Wednesday, April 13, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - தருணமிதம்மா - ராகம் கௌளிபந்து - Tarunam Idamma - Raga Gaulipantu

பல்லவி
1தருணமிதம்மா என்னை ரக்ஷிக்க

அனுபல்லவி
கருணா நிதி4யாகிய காமாக்ஷி ரக்ஷிக்க (தருணம்)

சரணம்
சரணம் 1
அனுதினமும் எந்தன் வாக்கில் உன்-நாமம்
அதுவல்லால் 2மற்றொன்றுமில்லையே என்-நேமம்
மனக் கவலையைத் தீர்க்க 3மறு தெய்வம்-
எனக்குண்டோ உன்னைப் பார்க்க இரங்கிக் கண்-பார்க்க
(தருணம்)


சரணம் 2
ஆதி ஸ1க்தியென்று பேரெடுத்தாயே
அகிலமும் வர்தி4க்க அவதரித்தாயே
சாதகம் போலுன்னை 41ரணம் புகுந்தேனென்னை-
ஆதரிக்கப் பின்னை யாருண்டு சொல்லன்னையே (தருணம்)


சரணம் 3
காமித பலத்தைக் கை-மேல் தருவாயே
கண்-பார்த்து ரக்ஷிப்பதெப்போதும் நீயே
சோம ஸே1கரர் பாதி சுந்தரீ கௌமாரீ
5ஸ்1யாம க்ருஷ்ணன் சோதரீ ஸை1ல ராஜ குமாரீ (தருணம்)


பொருள் - சுருக்கம்
  • அம்மா!
  • கருணைக் கடலாகிய, காமாட்சி!
  • பிறை யணிவோனின் பாதியே! சுந்தரீ! கௌமாரீ! சியாம க்ருஷ்ணன் சோதரீ! மலை யரசன் மகளே!

    • தருணமிது, என்னைக் காக்க.

    • அனுதினமும், எந்தன் வாக்கில், உன் நாமம்; அதுவல்லால், மற்றொன்றுமில்லையே, என் நேமம்;
    • மனக் கவலையைத் தீர்க்க, மறு தெய்வம் எனக்குண்டோ, உன்னைப் பார்க்கிலும்?

    • ஆதி சக்தியென்று பேரெடுத்தாயே!
    • அகிலமும் செழிக்க அவதரித்தாயே!
    • சாதகம் போலுன்னை, சரணம் புகுந்தேன்;
    • என்னை ஆதரிக்கப் பின்னை யாருண்டு, சொல்லன்னையே?

    • விரும்பிய பயனைக் கை மேல் தருவாயே!
    • கண் பார்த்துக் காப்பதெப்போதும் நீயே!


  • இரங்கிக் கண் பார்க்கத் தருணமிது.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தருணம்/-இது/-அம்மா/ என்னை/ ரக்ஷிக்க/
தருணம்/ இது/ அம்மா/ என்னை/ காக்க/


அனுபல்லவி
கருணா/ நிதி/-ஆகிய/ காமாக்ஷி/ ரக்ஷிக்க/ (தருணம்)
கருணை/ கடல்/ ஆகிய/ காமாட்சி/ காக்க/ (தருணம்)


சரணம்
சரணம் 1
அனுதினமும்/ எந்தன்/ வாக்கில்/ உன்/-நாமம்/
அனுதினமும்/ எந்தன்/ வாக்கில்/ உன்/ நாமம்/

அது/-அல்லால்/ மற்று/-ஒன்றும்/-இல்லையே/ என்/-நேமம்/
அது/ அல்லால்/ மற்று/ ஒன்றும்/ இல்லையே/ என்/ நேமம்/

மனக்/-கவலையைத்/-தீர்க்க/ மறு/ தெய்வம்/-
மன/ கவலையை/ தீர்க்க/ மறு/ தெய்வம்/

எனக்கு/-உண்டோ/ உன்னைப்/-பார்க்க/ இரங்கிக்/-கண்/-பார்க்க/ (தருணம்)
எனக்கு/ உண்டோ/ உன்னை/ பார்க்கிலும்/ இரங்கி/ கண்/ பார்க்க/ (தருணம்)


