Saturday, June 11, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - காமாக்ஷி நீ பத3 - ராகம் யதுகுல காம்போஜி - Kamakshi Ni Pada - Raga Yadukula Kambhoji - Svara Jati

பல்லவி
காமாக்ஷி நீ 1பத3 யுக3மு ஸ்தி2ர(ம)னி
நே நம்மி(யு)ன்னானு நா சிந்த(லெ)ல்லனு தீ3ர்(ச)ம்மா

ஸ்வர ஸாஹித்ய
ஸ்வர ஸாஹித்ய 1
2அம்ப3 நனு ப்3ரோவ ஸமயமு
வினுமா பதித பாவனிகா3 (காமாக்ஷி)


ஸ்வர ஸாஹித்ய 2
அனுதி3னமு 31ரண(ம)னி நினு
4வேடு3கொனி(யு)ன்ன ஸுது(ட3)ம்மா ஸத3ய (காமாக்ஷி)


ஸ்வர ஸாஹித்ய 3
ஸரஸி(ஜா)ஸன ஹ(ரீ)ஸ1 வினுத பாதா3
நாதோ வாதா3 (காமாக்ஷி)


ஸ்வர ஸாஹித்ய 4
கமல த3ள ஸம நயன
கச ஜித க4னா ஸ114ர நிப4 வத3ன (காமாக்ஷி)


ஸ்வர ஸாஹித்ய 5
மானவதீ நினு ஸதா33லசின
மானவுல(கெ)ல்ல ப2ல(மொ)ஸகே3
பி3ருது33ல தே3வத(ய)னி நே
வினப3டி3 நீவே க3தி(ய)னுசு (காமாக்ஷி)


ஸ்வர ஸாஹித்ய 6
பாவனீ புர ஹருனி ரமணீ
பார்வதீ ஸகல ஜனனீ
பாதகமுலனு வடி3கா3 தீ3ர்சி
வர(மொ)ஸகு3மு (காமாக்ஷி)


ஸ்வர ஸாஹித்ய 7
5கனக கி3ரி ஸத3 நினு கொ3லிசின
ஜனமுலகு தி3னதி3னமு ஸு14(மொ)ஸகே3(வ)னி
ஸ்1ருதுலு மொர(லி)ட3கா3 மொரலு வினி வினி வினி (காமாக்ஷி)


ஸ்வர ஸாஹித்ய 8
பா3ல கிஸலய சரணா நிமிஷமு
தாள(னி)க 6வினு மத33ஜ க3மன
தாமஸமு ஸேயகனே நன்(னி)புடு3
ப்3ரோவுமு 7பராத்பரீ (காமாக்ஷி)


ஸ்வர ஸாஹித்ய 9
குந்த3 முகுள ரதா3 ஸுர
ப்3ரு2ந்த3 வினுத பதா3 பு4விலோ
வர தா3யகி க3தா3 நா மொரலு
8செவுலகு வினதா3 கி3ரி ஸுதா (காமாக்ஷி)


ஸ்வர ஸாஹித்ய 10
நீ வலெனே க3லதா3 நெர தா3தவு ஈ ஜக3திலோ
நீது3 9பத3 ஸாரஸமுல ஈ ப4
ஜலதி4கி தரி(ய)னுசு மிகு3ல (காமாக்ஷி)


ஸ்வர ஸாஹித்ய 11
கமல ஸம்ப4வ ஸுர மு(னீ)ந்த்3ருல
சேதனு நினு 10பொக3டு3டகு தர(மா)ம்மா
ஸு14(மி)ம்மா நினு நம்மிதினி ஸ்1யாம
க்ரு2ஷ்ண ஸோத3ரீ து3ரமுக3னு
கருண ஸலுபு(மி)கனு (காமாக்ஷி)


பொருள் - சுருக்கம்
  • காமாட்சீ!
  • அம்பையே!
  • கருணையுடையவளே!
  • மலரோன், அரி, ஈசன் போற்றும் திருவடியினளே!
  • தாமரை யிதழ் நிகர் கண்களினளே! குழல் வெல்லுமே கார்முகிலினை! முயலேந்துவோன் நிகர் வதனத்தினளே!
  • மதிக்கப்பெற்றவளே!
  • புனிதமானவளே! புரமெரித்தோனின் இல்லாளே! பார்வதீ! அனைவரையும் ஈன்றவளே!
  • பொன் மலை உறைபவளே!
  • இளம் குருத்து நிகர் திருவடியினளே! மத கரி நடையினளே! பராபரியே!
  • முல்லை மொட்டுப் பல்லினளே! தேவர்கள் போற்றும் திருவடியினளே! மலை மகளே!
  • அம்மா! சியாம கிருஷ்ணனின் சோதரியே!

