Friday, May 13, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ஓ ஜக33ம்பா3 - ராகம் ஆனந்த பைரவி - O Jagadamba - Raga Ananda Bhairavi

பல்லவி
1ஓ ஜக3(த3)ம்பா3 2நனு (அம்பா3) நீவு
ஜவமுன ப்3ரோவு அம்பா3

அனுபல்லவி
ஈ ஜக3தி 33தியௌ ஜனுலகு மரி
தேஜமுன ராஜ வினுதயௌ
ராஜ முகீ2 ஸரோஜ நயன ஸுகு3
ராஜ ராஜித காமாக்ஷி (ஓ ஜக33ம்பா3)

சரணம்
சரணம் 1
கன்ன தல்லி நாது3 செந்த(னி)ந்த
கன்னட3 ஸலுபக3 தகு3னா
நின்னு நே நம்மி(யு)ன்ன வாடு33தா3
நன்(னொ)கனி ப்3ரோசுட(க)ருதா3
அன்னி பு4வனம்பு3லு கா3சேவு
ப்ரஸன்ன மூர்தி அன்ன பூர்ண வரதா3
வின்னபம்பு3 4வின்னவிஞ்சி ஸன்னிதி4
விபன்ன ப4ய விமோசன தௌ4ரேய (ஓ ஜக33ம்பா3)


சரணம் 2
ஜால(மே)ல ஸை1ல பா3ல தாள
ஜாலனு ஜனனீ நின்னு வினா
பால(னா)ர்த2முக3 வேரே தை3வமுல
லோல மதியை நம்மிதினா
5நீல நு(தா) 6ஸீ1லமு நே(னெ)ச்சட(னை)ன
கா3ன கா3ன லோல ஹ்ரு23யா
நீல கண்ட2 ராணி நின்னு நம்மிதினி
நிஜம்பு333லிகேதி33ய சேஸி (ஓ ஜக33ம்பா3)


சரணம் 3
7சஞ்ச(லா)த்முட3னு(யே)மி பூர்வ
ஸஞ்சிதமுல ஸலிபிதினோ
கஞ்சி காமாக்ஷீ நேனு நின்னு
பொட3கா3ஞ்சிதினி ஸ1ரணு ஸ1ரணு
நீ(வி)ஞ்சு(கா) சஞ்சல க3தி நா
தெ3ஸ(னுஞ்சவ)ம்மா ஸ்1யாம க்ரு2ஷ்ண வினுதா
மஞ்சி கீர்தி(னி)ச்சு(ன)ட்டி தே3வீ
மன்னிஞ்சி நா(த3)பராத4முல ஸஹிஞ்சி (ஓ ஜக33ம்பா3)


ஸ்வர ஸாஹித்ய
வர ஸித கி3ரி நிலயுனி ப்ரிய ப்ரணயினி
பரா ஸ1க்தி மனவினி வினுமா
மரியாத3(லெ)ருக3னி து3ஷ்-ப்ரபு4
கோரி வினுதிம்பக3 8வரம்(பொ3)ஸகி3 (ஓ ஜக33ம்பா3)


பொருள் - சுருக்கம்
  • ஓ பல்லுலகத் தாயே! அம்பையே!
  • மதி முகத்தினளே! கமலக் கண்ணியே! நற்பண்பினளே! பிறை திகழும், காமாட்சீ!
  • ஈன்ற தாயே! இனிமையான உருவ, அன்ன பூரணியே! வரமருள்பவளே! மெலிந்தோரின் அச்சத்தினைப் போக்குவதில் தலைசிறந்தவளே!
  • மலை மகளே! ஈன்றவளே! இசையில் களிக்கும் உள்ளத்தினளே! நீல மிடற்றோனின் ராணியே!
  • காஞ்சி காமாட்சீ! சியாம கிருஷ்ணனால் போற்றப்பெற்றவளே! நற்புகழ் தரக்கூடிய தேவியே!
  • உயர், வெள்ளிமலை உறைவோனின், இனிய இல்லாளே! பரா சக்தீ!

