Monday, June 13, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - தே3வீ மீன நேத்ரீ - ராகம் சங்கராபரணம் - Devi Meena Netri - Raga Sankarabharanam

பல்லவி
தே3வீ மீன நேத்ரீ ப்3ரோவ
ராவே 13ய சேயவே ப்3ரோவ ரா(வ)ம்மா

அனுபல்லவி
ஸேவிஞ்சே வாரி(கெ)ல்லனு
2சிந்தா மணி(யை)(யு)ன்ன ரா (தே3வீ)

சரணம்
சரணம் 1
பா3லா நீவே க3தி(ய)னி நின்னே
சாலா நம்மின நாபை
பரா(கே)லா 33ய சேயு நீ(கி)தி3
மேலா 4தி3வ்(யா)ம்பா3
5காலா தி3வி ராணீ 6ஸத்3-கு3
ஸீ1லா கீர வாணீ தே3வீ
நீல நீரத3
வேணீ த்ரிலோக
ஜனனீ தே3வீ ம(ஹே)ஸ்1வரீ ப4வானீ (தே3வீ)


சரணம் 2
அம்பா3 முக2 நிர்ஜித 71த த4
பி3ம்பா3
ரக்ஷித தே3
தா3த(வ)ம்மா நத நிஜ ஸுத கு3
ஹேரம்(பா3)ம்பா3 ஸ்1யாம(ளா)ம்பா3
பி3ம்(பா3)த4ரி கௌ3ரீ
காத3ம்ப3 விஹாரீ அம்பா3
கம்பு3 கண்டீ2 8ஹிம ஸை1ல வ்ரு2க்ஷ
பாலிகா
தே3வீ 9பா3(லா)ம்பி3கா அம்பா3 (தே3வீ)


சரணம் 3
வாணீ ரமா வந்தி3
ருத்3ராணீ நீ ஸா(டெ)வரு
கல்யாணீ ஸ்1யாம க்ரு2ஷ்ண நுதா
கீர வாணீ ஸ1ர்வாணீ
வீணா வினோதி3னீ 10ஸ்ரீ சக்ர
கோண நிவாஸினீ

கீ3ர்வாண வந்தி3த ப(தா3)ரவிந்தா3
ஸி1வா தே3வீ 11காத்யாயனீ அம்பா3 (தே3வீ)


பொருள் - சுருக்கம்
 • தேவீ! அங்கயற்கண்ணீ!
 • சேவிப்போருக்கெல்லாம், சிந்தா மணியாக உள்ள, தேவீ! அங்கயற்கண்ணீ!
 • பாலையே! திவ்விய அம்பையே! காளீ! வானோர் அரசியே! நற்பண்பு இயல்பினளே! கிளிக் குரலினளே! தேவீ! கார்முகில் நிகர் குழலியே! மூவுலகை ஈன்றவளே! தேவீ! மகேசுவரீ! பவானீ!
 • அம்பையே! வதனம் வெல்லும், மதியின் பிம்பத்தினை! சொந்தப் பிள்ளைகள், முருகன், கணபதி வணங்கும், அம்பையே! சியாமளா அம்பா! கோவையிதழினளே! கௌரீ! கதம்ப வனத்துறைபவளே! அம்பா! சங்குக் கழுத்தினளே! பனி மலை மரங்களைப் பேணுபவளே! தேவீ! பாலாம்பிகையே! அம்பா!
 • வாணியும் இலக்குமியும் தொழும், ருத்ராணியே! கல்யாணீ! சியாம கிருஷ்ணனால் போற்றப்பெற்றவளே! கிளிக் குரலினளே! சர்வாணீ! வீணை இசையில் மகிழ்பவளே! ஸ்ரீ சக்கிரத்தின் கோணத்தில் உறைபவளே! வானோர் தொழும், கமலத் திருவடியினளே! சிவையே! தேவீ! காத்தியாயனீ! அம்பா!

 • காப்பதற்கு வாராயம்மா.
 • தயை செய்வாயம்மா. காப்பதற்கு வாராயம்மா.

  • நீயே கதியென, உன்னையே, மிக்கு, நம்பிய என்மீது, பராக்கேன்?
  • தயை புரிவாய்.
  • உனக்கிது மேன்மையா?
  • வானோரைக் காத்த, கொடையாளி நீயம்மா.
  • உனக்கு நிகர் யார்?


