தல்லி நின்னு நெர நம்மினானு வினவே
அனுபல்லவி
எல்ல லோகமுல(கா)தா4ரமை(யு)ன்ன நா (தல்லி)
சரணம்
சரணம் 1
ஆதி3 ஸ1க்தி நீவு 1பராகு ஸேயகு
2ஆத3ரிஞ்சுட(கி)தி3 மஞ்சி ஸமயமு
3க3தா3 ஸரோஜ ப4(வா)ச்யுத ஸ1ம்பு4 நுத
4பதா3 நீது3 தா3(ஸா)னுதா3ஸுடே3 (தல்லி)
சரணம் 2
தே3வி நீது3 ஸரி ஸமான(மெ)வ(ர)னி
தே3வ ராஜ முனுலு 5நின்னு பொக3ட3க3
6நா வெத தீ3ர்சி பி3ரான வரா(லொ)ஸகி3
நன்னு ப்3ரோவ நீ ஜால(மே)லனே (தல்லி)
சரணம் 3
ஸ்1யாம க்ரு2ஷ்ண பரிபாலினீ ஜனனீ
7காமி(தா)ர்த2 ப்ரதா3 பங்கஜ லோசனீ
8கௌமாரீ ராணீ புராணீ 9பரா ஸ1க்தீ
10காம கோடி பீட2 வாஸினீ (தல்லி)
பொருள் - சுருக்கம்
- தாயே!
- அனைத்துலகங்களுக்கும் ஆதாரமாகவுள்ள, எனது தாயே!
- ஆதி சக்தீ! மலரோன், அச்சுதன், சம்பு போற்றும், திருவடியினளே!
- தேவீ!
- சியாம கிருஷ்ணனைப் பேணுபவளே! ஈன்றவளே! விரும்பிய பொருட்களைத் தருபவளே! பங்கயற் கண்ணீ! கௌமாரீ! ராணீ! பழம்பொருளே! பரா சக்தீ! காம கோடி பீடத்தில் உறைபவளே!
- உன்னை மிக்கு நம்பியுள்ளேன்.
- கேளாயம்மா.
- நீ பராக்கு செய்யாதே.
- ஆதரிப்பதற்கிது, நல்ல சமயம் அன்றோ?
- உனது தொண்டருக்குத் தொண்டனம்மா.
- உனது சரி சமானமெவரென, தேவர், அரசர்கள், முனிவர்கள் புகழ,
- எனது வேதனைகளைத் தீர்த்து, விரைவாக வரங்களருளி, என்னைக் காப்பதற்கு, தாமதமேனம்மா?
- நீ பராக்கு செய்யாதே.
- உன்னை மிக்கு நம்பியுள்ளேன்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தல்லி/ நின்னு/ நெர/ நம்மினானு/ வினவே/
தாயே/ உன்னை/ மிக்கு/ நம்பியுள்ளேன்/ கேளாயம்மா/
அனுபல்லவி
எல்ல/ லோகமுலகு/-ஆதா4ரமை/-உன்ன/ நா/ (தல்லி)
அனைத்து/ உலகங்களுக்கும்/ ஆதாரமாக/ வுள்ள/ எனது/ (தாயே)
சரணம்
சரணம் 1
ஆதி3/ ஸ1க்தி/ நீவு/ பராகு/ ஸேயகு/
ஆதி/ சக்தீ/ நீ/ பராக்கு/ செய்யாதே/
ஆத3ரிஞ்சுடகு/-இதி3/ மஞ்சி/ ஸமயமு/
ஆதரிப்பதற்கு/ இது/ நல்ல/ சமயம்/
க3தா3/ ஸரோஜ ப4வ/-அச்யுத/ ஸ1ம்பு4/ நுத/
அன்றோ/ மலரோன்/ அச்சுதன்/ சம்பு/ போற்றும்/
பதா3/ நீது3/ தா3ஸ/-அனுதா3ஸுடே3/ (தல்லி)
திருவடியினளே/ உனது/ தொண்டருக்கு/ தொண்டனம்மா/
சரணம் 2
தே3வி/ நீது3/ ஸரி/ ஸமானமு/-எவரு/-அனி/
தேவீ/ உனது/ சரி/ சமானம்/ எவர்/ என/
தே3வ/ ராஜ/ முனுலு/ நின்னு/ பொக3ட3க3/
தேவர்/ அரசர்கள்/ முனிவர்கள்/ புகழ/
நா/ வெத/ தீ3ர்சி/ பி3ரான/ வராலு/-ஒஸகி3/
எனது/ வேதனைகளை/ தீர்த்து/ விரைவாக/ வரங்கள்/ அருளி/
நன்னு/ ப்3ரோவ/ நீ/ ஜாலமு/-ஏலனே/ (தல்லி)
என்னை/ காப்பதற்கு/ உனது/ தாமதம்/ ஏனம்மா/
சரணம் 3
ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ பரிபாலினீ/ ஜனனீ/
சியாம/ கிருஷ்ணனை/ பேணுபவளே/ ஈன்றவளே/
காமித/-அர்த2/ ப்ரதா3/ பங்கஜ/ லோசனீ/
விரும்பிய/ பொருட்களை/ தருபவளே/ பங்கயற்/ கண்ணீ/
கௌமாரீ/ ராணீ/ புராணீ/ பரா/ ஸ1க்தீ/
கௌமாரீ/ ராணீ/ பழம்பொருளே/ பரா/ சக்தீ/
காம/ கோடி/ பீட2/ வாஸினீ/ (தல்லி)
காம/ கோடி/ பீடத்தில்/ உறைபவளே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பராகு ஸேயகு - பராகு ஸேயக.
2 - ஆத3ரிஞ்சுடகிதி3 - ஆத3ரிஞ்சுடகிதே3.
3 - க3தா3 - கா3தா3.
4 - பதா3 - பாதா3.
Top
5 - நின்னு பொக3ட3க3 - நினு பொக3ட3க3.
6 - நா வெத - நா வெத3 : இவ்விடத்தில், 'வெத3' என்பது பொருந்தாது.
7 - காமிதார்த2 ப்ரதா3 பங்கஜ லோசனீ - காமிதார்த2 ப்ரத3 கஞ்ஜ லோசனீ.
10 - காம கோடி பீட2 வாஸினீ - காம கோடி பீட2 நிவாஸினீ - காம கோடி பீடா2தி4 வாஸினீ.
Top
மேற்கோள்கள்
8 - கௌமாரீ - 'ஏழு தாய்மார்கள்' நோக்கவும்.
9 - பரா ஸ1க்தீ - லலிதா ஸஹஸ்ர நாமத்தில், அம்மைக்கு 'பரா', 'பஸ்1யந்தீ', 'மத்4யமா' மற்றும் 'வைக2ரீ' என்று பெயர்கள். இவை யாவும், உடலில், ஒலி தோன்றி, வெளிப்படுவதைக் குறிக்கும். காஞ்சி மாமுனிவரின் விளக்கவுரை (பக்கம் 30) நோக்கவும்.
10 - காம கோடி பீட2 வாஸினீ - லலிதா ஸஹஸ்ர நாமத்தில், அம்மையின் பெயர் (589) 'காம கோடிகா'. காம கோடி பீடம் நோக்கவும்.
Top
விளக்கம்
மலரோன் - பிரமன்
அச்சுதன் - அரி
சம்பு - அரன்
Top
Updated on 11 Jul 2011