  • என்னை, நீ விரைவினில், காப்பாயம்மா.

    • இவ்வுலகில், மக்களுக்குப் புகலாம் நீ. மேலும்,
    • சிறக்க, மன்னர்களால் போற்றப்பெற்றவள் நீ.

    • என்னிடம், இத்தனை புறக்கணிப்பு செய்யத் தகுமா?
    • உன்னை நான் நம்பியுள்ளவனன்றோ?
    • என்னொருவனைக் காப்பதற்கு, அரிதா? அனைத்து புவனங்களையும் காக்கின்றனையே!

  • உனது சன்னிதியில், நான் செய்த, விண்ணப்பத்தினைச் செவிமடுத்து, காப்பாயம்மா.

    • தாமதம் ஏன்? பொறுக்க இயலேன்.
    • உன்னையன்றி, பேணுவதற்காக, வேறு தெய்வங்களை, உறுதியற்ற உள்ளத்தினனாகி, நம்பினேனா?
    • நீலன் போற்றும், அந்த சீலத்தினை, நான் எங்காகிலும் காணேன்.
    • உன்னை நம்பினேன்.

  • உண்மையாக உரைக்கின்றேன். தயவு செய்து, காப்பாயம்மா.

    • நிலையற்ற உள்ளத்தினன் நான்.
    • முன்னம், என்ன நல்வினை செய்தேனோ, நான், உன்னை தரிசித்தேன்.
    • சரணம், சரணம்.
    • நீ சற்றே, அந்த அலையும் பார்வையினை, எனது திசையில் திருப்புவாயம்மா.

  • மன்னித்து, எனது குற்றங்களைப் பொறுத்து, காப்பாயம்மா.

    • வேண்டுகோளைக் கேளாயம்மா.

  • மரியாதைகளறியா, தீய, செல்வந்தர்களைக் கோரி, அவர்களைப் போற்றாது, வரமளித்து, காப்பாயம்மா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஓ/ ஜக3த்/-அம்பா3/ நனு/ (அம்பா3)/ நீவு/
ஓ/ பல்லுலக/ தாயே/ என்னை/ (அம்பையே)/ நீ/

ஜவமுன/ ப்3ரோவு/ அம்பா3/
விரைவினில்/ காப்பாயம்மா/ அம்பையே/


அனுபல்லவி
ஈ/ ஜக3தி/ க3தியௌ/ ஜனுலகு/ மரி/
இந்த/ உலகில்/ புகலாம் நீ/ மக்களுக்கு/ மேலும்/

தேஜமுன/ ராஜ/ வினுதயௌ/
சிறக்க/ மன்னர்களால்/ போற்றப்பெற்றவள் நீ/

ராஜ/ முகீ2/ ஸரோஜ/ நயன/ ஸுகு3ண/
மதி/ முகத்தினளே/ கமல/ கண்ணியே/ நற்பண்பினளே/

ராஜ/ ராஜித/ காமாக்ஷி/ (ஓ ஜக33ம்பா3)
(மதி) பிறை/ திகழும்/ காமாட்சீ/


சரணம்
சரணம் 1
கன்ன/ தல்லி/ நாது3 செந்தனு/-இந்த/
ஈன்ற/ தாயே/ என்னிடம்/ இத்தனை/

கன்னட3/ ஸலுபக3/ தகு3னா/
புறக்கணிப்பு/ செய்ய/ தகுமா/

நின்னு/ நே/ நம்மி/-உன்ன வாடு3/ க3தா3/
உன்னை/ நான்/ நம்பி/ யுள்ளவன்/ அன்றோ/

நன்னு/-ஒகனி/ ப்3ரோசுடகு/-அருதா3/
என்/ ஒருவனை/ காப்பதற்கு/ அரிதா/

அன்னி/ பு4வனம்பு3லு/ கா3சேவு/
அனைத்து/ புவனங்களையும்/ காக்கின்றனையே/

ப்ரஸன்ன/ மூர்தி/ அன்ன/ பூர்ண/ வரதா3/
இனிமையான/ உருவ/ அன்ன/ பூரணியே/ வரமருள்பவளே/

வின்னபம்பு3/ வின்னவிஞ்சி/ ஸன்னிதி4/
(நான் செய்த) விண்ணப்பத்தினை/ செவிமடுத்து/ (உனது) சன்னிதியில்/ (காப்பாயம்மா)