 • காப்பதற்கு வாராயம்மா.பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தே3வீ/ மீன/ நேத்ரீ/ ப்3ரோவ/
தேவீ/ (அம்)-கயற்/ கண்ணீ/ காப்பதற்கு/

ராவே/ த3ய/ சேயவே/ ப்3ரோவ/ ரா/-அம்மா/
வாராயம்மா/ தயை/ செய்வாயம்மா/ காப்பதற்கு/ வாராய்/ அம்மா/


அனுபல்லவி
ஸேவிஞ்சே வாரிகி/-எல்லனு/
சேவிப்போருக்கு/ எல்லாம்/

சிந்தா/ மணி-ஐ/-உன்ன/ ரா/ (தே3வீ)
சிந்தா/ மணியாக/ உள்ள/ (தேவீ)


சரணம்
சரணம் 1
பா3லா/ நீவே/ க3தி/-அனி/ நின்னே/
பாலையே/ நீயே/ கதி/ யென/ உன்னையே/

சாலா/ நம்மின/ நாபை/
மிக்கு/ நம்பிய/ என்மீது/

பராகு/-ஏலா/ த3ய/ சேயு/ நீகு/-இதி3/
பராக்கு/ ஏன்/ தயை/ புரிவாய்/ உனக்கு/ இது/

மேலா/ தி3வ்ய/-அம்பா3/
மேன்மையா/ திவ்விய/ அம்பையே/

காலா/ தி3வி/ ராணீ/ ஸத்3/-கு3ண/
காளீ/ வானோர்/ அரசியே/ நற்/ பண்பு/

ஸீ1லா/ கீர/ வாணீ/ தே3வீ/
இயல்பினளே/ கிளி/ குரலினளே/ தேவீ/

நீல/ நீரத3/ வேணீ/ த்ரிலோக/
கார்/ முகில் (நிகர்)/ குழலியே/ மூவுலகை/

ஜனனீ/ தே3வீ/ மஹா-ஈஸ்1வரீ/ ப4வானீ/ (தே3வீ)
ஈன்றவளே/ தேவீ/ மகேசுவரீ/ பவானீ/


சரணம் 2
அம்பா3/ முக2/ நிர்ஜித/ ஸ1த த4ர/
அம்பையே/ வதனம்/ வெல்லும்/ மதியின்/

பி3ம்பா3/ ரக்ஷித/ தே3வ/
பிம்பத்தினை/ காத்த/ வானோரை/

தா3தவு/-அம்மா/ நத/ நிஜ/ ஸுத/ கு3ஹ/
கொடையாளி நீ/ அம்மா/ வணங்கும்/ சொந்த/ பிள்ளைகள்/ முருகன்/

ஹேரம்ப3/-அம்பா3/ ஸ்1யாமளா/-அம்பா3/
கணபதி/ அம்பையே/ சியாமளா/ அம்பா/

பி3ம்ப3/-அத4ரி/ கௌ3ரீ/
கோவை/ யிதழினளே/ கௌரீ/

காத3ம்ப3/ விஹாரீ/ அம்பா3/
கதம்ப வனத்து/ உறைபவளே/ அம்பா/

கம்பு3/ கண்டீ2/ ஹிம/ ஸை1ல/ வ்ரு2க்ஷ/
சங்கு/ கழுத்தினளே/ பனி/ மலை/ மரங்களை/

பாலிகா/ தே3வீ/ பா3லா/-அம்பி3கா/ அம்பா3/ (தே3வீ)
பேணுபவளே/ தேவீ/ பாலா/ அம்பிகையே/ அம்பா/


சரணம் 3
வாணீ/ ரமா/ வந்தி3த/
வாணியும்/ இலக்குமியும்/ தொழும்/

ருத்3ராணீ/ நீ/ ஸாடி/-எவரு/
ருத்ராணியே/ உனக்கு/ நிகர்/ யார்/

கல்யாணீ/ ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ நுதா/
கல்யாணீ/ சியாம/ கிருஷ்ணனால்/ போற்றப்பெற்றவளே/

கீர/ வாணீ/ ஸ1ர்வாணீ/
கிளி/ குரலினளே/ சர்வாணீ/

வீணா/ வினோதி3னீ/ ஸ்ரீ/ சக்ர/
வீணை இசையில்/ மகிழ்பவளே/ ஸ்ரீ/ சக்கிரத்தின்/

கோண/ நிவாஸினீ/
கோணத்தில்/ உறைபவளே/

கீ3ர்வாண/ வந்தி3த/ பத3/-அரவிந்தா3/
வானோர்/ தொழும்/ திருவடியினளே/ கமல/

ஸி1வா/ தே3வீ/ காத்யாயனீ/ அம்பா3/ (தே3வீ)
சிவையே/ தேவீ/ காத்தியாயனீ/ அம்பா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - 3ய சேயவே ப்3ரோவ ராவம்மா - த3ய சேயவே.
2 - சிந்தா மணியையுன்ன ரா - சிந்தா மணியையுன்னாரா : புத்தகங்களில் இதற்கு 'சிந்தாமணியாகவுள்ளாய்' என்று பொருள் கொள்ளப்பெற்றுள்ளது. ஆனால், கடைசியில் வரும், 'ரா' பொருளைக் குழப்புகின்றது. 'சிந்தா மணியையுன்ன' என்றோ, அல்லது 'சிந்தா மணியையுண்ட33' என்றோ இருந்தால், இதனை, பல்லவியுடன் இணைத்து, 'சிந்தாமணியாகவுள்ள தேவீ' என்று பொருள் கொள்ளலாம். அன்றி, 'சிந்தா மணியையுன்னாவு' அல்லது 'சிந்தா மணியையுன்னாவு க3தா3' என்றிருந்தால், அனுபல்லவியே 'சிந்தாமணியாகவுள்ளாய்' என்று முழுமையான பொருள் தரும். 'ரா' என்ற சொல்லுக்கு 'வா' என்று பொருளாகும். இச்சொல், இவ்விடத்தில், இந்தப் பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்காது. ஏனென்றால், அங்ஙனம் அம்மையை, 'வா'யென்று அழைப்பது ஒவ்வாது. எனவே, 'ரா' என்பது தவறென்று நான் கருதுகின்றேன். அதற்கு இங்கு பொருள் கொள்ளப்படவில்லை.
Top

