Tuesday, July 5, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ராவே பர்வத ராஜ - ராகம் கல்யாணி - Raave Parvata Raja - Raga Kalyani

பல்லவி
ராவே பர்வத ராஜ குமாரீ
தே3வீ நன்னு ப்3ரோசுடகு வேவேக3மே (ராவே)

அனுபல்லவி
நீவே க3தி(ய)னி நம்மி(யு)ண்டி கா3தா3
1நே மொர(லி)ட3கா3 ஜெப்(பவ)ம்மா மா தல்லி (ராவே)

சரணம்
சரணம் 1
தீ4ர குமார வந்தி3த பதா3
நீரத3 வேணீ த்ரி-லோக ஜனனி நீவு க3தா3
நார(தா3)தி3 நுத ஸு14 சரிதா
உதா3ர கு3ணவதீ ப(தா3)ப்3ஜமுலே ஸ1ர(ண)ண்டி (ராவே)


சரணம் 2
மீன லோசனீ க்ரு2ப ஜூ(ட3வ)ம்மா
தீ3ன ரக்ஷகி(ய)னி பி3ருது3 நீகு தகு3
தா3னவ ரிபு தோஷிணி புராணீ அப4
தா3ன(மீ)யவே ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரீ (ராவே)


பொருள் - சுருக்கம்
  • மலையரசன் மகளே! தேவீ!
  • எமது தாயே!
  • தீரன், முருகன் தொழும் திருவடியினளே! கார் குழலியே! நாரதர் முதலானோர் போற்றும் நற்சரிதத்தினளே! உதார குணவதியே!
  • அங்கயற் கண்ணியே! அசுரர் பகைவருக்கு மகிழ்வளிப்பவளே! பழம்பொருளே! சியாம கிருஷ்ணன் சோதரியே!

  • வாராயம்மா. என்னைக் காப்பதற்கு, வெகு விரைவாக வாராயம்மா.

    • நீயே கதியென நம்பியிருந்தேன் அன்றோ?
    • நான் முறைகளிட்டுக்கொண்டிருக்க, சொல்வாயம்மா.

    • மூவுலகினை யீன்றவள் நீயன்றோ?
    • உனது திருவடித் தாமரைகளே சரணமென்றேன்.

    • கிருபை காட்டுவாயம்மா.
    • எளியோரைக் காப்பவளெனும் விருது, உனக்குத் தகும்.
    • அபய தானம் தருவாயம்மா.


  • வாராயம்மா. என்னைக் காப்பதற்கு, வெகு விரைவாக வாராயம்மா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராவே/ பர்வத/ ராஜ/ குமாரீ/
வாராயம்மா/ மலை/ யரசன்/ மகளே/

தே3வீ/ நன்னு/ ப்3ரோசுடகு/ வேவேக3மே/ (ராவே)
தேவீ/ என்னை/ காப்பதற்கு/ வெகு விரைவாக/ (வாராயம்மா)


அனுபல்லவி
நீவே/ க3தி/-அனி/ நம்மி/-உண்டி/ கா3தா3/
நீயே/ கதி/ யென/ நம்பி/ யிருந்தேன்/ அன்றோ/

நே/ மொரலு/-இட3கா3/ ஜெப்பு/-அம்மா/ மா/ தல்லி/ (ராவே)
நான்/ முறைகள்/ இட்டுக்கொண்டிருக்க/ சொல்வாய்/ அம்மா/ எமது/ தாயே/


சரணம்
சரணம் 1
தீ4ர/ குமார/ வந்தி3த/ பதா3/
தீரன்/ முருகன்/ தொழும்/ திருவடியினளே/

நீரத3/ வேணீ/ த்ரி-லோக/ ஜனனி/ நீவு/ க3தா3/
கார்/ குழலியே/ மூவுலகினை/ யீன்றவள்/ நீ/ யன்றோ/

நாரத3/-ஆதி3/ நுத/ ஸு14/ சரிதா/
நாரதர்/ முதலானோர்/ போற்றும்/ நற்/ சரிதத்தினளே/

உதா3ர/ கு3ணவதீ/ பத3/-அப்3ஜமுலே/ ஸ1ரணு/-அண்டி/ (ராவே)
உதார/ குணவதியே/ உனது/ திருவடி/ தாமரைகளே/ சரணம்/ என்றேன்/


சரணம் 2
மீன/ லோசனீ/ க்ரு2ப/ ஜூடு3/-அம்மா/
(அம்) கயற்/ கண்ணியே/ கிருபை/ காட்டுவாய்/ அம்மா/

தீ3ன/ ரக்ஷகி/-அனி/ பி3ருது3/ நீகு/ தகு3/
எளியோரை/ காப்பவள்/ எனும்/ விருது/ உனக்கு/ தகும்/

தா3னவ/ ரிபு/ தோஷிணி/ புராணீ/ அப4ய/
அசுரர்/ பகைவருக்கு/ மகிழ்வளிப்பவளே/ பழம்பொருளே/ அபய/

தா3னமு/-ஈயவே/ ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸோத3ரீ/ (ராவே)
தானம்/ தருவாயம்மா/ சியாம/ கிருஷ்ணன்/ சோதரியே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நே மொரலிட3கா3 - எல்லா புத்தகங்களிலும், 'நா மொரலிட3கா3' என்று கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், 'நான் முறையிடவில்லையா?' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இவ்விடத்தில், 'நா' (எனது) என்பது தவறாகும். அது, 'நே' (நான்) என்றிருக்கவேண்டும். மேலும், 'நா மொரலிட3கா3' என்பதற்கு, 'எனது முறைகளிட்டுக் கொண்டிருக்க' என்று பொருளாகும். எனவே, 'நே மொரலிட3கா3' (நான் முறைகளிட்டுக் கொண்டிருக்க) என்று இங்கு ஏற்கப்பட்டது.
இவ்விடத்தில், 'நா மொரலிட3கா3' என்பதற்கு பதிலாக, 'நா மொர வினதா3' (எனது முறைகள் கேளாதோ) என்றோ, அல்லது, 'நா மொர வினவா' (எனது முறைகளைக் கேளாயோ) என்றிருந்தாலும் பொருந்தும். ஆனால், எதுகை-மோனையின்படி, இந்த வரியின் இரண்டாவது எழுத்தாக, 'வ' இருக்கவேண்டும் என்று நான் கருதுகின்றேன்.
Top

மேற்கோள்கள்

விளக்கம்
அங்கயற் கண்ணி - மதுரை மீனாட்சி
அசுரர் பகைவர் - வானோர்.
Top


Updated on 06 Jul 2011

2 comments:

  1. அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களுக்கு


    அனுபல்லவி- நான் முறைகளிட்டுக்கொண்டிருக்க, சொல்வாயம்மா- என்ன சொல்லவேண்டும் என்பது தெரியவில்லை.
    வணக்கம்
    கோவிந்தசாமி

    ReplyDelete
  2. திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

    ஸ்யாமா ஸாஸ்த்ரிகள், இச்சொற்றொடரை இலக்கணப்படியன்றி, நேருக்கு நேர் உரையாடுவது போன்று எழுதியுள்ளதாக நான் கருதுகின்றேன். என்னுடைய விளக்கத்தினையும் நோக்கவும்.

    வணக்கம்,
    கோவிந்தன்

    ReplyDelete