விபன்ன/ ப4ய/ விமோசன/ தௌ4ரேய/ (ஓ ஜக33ம்பா3)
மெலிந்தோரின்/ அச்சத்தினை/ போக்குவதில்/ தலைசிறந்தவளே/


சரணம் 2
ஜாலமு/-ஏல/ ஸை1ல/ பா3ல/ தாள/
தாமதம்/ ஏன்/ மலை/ மகளே/ பொறுக்க/

ஜாலனு/ ஜனனீ/ நின்னு/ வினா/
இயலேன்/ ஈன்றவளே/ உன்னை/ யன்றி/

பாலன-அர்த2முக3/ வேரே/ தை3வமுல/
பேணுவதற்காக/ வேறு/ தெய்வங்களை/

லோல/ மதியை/ நம்மிதினா/
உறுதியற்ற/ உள்ளத்தினனாகி/ நம்பினேனா/

நீல/ நுத/-ஆ/ ஸீ1லமு/ நேனு/-எச்சடனு/-ஐன/
நீலன்/ போற்றும்/ அந்த/ சீலத்தினை/ நான்/ எங்கு/ ஆகிலும்/

கா3ன/ கா3ன/ லோல/ ஹ்ரு23யா/
காணேன்/ இசையில்/ களிக்கும்/ உள்ளத்தினளே/

நீல/ கண்ட2/ ராணி/ நின்னு/ நம்மிதினி/
நீல/ மிடற்றோனின்/ ராணியே/ உன்னை/ நம்பினேன்/

நிஜம்பு33/ ப3லிகேதி3/ த3ய/ சேஸி/ (ஓ ஜக33ம்பா3)
உண்மையாக/ உரைக்கின்றேன்/ தயவு/ செய்து/ (காப்பாயம்மா)


சரணம் 3
சஞ்சல/-ஆத்முட3னு/-ஏமி/ பூர்வ/
நிலையற்ற/ உள்ளத்தினன் நான்/ என்ன/ முன்னம்/

ஸஞ்சிதமுல/ ஸலிபிதினோ/
நல்வினை/ செய்தேனோ/

கஞ்சி/ காமாக்ஷீ/ நேனு/ நின்னு/
காஞ்சி/ காமாட்சீ/ நான்/ உன்னை/

பொட3கா3ஞ்சிதினி/ ஸ1ரணு/ ஸ1ரணு/
தரிசித்தேன்/ சரணம்/ சரணம்/

நீவு/-இஞ்சுக/-ஆ/ சஞ்சல க3தி/ நா/
நீ/ சற்றே/ அந்த/ அலையும்/ (பார்வையினை), எனது/

தெ3ஸனு/-உஞ்சு/-அம்மா/ ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ வினுதா/
திசையில்/ திருப்புவாய்/ அம்மா/ சியாம/ கிருஷ்ணனால்/ போற்றப்பெற்றவளே/

மஞ்சி/ கீர்தினி/-இச்சுனு/-அட்டி/ தே3வீ/
நற்/ புகழ்/ தர/ கூடிய/ தேவியே/

மன்னிஞ்சி/ நாது3/-அபராத4முல/ ஸஹிஞ்சி/ (ஓ ஜக33ம்பா3)
மன்னித்து/ எனது/ குற்றங்களை/ பொறுத்து/ (காப்பாயம்மா)


ஸ்வர ஸாஹித்ய
வர/ ஸித/ கி3ரி/ நிலயுனி/ ப்ரிய/ ப்ரணயினி/
உயர்/ (வெண்) வெள்ளி/ மலை/ உறைவோனின்/ இனிய/ இல்லாளே/

