Monday, April 18, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - த்ரி-லோக மாதா - ராகம் பரஜு - Tri-loka Mata - Raga Paraju

பல்லவி
1த்ரி-லோக மாதா நன்னு ப்3ரோவு கருணனு
தி3ன-தி3ன(மி)கனு ப்3ரோவுமு அம்பா3

அனுபல்லவி
விலோகிம்புமு 2ஸத3ய நன்னு சல்லனி
வீக்ஷிஞ்சி 3க்ஷணமுன காமாக்ஷி (த்ரி-லோக)

சரணம்
சரணம் 1
4நின்னு நம்மி(யு)ண்ட33 ஸ்1ரம-பட3 வலெனா
5நே(னெ)ந்து3 கா3 தி3க்கு நின்னு வினா
4னமுகா3 கோரிகல கோரி கோரி(யே)மி
கா3னக 6கி2ன்னுட3(னை)தி4ன்யு ஜேஸி (த்ரி-லோக)


சரணம் 2
ஜபமு(லெ)ருக3னு தபமு(லெ)ருக3னு
7சபல சித்துட3னு ஸததமு க்ரு2பகு
பாத்ரு(ட3)னு வேடெ33னு நினு
கீர்திஞ்சி எட்லைன நீ பி3ட்33(ய)னி
(த்ரி-லோக)


சரணம் 3
மருவக நினு நே மதி3 தலசக3னு
மன்னிஞ்சி வெரவகு(ம)ன ராதா3
81ர(ண)னே ஸுஜனுல பாலி 9கல்ப வல்லீ
1ங்கரீ 10ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரீ (த்ரி-லோக)


பொருள் - சுருக்கம்
 • மூவுலகத் தாயே! அம்மா!
 • காமாட்சீ!
 • சரணம் எனும், நல்லோர்களின் கற்பகக் கொடியே! சங்கரீ! சியாம கிருஷ்ணனின் சோதரீ!

 • என்னைக் காப்பாய், கருணையுடன்.
 • தினந்தினமும், இனி காப்பாய்,

  • தயையுடன் நோக்குவாயம்மா.
  • என்னை, குளுமையாகக் கண்டு,

 • நொடியாகிலும், என்னைக் காப்பாய், கருணையுடன்

  • உன்னை நம்பியிருக்க, சிரமப் படவேண்டுமா?
  • நானெங்கும் காணேன், புகல் உன்னையன்றி.
  • பேரூக்கத்துடன், கோரிக்கைகளைக் கோரி கோரி, ஏதும் காணாது, நொந்தவனாகினேன்.

 • பேறுடைத்தோனாக்கி, என்னைக் காப்பாய், கருணையுடன்.

  • ஜபங்களறியேன், தவங்களறியேன்.
  • சபல சித்தத்தினன்.
  • எவ்வமயமும், கிருபைக்குத் தக்கவனென, வேண்டினேன், உன்னைப் புகழ்ந்து.

 • எவ்விதமாகிலும், உனது குழந்தையென, என்னைக் காப்பாய், கருணையுடன்.

  • மறவாது, உன்னை நான் மனத்தினில் நினைக்க, மன்னித்து, 'அஞ்சேல்' எனலாகாதா?

 • என்னைக் காப்பாய், கருணையுடன்.பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
த்ரி/-லோக/ மாதா/ நன்னு/ ப்3ரோவு/ கருணனு/
மூன்று/ உலக/ தாயே/ என்னை/ காப்பாய்/ கருணையுடன்/

தி3ன-தி3னமு/-இகனு/ ப்3ரோவுமு/ அம்பா3/
தினந்தினமும்/ இனி/ காப்பாய்/ அம்மா/


அனுபல்லவி
விலோகிம்புமு/ ஸத3ய/ நன்னு/ சல்லனி/
நோக்குவாயம்மா/ தயையுடன்/ என்னை/ குளுமையாக/

வீக்ஷிஞ்சி/ க்ஷணமுன/ காமாக்ஷி/ (த்ரி-லோக)
கண்டு/ நொடியாகிலும்/ காமாட்சீ/ (மூவுலக)


சரணம்
சரணம் 1
நின்னு/ நம்மி/-உண்ட33/ ஸ்1ரம/-பட3/ வலெனா/
உன்னை/ நம்பி/ யிருக்க/ சிரம/ பட/ வேண்டுமா/

நேனு/-எந்து3/ கா3ன/ தி3க்கு/ நின்னு/ வினா/
நான்/ எங்கும்/ காணேன்/ புகல்/ உன்னை/ யன்றி/

4னமுகா3/ கோரிகல/ கோரி/ கோரி/-ஏமி/
பேரூக்கத்துடன்/ கோரிக்கைகளை/ கோரி/ கோரி/ ஏதும்/

கா3னக/ கி2ன்னுட3னு/-ஐதி/ த4ன்யு/ ஜேஸி/ (த்ரி-லோக)
காணாது/ நொந்தவன்/ ஆகினேன்/ பேறுடைத்தோன்/ ஆக்கி/ (மூவுலக)