3 - 3ய சேயு - த3ய சேய : இவ்விடத்தில், 'சேய' என்பது சரியாகாது.
4 - தி3வ்யாம்பா3 - இதி3 வேள.
5 - காலா தி3வி ராணீ - காலாதி3கி ராணீ : பிற்கூறிய சரியென்றால், 'காலன்' எனப்படும் 'சிவன் ஆகியோருக்கு ராணி' என்று பொருள் கொள்ளப்படும்.
6 - ஸத்3-கு3ண ஸீ1லா கீர வாணீ தே3வீ நீல நீரத3 - ஸத்3-கு3ண ஸீ1லா நீரத3.
7 - 1த த4ர பி3ம்பா3 - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. 'ஸ1த த4ர' என்பதற்கு 'மதி'யென பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அத்தகைய பெயர் எதுவும், 'மதி'க்கு இருப்பதாகத் தெரியவில்லை. இது, 'ஸ1ஸி14ர' என்றோ, அல்லது 'ஸ114ர' என்றோ இருக்கவேண்டுமென நான் கருதுகின்றேன்.
Top

மேற்கோள்கள்
5 - காலா - புத்தகங்களில், இதற்கு 'பார்வதி' யென பொருள் கொள்ளப்பட்டுள்ளது. 'காலா' என்பதற்கு 'கருமை' என்றும் பொருளாகும். லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (557) அம்மைக்கு 'கால ஹந்த்ரீ' - 'காலனை அழிப்பவள்' என்றோர் பெயராகும். அவ்வகையில், அவளே, 'காலன்' எனப்படும் 'சிவனையும் அழிக்கும் காளி'யாவாள். அங்ஙனமே இங்கு பொருள் கொள்ளப்பட்டது.

8 - ஹிம ஸை1ல வ்ரு2க்ஷ பாலிகா - பனி மலை மரங்களைப் பேணுபவள். 'ஸப்த ஸ1தீ' யெனப்படும் 'தேவி மகாத்துமிய'த்தில் (11-வது அத்தியாயம்), அம்மைக்கு, 'ஸா1கம்ப4ரீ' - ஔடதிகளைத் தரும் செடிகொடிகளைப் பேணுபவள் - என்றோர் பெயராகும்.
Top

9 - பா3லாம்பி3கா - பாலாம்பிகை - தையல் நாயகி - வைத்தீசுவரன் கோவில் எனப்படும் 'புள்ளிருக்கு வேளூரி'ல் அம்மையின் பெயர்

10 - ஸ்ரீ சக்ர கோண நிவாஸினீ - ஸ்ரீ சக்கிரம் - 'ஸ்ரீ வித்யை' எனப்படும், லலிதா மகா திரிபுர சுந்தரியின் வழிபாட்டு இயந்திரம். லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (597), அம்மைக்கு 'த்ரிகோணாந்தர தீ3பிகா' - முக்கோணத்தின் உள்விளக்கு - என்றோர் பெயராகும்.

11 - காத்யாயனீ - மதுரை, 'ஒட்டியாண பீடம்' எனப்படும். (தீட்சிதர் கிருதி 'ஸ்ரீ மது4ரா புரி விஹாரிணி' என்ற பிலஹரி ராக கீர்த்தனையினை நோக்கவும்.) 'காத்தியாயனி', அந்த ஒட்டியாண பீடத்தின், அபிமான தேவதையாகும். லலிதா ஸஹஸ்ர நாமம் (556) நோக்கவும்.
Top

விளக்கம்
அங்கயற்கண்ணி - மதுரை மீனாட்சி
சிந்தா மணி - விரும்பியதருளும் மணி.
ருத்ராணி - ருத்திரன் (சிவன்) இல்லாள்
சர்வாணீ - சர்வன் (சிவன்) இல்லாள்
Top


Updated on 13 Jun 2011

1 comment:

 1. அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
  சரணம் 2- ரக்ஷித/ தே3வ/ என்பதற்கு தேவர்களைக் காத்தாய் என்று பொருள் கொள்ளலாமா?
  வணக்கம்,
  கோவிந்தஸ்வாமி

  ReplyDelete