Friday, June 3, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - நின்னு வினா மரி - ராகம் ரீதிகௌ3ள - ஆபே4ரி - Ninnu Vina Mari - Ritigaula - Abheri Raga

பல்லவி
1நின்னு வினா மரி க3லதா33தி லோகமுலோ
நிரஞ்ஜனி நிகி2ல ஜனனி ம்ரு2டா3னி 24வானி அம்ப3 (நின்னு)

அனுபல்லவி
பன்னக3 பூ4ஷணுனி ராணி பார்வதி 3ஜனனி அம்ப3
4பராகு ஸேயக3 ராது3 வினு ஸ்ரீ ப்3ரு2ஹ(த3)ம்ப3 வினுமு (நின்னு)

சரணம்
சரணம் 1
5பாமரு(ன)ம்மா3ய சேஸி 6வர(மீ)(ய)ம்மா மா(ய)ம்மா
பாப(மெ)ல்ல பரிஹரிஞ்சி பி3ரான ப்3ரோசுடகு (நின்னு)


சரணம் 2
ஸாரமு லேனி ப4வ ஜலதி4 தகு3லுகொனி
சால வேஸாரிதினி நா விசாரமு தீ3ர்சுடகு (நின்னு)


சரணம் 3
நா 7மதி3லோ அம்ப3 நீவே க3தி(ய)னி 8நம்மிதி
ஸ்1யாம க்ரு2ஷ்ண நுதா ப4க்த 9பரிபாலனமு ஸேயுடகு (நின்னு)


பொருள் - சுருக்கம்
  • களங்கமற்றவளே! அனைத்துலகை ஈன்றவளே! மிருடானீ! பவானீ! அம்பா!
  • அரவணிவோனின் ராணீ! பார்வதீ! ஈன்றவளே! அம்பா! ஸ்ரீ பிருஹதம்பா!
  • எமதம்மா!
  • அம்பா! சியாம கிருஷ்ணனால் போற்றப்பெற்றவளே!

  • உன்னையன்றி, பிற உளதா, கதி, உலகத்தினில்?

    • கேளம்மா.
    • பராக்கு செய்யலாகாது.
    • தயை செய்து, வரமருளம்மா.

    • நான் அறிவிலியம்மா.
    • சாரமற்ற, பிறவிக் கடலில் சிக்கிக்கொண்டு, மிக்குத் துயருற்றேன்.
    • எனது உள்ளத்தினில், நீயே கதியென நம்பினேன்.

    • பாவமெல்லாம் போக்கடித்து, விரைவாகக் காப்பதற்கு,
    • எனது கவலையைத் தீர்க்க,
    • தொண்டரைப் பேணுதற்கு,

  • உன்னையன்றி, பிற உளதா, கதி, உலகத்தினில்?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நின்னு/ வினா/ மரி/ க3லதா3/ க3தி/ லோகமுலோ/
உன்னை/ யன்றி/ பிற/ உளதா/ கதி/ உலகத்தினில்/

நிரஞ்ஜனி/ நிகி2ல/ ஜனனி/ ம்ரு2டா3னி/ ப4வானி/ அம்ப3/ (நின்னு)
களங்கமற்றவளே/ அனைத்துலகை/ ஈன்றவளே/ மிருடானீ/ பவானீ/ அம்பா/


அனுபல்லவி
பன்னக3/ பூ4ஷணுனி/ ராணி/ பார்வதி/ ஜனனி/ அம்ப3/
அரவு/ அணிவோனின்/ ராணீ/ பார்வதீ/ ஈன்றவளே/ அம்பா/

பராகு/ ஸேயக3 ராது3/ வினு/ ஸ்ரீ/ ப்3ரு2ஹத்-அம்ப3/ வினுமு/ (நின்னு)
பராக்கு/ செய்யலாகாது/ கேளாய்/ ஸ்ரீ/ பிருஹதம்பா/ கேளம்மா/