சரணம் 2
ஆதி/ ஸ1க்தி/-என்று/ பேர்/-எடுத்தாயே/
ஆதி/ சக்தி/ என்று/ பேர்/ எடுத்தாயே/

அகிலமும்/ வர்தி4க்க/ அவதரித்தாயே/
அகிலமும்/ செழிக்க/ அவதரித்தாயே/

சாதகம்/ போல்/-உன்னை/ ஸ1ரணம்/ புகுந்தேன்/-என்னை/-
சாதகம்/ போல்/ உன்னை/ சரணம்/ புகுந்தேன்/ என்னை/

ஆதரிக்கப்/-பின்னை/ யார்/-உண்டு/ சொல்/-அன்னையே/ (தருணம்)
ஆதரிக்க/ பின்னை/ யார்/ உண்டு/ சொல்/ அன்னையே/


சரணம் 3
காமித/ பலத்தைக்/-கை/-மேல்/ தருவாயே/
விரும்பிய/ பயனை/ கை/ மேல்/ தருவாயே/

கண்/-பார்த்து/ ரக்ஷிப்பது/-எப்போதும்/ நீயே/
கண்/ பார்த்து/ காப்பது/ எப்போதும்/ நீயே/

சோம/ ஸே1கரர்/ பாதி/ சுந்தரீ/ கௌமாரீ/
பிறை/ யணிவோனின்/ பாதியே/ சுந்தரீ/ கௌமாரீ/

ஸ்1யாம/ க்ருஷ்ணன்/ சோதரீ/ ஸை1ல/ ராஜ/ குமாரீ/ (தருணம்)
சியாம/ க்ருஷ்ணன்/ சோதரீ/ மலை/ யரசன்/ மகளே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - தருணமிதம்மா - தருணமீதம்மா.

2 - மற்றொன்றுமில்லையே - மற்றொன்றில்லையே.

3 - மறு தெய்வம்-எனக்குண்டோ உன்னைப் பார்க்க இரங்கிக் கண்-பார்க்க - மறு தெய்வம் உன்னைப் பார்க்க எனக்குண்டோ உனக்கேற்க இரங்கி உன்-கண்-பார்க்க : 'உனக்கேற்க இரங்கி உன்-கண்-பார்க்க' என்பது சரியெனப்படவில்லை.

4 - 1ரணம் புகுந்தேன் - ஸ1ரணம் என்றேன்.

5 - ஸ்1யாம க்ருஷ்ணன் - ஸ்1யாம க்ருஷ்ண.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
சாதகம் - மழை நீரை மட்டுமே உண்ணும் பறவை
சியாம க்ருஷ்ணன் - விஷ்ணு - பாடலாசிரியர் முத்திரை
மலை யரசன் - இமய மலை

Top


Updated on 13 Apr 2011

2 comments:

  1. திரு கோவிந்தன் அவர்களே

    “'உனக்கேற்க இரங்கி உன்-கண்-பார்க்க' என்பது சரியெனப்படவில்லை” என்று கூறியுள்ளீர். உன் ஆற்றலுக்குத் தக்கவாறு இரங்கி உன்-கண்-பார்க்க' தருணம் இது என்று பொருள் கொள்ளலாமே.


    வணக்கம்
    கோவிந்தஸ்வாமி

    ReplyDelete
  2. திரு கோவிந்தஸ்வாமி அவர்களே,

    'இரங்கி, உன் கண்பார்க்க' என்பது பல்லவியுடன் இணைக்கப்படவேண்டும். எனவே, 'உனக்கேற்க' என்பதனை, முன்வரும், 'மறு தெய்வம் எனக்குண்டோ' என்பதுடன் இணைப்பதா, அல்லது, 'இரங்கி உன் கண்பார்க்க' என்பதுடன் இணைப்பதா? 'உனக்கேற்க இரங்கி, உன் கண்பார்க்க' என்று பல்லவியுடன் இணைப்பது பொருளற்றதாகும். 'உனக்கேற்க' என்பதனை 'மறு தெய்வம் எனக்குண்டோ' என்பதுடன் இணைத்தால், பொருள் நிறைவுறவில்லை. இந்த முரண்பாடுகளினால்தான், 'உனக்கேற்க' என்பது சரியென்று படவில்லை என்று கூறினேன்.

    வணக்கம்,
    கோவிந்தன்

    ReplyDelete