  • உனது திருவடியிணை திரமென, நான் நம்பியுள்ளேன்.
  • எனது கவலைகளையெல்லாம் தீர்ப்பாயம்மா.

    • வீழ்ந்தோரைப் புனிமாக்குபவளன்றோ?
    • புவியில், வரமருள்பவள் அன்றோ?
    • உன்னைப் போன்று உண்டா, பெரும் கொடையாளி, இந்த ஜகத்தினில்?
    • கமலத்திலுதித்தோன், தேவர்கள், முனிவரிற் தலைசிறந்தோராலும் உன்னைப் போற்றுதற்கு இயலுமா?

    • கேளம்மா.
    • அனுதினமும், சரணமென, உன்னை வேண்டிக்கொண்டுள்ள மகனம்மா.
    • என்னைக் காக்கத் தருணம்.
    • என்னுடன் வாதா?
    • எனது முறையீடுகள், செவிகளுக்குக் கேளாதா?
    • நிமிடமும் தாளேனினி.

    • பாதகங்களை விரைவாகத் தீர்த்து, வரமளிப்பாயம்மா.
    • தாமதம் செய்யாது, என்னை யிப்போது காப்பாயம்மா.
    • நன்மை யருள்வாயம்மா.
    • விரைவாக, கருணை செய்வாய், இனியும்.

    • உன்னை, எவ்வமயமும், நினைத்த மனிதர்களுக்கெல்லாம், பயனருளும் விருதுடைய தேவதையென, நான் கேள்விப்பட்டு, நீயே கதியென, நான் நம்பியுள்ளேன்.
    • உன்னை சேவித்த மக்களுக்கு, தினந்தினமும், நன்மை அருள்கின்றனையென, மறைகள் முறையிட, முறைகளைக் கேட்டுக் கேட்டுக் கேட்டு, உனது திருவடியிணை திரமென, நான் நம்பியுள்ளேன்.
    • உனது திருவடித் தாமரைகள், இந்த பிறவிக் கடலுக்குத் தெப்பமென, மிக்கு நான் நம்பியுள்ளேன்.
    • உன்னை நம்பினேன்.


  • எனது கவலைகளையெல்லாம் தீர்ப்பாயம்மா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
காமாக்ஷி/ நீ/ பத3/ யுக3மு/ ஸ்தி2ரமு/-அனி/
காமாட்சீ/ உனது/ திருவடி/ யிணை/ திரம்/ என/

நே/ நம்மி/-உன்னானு/ நா சிந்தலு/-எல்லனு/ தீ3ர்சு/-அம்மா/
நான்/ நம்பி/ யுள்ளேன்/ எனது/ கவலைகளை/ யெல்லாம்/ தீர்ப்பாய்/ அம்மா/


ஸ்வர ஸாஹித்ய
ஸ்வர ஸாஹித்ய 1
அம்ப3/ நனு/ ப்3ரோவ/ ஸமயமு/
அம்பையே/ என்னை/ காக்க/ தருணம்/.

வினுமா/ பதித/ பாவனிகா3/ (காமாக்ஷி)
கேளம்மா/ வீழ்ந்தோரை/ புனிமாக்குபவளன்றோ/


ஸ்வர ஸாஹித்ய 2
அனுதி3னமு/ ஸ1ரணமு/-அனி/ நினு/
அனுதினமும்/ சரணம்/ என/ உன்னை/

வேடு3கொனி/-உன்ன/ ஸுதுடு3/-அம்மா/ ஸத3ய/ (காமாக்ஷி)
வேண்டிக்கொண்டு/ உள்ள/ மகன்/ அம்மா/ கருணையுடையவளே/


ஸ்வர ஸாஹித்ய 3
ஸரஸிஜ-ஆஸன/ ஹரி/-ஈஸ1/ வினுத/ பாதா3/
மலரோன்/ அரி/ ஈசன்/ போற்றும்/ திருவடியினளே/