சரணம் 2
ஜபமுலு/-எருக3னு/ தபமுலு/-எருக3னு/
ஜபங்கள்/ அறியேன்/ தவங்கள்/ அறியேன்/

சபல/ சித்துட3னு/ ஸததமு/ க்ரு2பகு/
சபல/ சித்தத்தினன்/ எவ்வமயமும்/ கிருபைக்கு/

பாத்ருடு3/-அனு/ வேடெ33னு/ நினு/
தக்கவன்/ என/ வேண்டினேன்/ உன்னை/

கீர்திஞ்சி/ எட்லைன/ நீ/ பி3ட்33/-அனி/ (த்ரி-லோக)
புகழ்ந்து/ எவ்விதமாகிலும்/ உனது/ குழந்தை/ யென/ (மூவுலக)


சரணம் 3
மருவக/ நினு/ நே/ மதி3/ தலசக3னு/
மறவாது/ உன்னை/ நான்/ மனத்தினில்/ நினைக்க/

மன்னிஞ்சி/ வெரவகுமு/-அன/ ராதா3/
மன்னித்து/ 'அஞ்சேல்'/ எனல்/ ஆகாதா/

1ரணு/-அனே/ ஸுஜனுல பாலி/ கல்ப/ வல்லீ/
சரணம்/ எனும்/ நல்லோர்களின்/ கற்பக/ கொடியே/

1ங்கரீ/ ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸோத3ரீ/ (த்ரி-லோக)
சங்கரீ/ சியாம/ கிருஷ்ணனின்/ சோதரீ/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - ஸத3ய நன்னு சல்லனி - ஸத3ய நனு சல்லனி.

3 - க்ஷணமுன - நொடியில் - எல்லா புத்தகங்களிலும் 'க்ஷணமுன' என்றே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், 'நொடியாகிலும்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அந்தப் பொருளே இவ்விடத்தில் பொருந்தும். எனவே 'க்ஷணமைன' என்றிருக்க வேண்டும் என்று நான் கருதுகின்றேன்.

4 - நின்னு நம்மியுண்ட33 - நினு நம்மியுண்ட33.

5 - நேனெந்து3 கா3 - நேனெந்தி3 கா3ன : 'நேனெந்தி3 கா3ன' என்பது தவறாகும்.

6 - கி2ன்னுட3னைதி - கி2ன்னட3னைதி - கி2ன்னுடை3தி : 'கி2ன்னட3னைதி' என்பது தவறாகும்.

Top

7 - சபல சித்துட3னு ஸததமு க்ரு2பகு பாத்ருட3னு வேடெ33னு நினு கீர்திஞ்சி எட்லைன நீ பி3ட்33யனி - சாபல்ய சித்துட3னி ஸந்ததமு க்ரு2பகு பாத்ருட3னுசு வேத்3யுட3னி நனு வீக்ஷிஞ்சகிட்லாயெ நீ பி3ட்33யனி : பிற்கூறியது மிக்குப் பிழையாகும்.

8 - 1ரணனே - ஸ1ரணமே : 'ஸ1ரணமே' என்பது இவ்விடத்தில் பொருந்தாது.

9 - கல்ப வல்லீ - கல்ப வல்லி.

10 - ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரீ - ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரி.

Top

மேற்கோள்கள்
1 - த்ரி-லோக - மூவுலகம் - வானுலகம், புவி, கீழுலகம்.

Top

விளக்கம்
9 - கல்ப வல்லீ - கற்பகக் கொடி - விரும்பியதருளும் கற்ப தருவின் கொடி.

Top


Updated on 18 Apr 2011

2 comments:

 1. அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
  அனுபல்லவி - சல்லனி வீக்ஷிஞ்சி என்பதற்கு குளுமையாக கண்டு என்று பொருளானால் சல்லக3 தானே சரி;

  க்ஷணமுன - நொடியில் - எல்லா புத்தகங்களிலும் 'க்ஷணமுன' என்றே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், 'நொடியாகிலும்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அந்தப் பொருளே இவ்விடத்தில் பொருந்தும்.

  நொடியாகிலும் என்பது தவறு என்று நான் கருதுகிறேன். ஸ்யாமா ஸாஸ்த்ரி
  என்னை ஒரு நொடிப் பொழுது மட்டும் காப்பாறினால் போதும் என்றா வேண்டுகிறார். என்னை நொடியில் (உடனே) காப்பாற்று என்பது தான் சரி.

  வணக்கம்,
  கோவிந்தஸ்வாமி

  ReplyDelete
  Replies
  1. திரு கோவிந்தஸ்வாமி அவர்களே,

   சல்லனி என்றுதான் எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இது சல்லக3 என்றிருந்தால் பொருந்தும்.

   க்ஷணமுன . நொடிப்பொழுதில் என்று பொருள் கொண்டால் அம்மைக்கு உத்தரவு போட்டது போலாகும். அது பொருந்தாது. கடவுளின் கருணைக்கு நாம்தான் காத்திருக்க வேண்டும். எனவே க்ஷணமைன என்ற பொருளே பொருந்தும்.

   வணக்கம்.
   கோவிந்தன்

   Delete