சரணம்
சரணம் 1
பாமரு/-அம்மா/ த3ய/ சேஸி/ வரமு/-ஈ/-அம்மா/ மா/-அம்மா/
நான்/ அறிவிலி/ யம்மா/ தயை/ செய்து/ வரம்/ அருள்/ அம்மா/ எமது/ அம்மா/

பாபமு/-எல்ல/ பரிஹரிஞ்சி/ பி3ரான/ ப்3ரோசுடகு/ (நின்னு)
பாவம்/ எல்லாம்/ போக்கடித்து/ விரைவாக/ காப்பதற்கு/ (உன்னயன்றி)


சரணம் 2
ஸாரமு/ லேனி/ ப4வ/ ஜலதி4/ தகு3லுகொனி/
சாரம்/ அற்ற/ பிறவி/ கடலில்/ சிக்கிக்கொண்டு/

சால/ வேஸாரிதினி/ நா/ விசாரமு/ தீ3ர்சுடகு/ (நின்னு)
மிக்கு/ துயருற்றேன்/ எனது/ கவலையை/ தீர்க்க/ (உன்னயன்றி)


சரணம் 3
நா/ மதி3லோ/ அம்ப3/ நீவே/ க3தி/-அனி/ நம்மிதி/
எனது/ உள்ளத்தினில்/ அம்பா/ நீயே/ கதி/ யென/ நம்பினேன்/

ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ நுதா/ ப4க்த/ பரிபாலனமு ஸேயுடகு/ (நின்னு)
சியாம/ கிருஷ்ணனால்/ போற்றப்பெற்றவளே/ தொண்டரை/ பேணுதற்கு/ (உன்னயன்றி)


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நின்னு வினா - நினு வினா.

1 - 3லதா33தி லோகமுலோ - க3லதா3 லோகமுலோ.

2 - 4வானி அம்ப3 - ப4வானி.

3 - ஜனனி அம்ப3 - லலித.

4 - பராகு ஸேயக3 ராது3 - பராகு ஸேய ராதி3கனு : சில புத்தகங்களில், 'பராகு ஸேயக ராது3' என்று கொடுக்கப்பட்டுள்ளது. 'ஸேயக' என்பது எதிர்மறையான பொருளைக் கொடுப்பதனால், அது தவறாகும். 'ஸேயக3' என்பதே சரியான வடிவாகும்.

4 - வினு ஸ்ரீ ப்3ரு2ஹத3ம்ப3 - ஸ்ரீ ப்3ரு2ஹத3ம்ப3.

Top

4 - வினுமு - வினுமா.

5 - பாமருனம்மா - பாமருட3ம்மா.

6 - வரமீயம்மா மாயம்மா - வரமிம்ம.

7 - மதி3லோ அம்ப3 - மதி3லோ.

8 - நம்மிதி - நம்மிதினி.

9 - பரிபாலனமு ஸேயுடகு - பரிபாலனா நனு ப்3ரோசுடகு.

Top

மேற்கோள்கள்
4 - ஸ்ரீ ப்3ரு2ஹத3ம்ப3 - ஸ்ரீ பிருஹதம்பா - பெரிய நாயகி - தஞ்சாவூரில் அம்மையின் பெயர்

Top

விளக்கம்
சில புத்தகங்களில், இப்பாடலின் ராகம், 'ஆபே4ரி' என்று கொடுக்கப்பட்டுள்ளது.

மிருடானீ - மிருடன் (சிவன்) மனைவி
அரவணிவோன் - சிவன்

Top


Updated on 04 Jun 2011

1 comment:

  1. Comment posted by Sri Govindaswami thru email -

    திரு கோவிந்தன் அவர்களே



    வேறுபாடு - வினு ஸ்ரீ ப்3ரு2ஹத3ம்ப3 - ஸ்ரீ ப்3ரு2ஹத3ம்ப3- வினுமா என்று மறுபடியும் வருவதால் ஸ்ரீ ப்3ரு2ஹத3ம்ப3 தான் சரி என்று எண்ணுகிறேன்.

    வணக்கம்

    கோவிந்தசாமி

    ReplyDelete