நாதோ/ வாதா3/ (காமாக்ஷி)
என்னுடன்/ வாதா/


ஸ்வர ஸாஹித்ய 4
கமல/ த3ள/ ஸம/ நயன/
தாமரை/ யிதழ்/ நிகர்/ கண்களினளே/

கச/ ஜித/ க4னா/ ஸ11/ த4ர/ நிப4/ வத3ன/ (காமாக்ஷி)
குழல்/ வெல்லுமே/ கார்முகிலினை/ முயல்/ ஏந்துவோன்/ நிகர்/ வதனத்தினளே/


ஸ்வர ஸாஹித்ய 5
மானவதீ/ நினு/ ஸதா3/ த3லசின/
மதிக்கப்பெற்றவளே/ உன்னை/ எவ்வமயமும்/ நினைத்த/

மானவுலகு/-எல்ல/ ப2லமு/-ஒஸகே3/
மனிதர்களுக்கு/ எல்லாம்/ பயன்/ அருளும்/

பி3ருது3/ க3ல/ தே3வத/-அனி/ நே/
விருது/ உடைய/ தேவதை/ யென/ நான்/

வினப3டி3/ நீவே/ க3தி/-அனுசு/ (காமாக்ஷி)
கேள்விப்பட்டு/ நீயே/ கதி/ யென/ (காமாட்சீ)


ஸ்வர ஸாஹித்ய 6
பாவனீ/ புர/ ஹருனி/ ரமணீ/
புனிதமானவளே/ புரம்/ எரித்தோனின்/ இல்லாளே/

பார்வதீ/ ஸகல/ ஜனனீ/
பார்வதீ/ அனைவரையும்/ ஈன்றவளே/

பாதகமுலனு/ வடி3கா3/ தீ3ர்சி/
பாதகங்களை/ விரைவாக/ தீர்த்து/

வரமு/-ஒஸகு3மு/ (காமாக்ஷி)
வரம்/ அளிப்பாயம்மா/


ஸ்வர ஸாஹித்ய 7
கனக/ கி3ரி/ ஸத3ன/ நினு/ கொ3லிசின/
பொன்/ மலை/ உறைபவளே/ உன்னை/ சேவித்த/

ஜனமுலகு/ தி3னதி3னமு/ ஸு14மு/-ஒஸகே3வு/-அனி/
மக்களுக்கு/ தினந்தினமும்/ நன்மை/ அருள்கின்றனை/ யென/

ஸ்1ருதுலு/ மொரலு/-இட3கா3/ மொரலு/ வினி/ வினி/ வினி/ (காமாக்ஷி)
மறைகள்/ முறையிட/ முறைகளை/ கேட்டு/ கேட்டு/ கேட்டு/ (காமாட்சீ)


ஸ்வர ஸாஹித்ய 8
பா3ல/ கிஸலய/ சரணா/ நிமிஷமு/
இளம்/ குருத்து/ (நிகர்) திருவடியினளே/ நிமிடமும்/

தாளனு/-இக/ வினு/ மத3/ க3ஜ/ க3மன/
தாளேன்/ இனி/ கேளாய்/ மத/ கரி/ நடையினளே/

தாமஸமு/ ஸேயகனே/ நன்னு/-இபுடு3/
தாமதம்/ செய்யாது/ என்னை/ யிப்போது/

ப்3ரோவுமு/ பராத்பரீ/ (காமாக்ஷி)
காப்பாயம்மா/ பராபரியே/


ஸ்வர ஸாஹித்ய 9
குந்த3/ முகுள/ ரதா3/ ஸுர ப்3ரு2ந்த3/
முல்லை/ மொட்டு/ பல்லினளே/ தேவர்கள்/

வினுத/ பதா3/ பு4விலோ/
போற்றும்/ திருவடியினளே/ புவியில்/

வர/ தா3யகி/ க3தா3/ நா/ மொரலு/
வரம்/ அருள்பவள்/ அன்றோ/ எனது/ முறையீடுகள்/

செவுலகு/ வினதா3/ கி3ரி/ ஸுதா/ (காமாக்ஷி)
செவிகளுக்கு/ கேளாதா/ மலை/ மகளே/


ஸ்வர ஸாஹித்ய 10
நீ/ வலெனே/ க3லதா3/ நெர/ தா3தவு/ ஈ/ ஜக3திலோ/
உன்னை/ போன்று/ உண்டா/ பெரும்/ கொடையாளி/ இந்த/ ஜகத்தினில்/