பரா/ ஸ1க்தி/ மனவினி/ வினுமா/
பரா/ சக்தீ/ வேண்டுகோளை/ கேளாயம்மா/

மரியாத3லு/-எருக3னி/ து3ஷ்/-ப்ரபு4ல/
மரியாதைகள்/ அறியா/ தீய/ செல்வந்தர்களை/

கோரி/ வினுதிம்பக3/ வரம்பு3/-ஒஸகி3/ (ஓ ஜக33ம்பா3)
கோரி/ (அவர்களை) போற்றாது/ வரம்/ அளித்து/ (காப்பாயம்மா)


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஓ ஜக33ம்பா3 - ஓ ஜக33ம்ப3 : இவ்விடத்தில், 'ஜக33ம்பா3' என்பதே பொருந்தும்.

2 - நனு - நன்னு.

3 - 3தியௌ - க3தியை.

4 - வின்னவிஞ்சி - வின்னபிஞ்சி.

6 - ஸீ1லமு நேனெச்சடனைன - ஸீ1லமுனெச்சடனைன.

7 - சஞ்சலாத்முட3னுயேமி - சஞ்சலாத்முடே3னுயேமி : இவ்விடத்தில், பிற்கூறியது தவறென்று கருதுகின்றேன்.

8 - வரம்பொ3ஸகி3 - வரம்பொ3ஸகு3.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
5 - நீல நுத - புத்தகங்களில், 'நீல' என்ற சொல்லுக்கு, 'சிவன்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. சிவனுக்கு, அத்தகைய பெயர் ஏதும் உண்டாயென்று தெரியவில்லை. வேறு எந்த பொருளும் இங்கு பொருந்தாதனால், அங்ஙனமே இங்கும் ஏற்கப்பட்டது.

நீல மிடற்றோன் - சிவன்
வெள்ளிமலை - இமயம்
வெள்ளிமலை உறைவோன் - சிவன்

Top


Updated on 12 May 2011

2 comments:

  1. திரு கோவிந்தன் அவர்களே

    சரணம் 1- கன்னட3- கன்னெட3 என்பது சரியா ?

    சரணம் 2 - நிஜம்பு3க3/ ப3லிகேதி3- பலிகிதி என்று இருக்கவேண்டுமா?

    ஸ்வர ஸாஹித்ய - வினுதிம்பக3- என்பதற்கு, போற்றாது என்று பொருள் கொடுத்துள்ளீர். போற்றாதிருக்க என்பது இன்னும் தெளிவாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

    வணக்கம்
    கோவிந்தஸ்வாமி

    ReplyDelete
  2. திரு கோவிந்தசாமி அவர்களே,

    'கன்னட3' என்பதுதான் சரியான சொல்லாகும். தெலுங்கு அகராதி நோக்கவும்.

    'நிஜம்பு3க3 ப3லிகேதி3' என்பதனை 'ப3லிகேதி3 நிஜம்பு3க3' என்று கொண்டால் 'உரைப்பது உண்மையன்றோ' என்று பொருள்படும். அதனை, நான், 'உண்மையாக உரைக்கின்றேன்' என்று கொடுத்துள்ளேன். நீங்கள் கூறிய வேறுபாடு எந்த புத்தகத்திலும் காணப்படவில்லை.

    'வினுதிம்பக3' என்பதற்கு, 'போற்றாது' என்றுதான் பொருள் கொள்ள இயலும். அதற்கு, நீங்கள் கூறியபடி, 'போற்றாதிருக்க' அல்லது 'போற்றச் செய்யாது' என்று பொருள்படும். கவிதையில் வரும் சொற்களுக்கு, கூடியவரையில், அப்படியே பொருள் கூறி, தேவையானால் விளக்குவதுதான் முறையென்று நான் கருதுகின்றேன். இவ்விடத்தில், 'போற்றாது' என்பதற்கு அதிக விளக்கம் தேவையில்லை என்று நான் கருதுகின்றேன்.

    வணக்கம்.
    கோவிந்தன்.

    ReplyDelete