருதங்கத்தின் ஒலி' - இரண்டுக்கும் பொதுவான சொல்லாகும்.

15 - ரஸ-க்ரு2த மஹீ தலே - சாரம் உண்டாக்கியவள் - கவி பாரதி, தனது 'எத்தனை கோடி இன்பம் வைத்தாய்' என்ற கவிதையில் 'சித்தினை அசித்துடன் இணைத்தாய்; அங்கு சேரும் ஐம்பூதத்து வியனுலகமைத்தாய்' என்று கூறுகின்றார். இறையெனும் சாரமின்றி, ஐம்பூதங்களும் ஜடமே.
'ரசம்' என்பதற்கு, 'நவரசம்' என்றும் பொருள் கொள்ளலாம்.

இந்த கிருதியில் பாடலாசிரியரின் முத்திரை 'சியாம கிருஷ்ண' காணப்படவில்லை.

அசுரர் பகைவர் - வானோர்
மலையீசன் - சிவன்

Top


Updated on 25 Apr 2011

2 comments:

  1. அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
    அனுபல்லவியில் த3னுஜ/ வைரி/ நுதே என்பதற்கு அசுரர்/ பகைவரால்/ போற்றப்பெற்றவளே என்று பொருள் கொடுத்துள்ளீர். வைரி ஒருமை அல்லவா.
    வணக்கம்,
    கோவிந்தஸ்வாமி

    ReplyDelete
    Replies
    1. திரு கோவிந்தஸ்வாமி அவர்களுக்கு,

      எனக்குத் தெரிந்த வரையில், வைரின் என்றாலே ஒருமையாகும். வைரி எனபது ஒருமைக்கும் பன்மைக்கும் பொருந்தும்.

      வணக்கம்
      கோவிந்தன்.

      Delete