நீது3/ பத3/ ஸாரஸமுல/ ஈ/ ப4வ/
உனது/ திருவடி/ தாமரைகள்/ இந்த/ பிறவி/

ஜலதி4கி/ தரி/-அனுசு/ மிகு3ல/ (காமாக்ஷி)
கடலுக்கு/ தெப்பம்/ என/ மிக்கு/ (காமாட்சீ)


ஸ்வர ஸாஹித்ய 11
கமல/ ஸம்ப4வ/ ஸுர/ முனி/-இந்த்3ருல சேதனு/
கமலத்தில்/ உதித்தோன்/ தேவர்கள்/ முனிவரிற்/ தலைசிறந்தோராலும்/

நினு/ பொக3டு3டகு/ தரமா/-அம்மா/
உன்னை/ போற்றுதற்கு/ இயலுமா/ அம்மா/

ஸு14மு/-இம்மா/ நினு/ நம்மிதினி/ ஸ்1யாம/
நன்மை/ யருள்வாயம்மா/ உன்னை/ நம்பினேன்/ சியாம/

க்ரு2ஷ்ண/ ஸோத3ரீ/ து3ரமுக3னு/
கிருஷ்ணனின்/ சோதரியே/ விரைவாக/

கருண/ ஸலுபுமு/-இகனு/ (காமாக்ஷி)
கருணை/ செய்வாய்/ இனியும்/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பத3 யுக3மு - பத3 யுக3மே.
2 - அம்ப3 நனு ப்3ரோவ ஸமயமு - அம்ப3 நனு ப்3ரோவ (ஜக33ம்ப3 நனு ப்3ரோவ) ஸமயமு.
3 - 1ரணமனி நினு - ஸ1ரணமனி நின்னு.
4 - வேடு3கொனியுன்ன - வேடு3கொனியுண்டே3.
6 - வினு மத33ஜ க3மன - வினி மத33ஜ க3மன : இவ்விடத்தில், 'வினு' (கேளாய்) என்பதே பொருந்தும் என்று கருதுகின்றேன்.

Top
8 - செவுலகு வினதா3 - செவுலகு வினவா : சில புத்தகங்களில், 'வினவ' என்று கொடுக்கப்பட்டுள்ளது. அது தவறாகும். இங்கு 'வினதா3' என்றோ 'வினவா' என்றோதான் இருக்கவேண்டும்.
9 - பத3 ஸாரஸமுல - பத3 ஸாரஸமுலு.
10 - பொக3டு3டகு தரமாம்மா - எல்லா புத்தகங்களிலும், 'பொக3டு3டகு தரமம்மா' என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு, 'போற்றுதற்கு இயலுமா?' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், 'பொக3டு3டகு தரமம்மா' என்பது நேர் எதிரிடையான பொருள் தருகின்றது - 'போற்ற இயலும்' என. இவ்விடத்தில், புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ள பொருள் பொருந்தும். எனவே, இந்த சொற்றொடர், 'பொக3டு3டகு தரமா' அல்லது 'பொக3டு3டகு தரமாம்மா' (பொக3டு3டகு தரமா அம்மா) என்றிருக்கவேண்டும். அங்ஙனமே இங்கு ஏற்கப்பட்டது.

Top
மேற்கோள்கள்
5 - கனக கி3ரி ஸத3 - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (775) அம்மையின் பெயர் 'மேரு நிலயா' என்பதாகும்.

7 - பராத்பரீ - பராபரீ - பரத்திற்கும் புறம்பானவள் - இங்கு, 'பரம்' என்பது கீழ்க்கண்ட 'ஈஸா1வஸ்ய உபநிடத'ச் செய்யுளில் கூறப்பெற்ற 'இஃதினை'க் குறிக்கும் -

"ஓம் அஃது பூரணமாம்; இஃது பூரணமாம்; (அந்த) பூரணத்தினின்று, (இந்த) பூரணம் தோன்றும்;
(அந்த) பூரணத்தினின்று, (இந்த) பூரணத்தினை எடுக்க, பூரணமே மிஞ்சும்."

இந்த உபநிடதச் செய்யுளைப் பற்றிய கட்டுரை நோக்கவும்.
Top
விளக்கம்
மலரோன் - பிரமன்
ஈசன் - சிவன்
முயலேந்துவோன் - மதி
புரமெரித்தோன் - சிவன்
பொன் மலை - மேரு
மறைகள் முறையிட - மறைகள் பறைசாற்ற என
கமலத்திலுதித்தோன - பிரமன்
Top


Updated on 11 Jun 2011

No comments:

Post a Comment